ரெசிஃபி

ரெசிஃபி (Recife) பிரேசிலின் ஐந்தாவது மிகப்பெரிய[1] பெருநகரப் பகுதியாகும். 3,743,854 மக்கள் வாழும் இந்த பெருநகரப்பகுதி வடக்கு/வடகிழக்கில் மிகப்பெரிய ஊரகப் பகுதியாக உள்ளது. பெர்னம்பூக்கோ மாநிலத்தின் தலைநகராக விளங்குகிறது. 2012ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள்தொகை 1,555,039 ஆகும்.[2]

ரெசிஃபி
நகராட்சி
ரெசிஃபி நகராட்சி
மேல் இடதிலிருந்து: ரெசிஃபியின் தொன்மையான மையம்; ரெசிஃபியும் பாலங்களும்; போவா வியாஜெம் கடற்கரையின் வான்காட்சி; போவா வியாஜெம் கடற்கரை; படிகக் கோபுரம்; கப்பிபரிபி ஆறு; போவா வியாஜெம் அண்மித்த பகுதிகள்; அகமெனோன் மெகலீசு நிழற்சாலை; ரெசிஃபி சூரிய அஸ்தமனம்.
மேல் இடதிலிருந்து: ரெசிஃபியின் தொன்மையான மையம்; ரெசிஃபியும் பாலங்களும்; போவா வியாஜெம் கடற்கரையின் வான்காட்சி; போவா வியாஜெம் கடற்கரை; படிகக் கோபுரம்; கப்பிபரிபி ஆறு; போவா வியாஜெம் அண்மித்த பகுதிகள்; அகமெனோன் மெகலீசு நிழற்சாலை; ரெசிஃபி சூரிய அஸ்தமனம்.
ரெசிஃபி-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): வெனெசா பிரேசிலியரா (பிரேசிலிய வெனிசு), வடகிழக்கின் தலைநகரம் (டச்சு குடியேற்றத்தை அடுத்து)
குறிக்கோளுரை: இலத்தீன்: "Ut Luceat Omnibus"'
"அனைவர் மீதும் ஒளிரட்டும்" (மத்தேயு 5:15)
நாடு பிரேசில்
மண்டலம்வடகிழக்கு
நிறுவப்பட்டதுமார்ச் 12, 1537
சிற்றூராக1709
நகராட்சியாக1823
அரசு
 • மேயர்கெரால்டெ யூலியோ டெ மெல்லோ பில்ஃகொ (பிரேசிலிய சோசலிச கட்சி)
பரப்பளவு
 • நகராட்சி218 km2 (84.17 sq mi)
 • Metro2,768 km2 (1,068.7 sq mi)
ஏற்றம்10 m (33 ft)
மக்கள்தொகை (2012)
 • நகராட்சி1,555,039 (9வது)
 • அடர்த்தி7,133.2/km2 (18,537.9/sq mi)
 • பெருநகர்3,743,854(6வது)
 • பெருநகர் அடர்த்தி1,352.5/km2 (3,527/sq mi)
நேர வலயம்UTC-3 (ஒசநே-3)
அஞ்சல் குறியீடு50000-000
தொலைபேசி குறியீடு+55 81
இணையதளம்ரெசிஃபி, பெர்னாம்புகோ

பெபெரிபி ஆறும் கப்பிபரிபி ஆறும் இணைந்து அத்திலாந்திக்குப் பெருங்கடலில் சேரும் இடத்தில் ரெசிஃபி அமைந்துள்ளது. இந்நகரம் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள முதன்மையானத் துறைமுகங்களில் ஒன்றாகும். கடற்கரையை அலங்கரிக்கும் பவளப் படிப்பாறைகளைக் குறிப்பதாக இந்நகரத்தின் பெயர் அமைந்துள்ளது. பல சிற்றாறுகளும் சிறுத் தீவுகளும் 50க்கும் மேற்பட்ட பாலங்களும் இந்நகரின் சிறப்பியல்புகளாக உள்ளன. இதனால் இது "பிரேசிலிய வெனிசு" என்றழைக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டுத் தரவுகளின்படி வடகிழக்கு பிரேசிலின் தலைநகரங்களில் மிக உயர்ந்த மனித வளர்ச்சிச் சுட்டெண் கொண்டதாக விளங்குகிறது.[3]

பெர்னாம்பூக்கோ மாநிலத்தின் முதன்மை தொழில் மண்டலமாக ரெசிஃபி பெருநகர மண்டலம் விளங்குகிறது. கரும்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை, எத்தனால் ஆகியவை முதன்மைப் பொருட்களாக உள்ளன; இலத்திரனியல், உணவுப் பொருட்கள் ஏனைய பொருட்களாகும். அரசின் நிதிச் சலுகைகளை பயன்படுத்தி 1970களிலும் 1980களிலும் பல தொழிலகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.[4] தொழிலாளர் வளமும் தனியார் முதலீடுகளும் ரெசிஃபியை சாவோ பாவுலோவை அடுத்து பிரேசிலின் இரண்டாவது மிகப்பெரும் மருத்துவ மையமாக ஆக்கியுள்ளது.[5] நிகழ்காலச் சிறப்புக் கருவிகளைக் கொண்ட நவீன மருத்துவமனைகள் அருகிருக்கும் மாநிலங்களிலிருந்து சிகிச்சை பெற நோயாளிகளை ஈர்க்கின்றன.[6][7] வடகிழக்கு மண்டலத்தில் உள்ள பிற நகரங்களைப் போலவே சுற்றுலாத் துறையும் வளர்ந்து வருகிறது. ரெசிஃபியின் தெற்கே 60 கிலோமீட்டர்கள் (37 mi) தொலைவில் அமைந்துள்ள, பிரேசிலின் மிகச்சிறந்த கடற்கரையாக பலமுறை வாக்களிக்கப்பட்டுள்ள, போர்ட்டொ டெ கலினாசு கடற்கரை பல சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.[8][9]

இந்த நகரத்தில் பெர்னம்பூக்கோ மாநில கூட்டரசு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சிறந்த கல்வி மையமாக விளங்குகிறது. பிரேசிலின் சிறந்த கவிஞரும் அடிமைத்தனத்தை எதிர்ப்பவருமான காசுத்ரோ ஆல்வெசு இங்குதான் கல்வி பயின்றார்.

The city will be one of the host cities of the 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாக ரெசிஃபி உள்ளது. மேலும் 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியும் 1950 உலகக்கோப்பை காற்பந்து போட்டியும் இங்கு நடந்துள்ளன.

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரெசிஃபி&oldid=3791529" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை