வரி

வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவணங்களிடமிருந்து பெறும் நிதி அளவீடு ஆகும். வரி அளவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அளவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அளவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. ஒன்றிய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அளவிடுவதுண்டு.

வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அளவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன.

பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அளவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன. சுங்கவரி, காணிக்கை, குத்தகைக்காரர் நிலக்கிழாருக்கு செலுத்தும் வரி, கடமை வரி, விருப்ப வரி, கலால், மானியம், அரசு உதவி வரி, மதிப்புக் கூட்டு வரி என்னும் பல்வேறு பெயர்களால் வரி வசூலிக்கப்படுகின்றது.

வரலாறு

எகிப்தில் வரி செலுத்தாததால் கைது செய்யப்பட்ட வேளையாட்கள்

முதன் முதலில் வரி விதிக்கப்பட்டது கி.பி 3000-2800 வரையிலான பண்டைய எகிப்தில் ஆகும்.[1] பொதுவாக பத்தில் ஒரு பகுதியே வரியாக விதிக்கப்பட்டது. சில இடங்களில் கூலி இல்லாமல் குறித்த நாட்களுக்கு அரசில் கட்டாய பணியமர்த்துவதும் வழக்கில் இருந்தது.[2] பார்வோன் மக்களிடம் வரி சேகரிக்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது அரசு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வழக்கமுடையவராய் இருந்ததாக ஆவண பதிவுகள் கூறுகின்றன. இத்தகைய வரிகளுக்கான அத்தார்சி சீட்டுகளும் கிடைத்துள்ளன.[3] எகிப்தியர் வரி செலுத்தும் மிகப்பழைய சான்று ஒன்று விவிலியத்திலும் உள்ளது. தொடக்க நூல் 47:24இல் நிலத்தின் விளைச்சலில் ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குச் வரி செலுத்த யோசேப்பு ஆணையிட்டதாக கூறுகின்றது.

பாரசீக பேரரசில் நெறிமுறைப்படுத்தப்பட்ட நிலையான வரி அமைப்பு கி.மு. 500இல் முதலாம் தேரியசினால் அறிமுகப்படுத்தப்பட்டது;[4] இம்முரையில் அரசு முழுவதும் பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதனதன் விளைச்சலுக்கு ஏற்றபடி வரி வசூலிக்கப்பட்டது. அரசு முழுவது மொத்தமாக 20 முதல் 30 வரையிலான பகுதிகளைக்கொண்டிருந்தது. இவ்வகை வரிகளை வசூலிக்க தனியாக ஆளுநர்கள் நியமிக்கப்படிருந்தனர். இவர்கள் வசூளித்த வரிகளில் இருந்து அப்பகுதியின் வளைமையினை நாம் அறியலாம். எடுத்துக்காட்டாக பாபேல் பகுதியே அதிகம் வரி வசூலிக்கப்பட்ட பகுதியாகும். 1000 வெள்ளி தாளந்துகளும், நான்கு மாத படையினருக்கான உணவும் வரியாக பெறப்பட்டது. இந்தியாவிலிருந்து 4680 வெள்ளி தாளந்துகள் மதிப்புள்ள தங்கமும், எகிப்திலிருந்து 700 வெள்ளி தாளந்துகளும், 120,000 அளவை தானியமும் பெறப்பட்டது.[5] இந்த வரி முற்றிலும் நிலங்களையும் அதன் உற்பத்தி திறன் மற்றும் காணிக்கை நிலைகளையும் அடிப்படையாகக்கொண்டு இப்பகுதிகளின் மீது விதிக்கப்பட்டிருந்தது.[6]

எகிப்திய எழுத்து முரையினை புரிந்து கொல்ல உதவிய ரொசெட்டாக் கல், 196 கி.பியில் ஐந்தாம் டாலமி மன்னனால் விதிக்கப்பட்ட வரிகளின் மூன்று மொழி விவரிப்பாகும்.[7] இந்தியாவில், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி ஜிஸ்யா (முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான வரி) விதித்திருந்தனர். அதனை பேரரசர் அக்பர் நீக்கினார்.

வரி அறவிடுவதன் நோக்கங்கள்

அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:

  • சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல்,
  • சொத்துக்களைப் பாதுகாத்தல்,
  • பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கிப் பேணுதல்,
  • பொது வேலைகள் (public works),
  • சமூகப் பொறியியல் (social engineering),
  • அரச செயற்பாடுகள்.

பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன:

  • கல்வி முறைமைகள்,
  • உடல்நலம் பேணல் முறைமைகள்,
  • வயோதிபர்களுக்கான ஓய்வூதியம்,
  • வேலையற்றோர் கொடுப்பனவுகள்,
  • சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள்,
  • பொதுப் போக்குவரத்து.

அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்:

  • வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல்.
  • தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
  • வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல்,
  • பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது),
  • குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.

வகைகள்

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OECD) உறுப்பினர் நாடுகளின் வரி அமைப்புகளை ஒரு பகுப்பாய்வு வெளியிடுகிறது. இத்தகைய பகுப்பாய்வின் ஒரு பகுதியாக, OECD பொதுவாக உள்ளக வரிகள்,[8] வகைப்படுத்தலின் வரையறை மற்றும் முறையை பின்வருமாறு உருவாக்கியது. கூடுதலாக, பல நாடுகளில் பொருட்கள் இறக்குமதி செய்வதுற்கு (சுங்க வரி) விதிக்கப்படுகிறது.

வருமானம்

வருமான வரி

பல சட்டவாக்கங்கள் தனிநபர்களின் வருமானம் மற்றும் பெருநிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து வருமானங்களுக்கும் வரி விதிக்கிறது. பொதுவாக, வரி, வணிக, நிகர ஆதாயங்கள், மற்றும் பிற வருவாய் ஆகியவற்றிலிருந்து நிகர லாபத்தை அடிப்படையில் வரி சுமத்துப்படுகிறது. வருமான வரிக் கணக்கிடலானது அதிகார வரம்பில் பயன்படுத்தப்படும் கணக்கியல் கொள்கைகளின் கீழ் தீர்மானிக்கப்படலாம், இது அதிகார எல்லைக்குள் வரி விதி கொள்கைகளால் மாற்றப்படலாம் அல்லது மாற்றலாம். வரிவிதிப்பு நிகழ்வு அமைப்புகளுக்கு இடையே மாறுபடும் மற்றும் சில அமைப்புகள் இடையே முற்போக்கான அல்லது பின்னடைவு ஆக காணலாம். வரி விகிதங்கள் வருமான மட்டத்தில் மாறுபடும் அல்லது நிலையானதாக இருக்கும். பல அமைப்புகள் தனி நபர்கள் சில தனிநபர் அனுகூலங்கள் மற்றும் இதர வியாபாரக் குறைப்புக்கள் வருமானம் வரி விலக்கு தருகிற்து,இருப்பினும் வணிக விலக்குகள் தனிப்பட்ட விலக்கங்களின்படி விரும்பப்படுபவை.

எதிர்மறை வருமானம்

பொருளாதாரம், ஒரு எதிர்மறை வருமான வரி (சுருக்கமாக NIT) என்பது ஒரு முற்போக்கான வருமான வரி முறையாகும், இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சம்பாதிக்கும் மக்களுக்கு அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதற்குப் பதிலாக அரசாங்கத்திலிருந்து துணை ஊதியத்தை பெறுகிறது.

முதலீட்டு வரவுகள்

வருமான வரி விதிப்பு மூலதன ஆதாயங்களை வரிவிதிப்புக்கு உட்படுத்தும் பெரும்பாலான அதிகார வரம்புகள். மூலதன ஆதாயங்கள் பொதுவாக மூலதன சொத்துக்களின் விற்பனைக்கு ஒரு ஆதாயம். அதாவது, சாதாரண வணிகத்தில் விற்பனை செய்யாத சொத்துகள். மூலதனச் சொத்துக்கள் பல அதிகார வரம்புகளில் தனிப்பட்ட சொத்துக்கள் அடங்கும். சில அதிகார வரம்புகள் வரிக்கு முன்னுரிமை விகிதங்கள் அல்லது மூலதன ஆதாயங்களுக்கு மட்டுமே பகுதியளவு வரி விதிக்கின்றன. சில அதிகார வரம்புகள், சொத்துக்களை வைத்திருக்கும் நேரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு விகிதங்கள் அல்லது மூலதன ஆதாயங்களின் வரிகளை அளிக்கும். சாதாரண வருவாயை விடக் கூடுதலாக மூலதன ஆதாயங்களுக்காக வரி விகிதங்கள் பெரும்பாலும் குறைவாக இருப்பதால், மூலதனத்தின் சரியான வரையறையைப் பற்றி பரந்த சர்ச்சை மற்றும் சர்ச்சை உள்ளது. வேறுபட்ட மூலதன மற்றும் முதலீட்டு வரிகளில் வேறுபாடுகள் பொருளாதார சிதைவுகளுக்கு பங்களிப்பு செய்வதாக சில வரி அறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

பெருநிறுவனங்கள்

பெருநிறுவன வரி வருவாய், மூலதனம், நிகர மதிப்பு, அல்லது நிறுவனங்களுக்கு திணிக்கப்பட்ட பிற வரிகளை குறிக்கிறது. வரி மற்றும் வரிகளுக்கு வரி விதிக்கப்படும் நபர்கள் தனிநபர்களிடமிருந்தோ அல்லது பிற வரி செலுத்தக்கூடிய நபர்களிடமிருந்தோ வேறுபடலாம்.

சமூக பாதுகாப்பு பங்களிப்புகள்

பல நாடுகளில் பொதுமக்களுக்கு நிதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், மற்றும் சுகாதார பராமரிப்புத் திட்டங்கள் போன்ற அரச உதவிகள் வழங்கப்படுகின்றன.[9] இந்த முறைமைகள் தொடர்பாக, நாட்டிற்கு பொதுவாக முதலாளிகள் மற்றும் / அல்லது ஊழியர்கள் கட்டாயக் கடன்களைச் செலுத்த வேண்டும்.[10] இந்த பணம் பெரும்பாலும் சுய வேலைவாய்ப்பிலிருந்து ஊதியங்கள் அல்லது வருவாய்களைக் குறிப்பதாகும். வரி விகிதங்கள் பொதுவாக நிர்ணயிக்கப்படுகின்றன, ஆனால் ஊழியர்களைவிட வேறுபட்ட விகிதங்கள் முதலாளிகளுக்கு விதிக்கப்படலாம்.[11] சில அமைப்புகள் வரிக்கு உட்பட்ட வருவாய் மீது மேல் வரம்பை வழங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை விட ஊதியத்தில் மட்டுமே வரி செலுத்தப்பட வேண்டும் என்று ஒரு சில அமைப்புகள் அளிக்கின்றன. இத்தகைய மேல் அல்லது குறைந்த வரம்புகள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் வரி விதிப்பு சுகாதார கூறுகள் அல்ல. ஊதியங்களில் இத்தகைய வரிகள் "கட்டாய சேமிப்பு" மற்றும் ஒரு வரி அல்ல என்று சிலர் வாதிடுகின்றனர், மற்றவர்கள் தலைமுறைகளுக்கு (புதிய கூட்டுப்பண்புகள் முதல் பழைய கூட்டுறவுகளுக்கு) மற்றும் வருமான அளவு (மற்றும் உயர் வருவாய் மட்டத்திலிருந்து) குறைந்த வருமானம் அளவுகள்) போன்ற நிகழ்ச்சிகள் உண்மையில் வரி மற்றும் செலவின திட்டங்கள் ஆகும். மூலதனத்தை உள்ளடக்கிய பரந்த வரிகள் மூலம், மனித மூலதனத்தில் விலகல் மற்றும் மூலதனச் செலவினங்களை உருவாக்குவதால், ஊதியங்கள் மீது வரி செலுத்துவதன் மூலம் மட்டுமே சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக சில வரி அறிஞர்கள் வாதிடுகின்றனர், ஏனெனில் அத்தகைய முதலீடுகளுக்கு வருமானம் ஊதியங்கள் எனக் கருதப்படுகிறது.

சம்பளப் பட்டியல் வரி அல்லது தொழிலாளர்கள் வரி

சொத்து

அசையாச்சொத்து மற்றும் சில அசையும் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி சொத்து வரி எனப்படும்.

சொத்து வரி

பரம்பரை

விமர்சனங்கள்

நியாமற்ற வரி மற்றும் அதிக வரி உழைப்போரின் வருமானத்தை சூறையாடுகிறது அவர்களின் உற்சாகத்தை, முதலீட்டை இடையூறு செய்கிறது. அரசின் சேவைகளை பெறாமல் விட்டாலும், வரி செலுத்தாமல் இருக்க உரிமை இல்லை என்பதால் பலர் வரி வசூலிப்பதையே தவறு என்கின்றனர். வருமான வரி செலுத்துவது சட்ட அமைப்பு மூலம் கட்டாயமாதலால் சிலர் இதனை அரசாங்கம் திருடுவதாகவும், மிரட்டி பணம் பறித்தலாகவும், சொத்து உரிமைகளை மீறுவதால் அடிமை போல நடத்துவதாகவும், அல்லது கொடுங்கோன்மைக்கு ஏதுவாகும் என்றும் விமர்சிக்கின்றனர்.

பொதுவுடைமையாளர்கள் மற்றும் சமூகவுடைமையாளர்கள் வரிவிதிப்பினை எதிர்க்கின்றனர். காரல் மார்க்சு அரசு என்பதை ஒழித்து அரசில்லா பொதுவுடைமை நாட்டினை நிறுவ ஆவல் கொண்டார். சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளில் பெரும்பாலான அரசின் வருமானம் நிறுவனங்களின் மீதுள்ள உரிமையினால் வருவதால் பண வரிவிதிப்பு அவசியம் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.[12] வரிவிதிப்பின் அறநெறி சில நேரங்களில் கேள்விக்குட்படுத்தப்பட்டாலும், வரிவிதிப்பு பற்றி மிக அதிக வாதங்கள் விதிக்கப்பட்ட வரி தொடர்புடைய அரசால் செலவு பெய்யப்படும் முறை பற்றியே உள்ளன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வரி&oldid=3580871" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை