யோனி, இந்து சமயம்

யோனி (Yoni); தேவநாகரி:"vulva", "abode", or "source") இந்து சமயத்தில் சக்தியை வழிபடும் சாக்த சமயத்தவர்களின் சின்னமாகும்.[1][2] பொதுவாக பெண் பிறப்புறுப்பை, வட மொழியில் யோனி என்றும் அழைக்கின்றனர்.

லிங்கத்தின் சக்தி பாகமான யோனியைக் காட்டும் பகுதி
வியட்நாமில் கண்டெடுக்கப்பட்ட கருங்கல் இலிங்கம் அற்ற யோனி

சைவ சமயத்தில், சிவபெருமானின் துணைவியாக சக்தி கருதப்படுகிறார்.

யோனி மற்றும் லிங்கத்தின் ஒன்றிப்பே படைப்பு, இருப்பு, மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றின் நித்திய செயல்முறையை பிரதிபலிக்கிறது.

இந்திய இந்துச் சிற்பக் கலையில், உமிழும் கிண்ணம் (யோனி) போன்ற அமைப்பின் மீது உருளை வடிவ இலிங்கம் பொருத்தப்பட்டிருக்கும். யோனி மீதான இலிங்கத்தையே சிவ-சக்தியாக சைவர்கள் வழிபடுகின்றனர்.

யோனி மீதுள்ள இலிங்கம்

இந்தியச் சமயங்களில்

லிங்கத்துடன் கூடிய யோனி, வியட்நாம்

இந்து சமயத்தில் அனைத்துப் பிரபஞ்சங்களின் இயக்கத்திற்கும், உயினரினங்களின் படைப்பிறகும் காரணமாக யோனி, சக்தியின் பிரதிநிதியாக கருதப்படுகிறது. இந்து தத்துவத்தும் கூறும், தாந்திரீகத்தின்படி, யோனியே அனைத்து உயினக்களின் தோற்றத்திற்கு காரணமாகும்.[3]

இந்து தொன்மவியல் கூற்றின்படி, பிரபஞ்சத்தில் உள்ள 8.4 மில்லியன் யோனிகளில், மனித யோனியும் ஒன்றாகும்.

நற்கர்மம் செய்தவர்களே மனித யோனியில் பிறக்கின்றனர். பிறர் விலங்குகள், தாவரங்கள் மற்றும் இராட்சத யோனியில் பிறக்கின்றனர். பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலை பெற்றவர்களே பிறவாப்பெருநிலை அடைகிறார்கள்.[4]

யோனி வழிபாடு

அசாம் மாநிலத்தில் சூன் மாதத்தில் சாக்தர்கள், பூமியின் வளமைக்காக நான்கு நாட்கள் கொண்டாடப்பட்ம் அம்புபச்சி திருவிழாவின் போது காமாக்கியா அம்மனை யோனி வடிவத்தில் வழிபடுகின்றனர்.

கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகத்துடன் கூடிய யோனி, கிழக்கு ஜாவா, இந்தோனேசியா

தொல்லியலில்

கிமு 1600 ஆண்டுகளுக்கு முந்தைய அரப்பாமொகெஞ்சதாரோதொல்லியல் களங்களில், இலிங்கம் - யோனி வடிவச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், சிந்து வெளி நாகரீக மக்கள் இலிங்க வழிபாட்டுடன், யோனி வழிபாட்டினை மேற்கொண்டனர் என அறியப்படுகிறது.[5]

பிற பயன்பாடுகள்

யோகக் கலையின் போது, பயன்படுத்தும் யோனி முத்திரை
  • ஆரம்ப காலத்தில் தியானப் பயிற்சியின் போது, கவனச் சிதறலை தடுக்க யோனி முத்திரை பயன்படுத்தப்படுகிறது.[6]
  • கலைஞர் தாங்கள் வரைந்த பெண்மையைச் சித்தரிக்கும் ஓவியங்களில் யோனிச் சின்னத்தை பயன்படுத்துவர்.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யோனி,_இந்து_சமயம்&oldid=3886717" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை