யோசெமிட்டி தேசியப் பூங்கா

கலிஃபோர்னியாவில் ஒரு தேசிய பூங்கா

யோசெமிட்டி தேசியப் பூங்கா (Yosemite National Park, /jˈsɛmɪtɪ/, yoh-SEM-i-tee)[4] கலிபோர்னியாவின் மேற்கு சியேரா நிவாடாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தேசியப் பூங்கா.[5][6] ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பூங்கா சேவையால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்காவின் பரப்பளவு 747,956 ஏக்கர்கள் (1,168.681 ச மை; 302,687 எக்டேர்; 3,026.87 கிமீ2).[2] 1984இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட யோசெமிட்டி உலகளவில் இங்குள்ள கருங்கல் முகடுகள், அருவிகள், தெளிந்த நீரோடைகள், மீப்பெரும் செகுவா மரவனங்கள், ஏரிகள், மலைகள்,புல்வெளிகள், பனிப்பாறைகள், மற்றும் உயிரியற் பல்வகைமைக்காக அறியப்படுகின்றது.[7] கிட்டத்தட்ட 95% பூங்காப் பகுதி அடர்காட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[8]

யோசெமிட்டி தேசியப் பூங்கா
யோசெமிட்டி பள்ளத்தாக்கின் மலையூடுக் காட்சி
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
Map showing the location of யோசெமிட்டி தேசியப் பூங்கா
அமைவிடம்துவொலும்னெ, மாரிபோசா, & மாதெரா மாவட்டங்கள், கலிபோர்னியா, ஐ.அ.
அருகாமை நகரம்மாரிபோசா, கலிபோர்னியா
ஆள்கூறுகள்37°51′N 119°33′W / 37.850°N 119.550°W / 37.850; -119.550[1]
பரப்பளவு748,036 ஏக்கர்கள் (3,027.19 km2)[2]
நிறுவப்பட்டதுஅக்டோபர் 1, 1890 (1890-10-01)
வருகையாளர்கள்4,336,890 (in 2016)[3]
நிருவாக அமைப்புதேசியப் பூங்கா சேவை
வலைத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
கட்டளை விதிஇயற்கை: vii, viii
உசாத்துணை308
பதிவு1984 (8-ஆம் அமர்வு)

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் யோசெமிட்டிக்கு வருகின்றனர்.[3] வருபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் நேரத்தை யோசெமிட்டிப் பள்ளத்தாக்கின் 5.9 சதுர மைல்கள் (15 கிமீ2) பரப்பில் கழிக்கின்றனர்.[7] 2016இல் இப்பூங்காவின் வரலாற்றில் சாதனையளவாக 5 மில்லியன் பேர் வந்துள்ளனர்.[9] தேசியப் பூங்கா குறித்த கருத்தியல் உருவாக்கத்தில் யோசெமிட்டி முக்கிய பங்கு வகித்தது. துவக்கத்தில், காலென் கிளார்க்கும் மற்றவர்களும் யோசெமிட்டியை பாதுகாக்கப் போராடினர்; இறுதியில் 1864இல் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் யோசெமிட்டி நல்கையில் ஒப்பமிட்டார். பின்னர் ஜான் முயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கை மட்டுமன்றி சுற்றியுள்ள மலைத்தொடர்களையும் வனங்களையும் உள்ளடக்கிய பெரியத் தேசியப் பூங்கா அமைக்கப் போராடினார். இதுவே ஐக்கிய அமெரிக்க தேசியப் பூங்கா அமைப்பு நிறுவப்பட வழிகோலியது.[10]

ஒளிப்படத் தொகுப்பு

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை