வடக்குத் தீவு

வடக்குத் தீவு (North Island) அல்லது தெ இகா-அ-மாவுய் (Te Ika-a-Māui) என்பது நியூசிலாந்தில் உள்ள முக்கிய இரண்டு தீவுகளில் ஒன்றாகும். இத்தீவை விடப் பெரியதும், ஆனால் மக்கள்தொகை சிறியதுமான தெற்குத் தீவை குக் நீரிணையால் இது பிரிக்கிறது. வடக்குத் தீவின் பரப்பளவு 113,729 சதுர கிலோமீட்டர்கள் (43,911 sq mi) ஆகும்.[1] இது உலகின் 14வது பெரிய தீவு ஆகும். இங்குள்ள மக்கள்தொகை 3,422,000 (சூன் 2013) ஆகும். நியூசிலாந்தின் 77% மக்கள் இத்தீவிலேயே வாழ்கின்றனர். நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரம் ஆக்லாந்து, மற்றும் தலைநகர் வெலிங்டன் ஆகியன இங்கு அமைந்துள்ளன.

வடக்குத் தீவு
North Island
தெ இகா-அ-மாவுய் (மாவோரி)
வடக்குத் தீவின் செய்மதிப் படிமம்
புவியியல்
அமைவிடம்ஓசியானியா
ஆள்கூறுகள்38°24′S 175°43′E / 38.400°S 175.717°E / -38.400; 175.717
தீவுக்கூட்டம்நியூசிலாந்து
பரப்பளவு113,729 km2 (43,911 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை14வது
உயர்ந்த ஏற்றம்2,797 m (9,177 ft)
உயர்ந்த புள்ளிருவாப்பேகு மலை
நிர்வாகம்
நியூசிலாந்து
ISO 3166-2:NZNZ-N
மண்டலங்கள்9
பிராந்திய அதிகாரங்கள்43
பெரிய குடியிருப்புஆக்லன்ட்
வடக்குத் தீவின் நிலவரை

பல ஆண்டுகளாக இத்தீவு வடக்குத் தீவு என அழைக்கப்பட்டு வந்திருந்தாலும், தெற்குத் தீவைப் போன்று இதற்கும் அதிகாரப்பூர்வமான பெயர் இருக்கவில்லை என 2009 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் புவியியல் வாரியம் அறிந்தது.[2] பொதுக் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டு, 2013 அக்டோபரில் இதற்கு அதிகாரப்பூர்வமாக வடக்குத் தீவு (அல்லது தெ இகா-அ-மாவுய்) எனப் பெயரிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வடக்குத்_தீவு&oldid=3570576" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை