விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்
இப்பக்கம் விக்கிப்பீடியாவில் பகுப்பு/பகுப்பாக்கம் செயல்பாட்டைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலைக் கொண்டுள்ளது. பகுப்பாக்கத்தின் மையக் குறிக்கோளானது விக்கிப்பீடியாவில் உள்ள பக்கங்களுக்கு வழிசெலுத்தல் இணைப்புகளை வழங்குவதாகும்.
உதவி
- பகுப்புகள் பற்றிய நுட்பங்கள் பற்றி அறிய உதவி:பகுப்பு
- விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
நெறிமுறைகள்
தலைப்பை நகர்த்துதல்
தலைப்பில் பிழை இருந்தால், தலைப்பை வழிமாற்று இன்றி நகர்த்த வேண்டும்.
ஏன்?
- அவ்விதம் செய்யும்போது, முந்தைய தொகுப்புகளுக்குரிய வரலாறு அப்படியே இருக்கும்.
நகர்த்திய பிறகு என்ன செய்ய வேண்டும்?
- பழைய பகுப்பில் குறைந்த எண்ணிக்கையிலான கட்டுரைகள் இருந்தால், மனித ஆற்றல் கொண்டு அக்கட்டுரைகளில் புதிய பகுப்பினை சேர்க்கலாம்.
- அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகள் இருந்தால், தானியங்கி உதவி மூலம் புதிய பகுப்பினைப் சேர்க்க வேண்டும்.
பகுப்பினை இடுதல்
இயன்றளவு துல்லியமான பகுப்பினை (more specific) இடவேண்டும். எடுத்துக்காட்டு:
- மேட்டூர் அணை எனும் கட்டுரையில் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் எனும் பகுப்பினை இடுதல் அவசியமானது ஆகும். இந்தியா அல்லது தமிழ்நாடு அல்லது அணைகள் எனும் பகுப்பினை இடுதல் பொருத்தமற்றது. இது பொதுப்படையாக (generic) இருக்கும்.
- எடுத்துக்காட்டு: தமிழ்நாட்டில் உள்ள அணைகள் எனும் பகுப்பினை இட்டபிறகு, இந்திய அணைகள் எனும் பகுப்பினையும் இடுதல் தேவையற்றது. ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் எனும் பகுப்பு, இந்திய அணைகள் எனும் தாய்ப்பகுப்பினுள் அடங்கும்.
- சேலம் மாவட்டத்திலுள்ள அணைகள் பகுப்பினை இக்கட்டுரையில் இட்டிருத்தல் மிகவும் சிறப்பானது ஆகும்.
- தெளிவான புரிதலுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் காணுங்கள்.
பொருத்தமற்ற பகுப்பாக்கம்
எவரும் ஒரு கட்டுரையைத் திருத்தலாம். அத்துடன் கேள்விக்குரிய பகுப்பாக்கத்தை நீக்கலாம். ஒரு கட்டுரையில் 'தவறான' அல்லது 'பொருத்தமற்ற' பகுப்பு இருந்தால், கட்டுரையிலிருந்து அந்த பகுப்பை அகற்றி, அதை (பொருத்தமான) மிகவும் சரியான பகுப்புடன் மாற்றவும்.
பராமரிப்புப் பணிகளுக்கான பகுப்புகள்
- கட்டுரையில் காணொளி இருந்தால், காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் எனும் பகுப்பினை இடலாம்.
- கட்டுரையில் இயங்குபடம் இருந்தால், இயங்குபடம் உள்ள கட்டுரைகள் எனும் பகுப்பினை இடலாம்.
துறைசார்ந்த வழிகாட்டல்கள்
தமிழ்த் திரைப்படம்
- இந்தியாவில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள், கீழ்க்காணும் பகுப்புகளைக் கொண்டிருத்தல் அவசியம்:
- பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- பகுப்பு:xxxx (ஆண்டு) தமிழ்த் திரைப்படங்கள் எடுத்துக்காட்டு: பகுப்பு:2023 தமிழ்த் திரைப்படங்கள்
நபர்கள்
- பிறந்த ஆண்டு, வாழும் நபர்கள் அல்லது இறந்த ஆண்டு போன்ற பகுப்புகள் நன்று. அத்தோடு, அக்கட்டுரை எதற்காக சிறப்புடையது என்பதை அறிந்து அந்தப் பகுப்பினை இடுதல் அவசியம்.
இயற்கை அழிவுகள்
- துல்லியமான பகுப்பினை இட வேண்டும். எடுத்துக்காட்டு: 2023 சாவோ பாவுலோ வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எனும் கட்டுரையில் இடப்பட்டுள்ள பகுப்புகள் - பகுப்பு:2023 இயற்கை அழிவுகள், பகுப்பு:பிரேசிலில் வெள்ளப்பெருக்கு, பகுப்பு:பிரேசிலில் நிலச்சரிவுகள்.
கருவிகள்
- விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி - பகுப்புகளைச் சேர்க்க அல்லது நீக்க பயன்படும் கருவி
இணைய கருவிகள் -
- Petscan கருவி - பகுப்புகளை ஆராய்வதற்கு பயன்படும் கருவி
- பகுப்பு நிறைவி - ஒரு குறிப்பிட்ட பகுப்பிற்காக, பிற விக்கியின் பகுப்பில் இருக்கும் பகுப்பு உறுப்பினர்களை கண்டறிவதற்கு (உ.ம். பகுப்பு:1947 இறப்புகள் பகுப்பில் எந்த கட்டுரைகளை இணைக்க வேண்டும் என்றறிவதற்கு, ஆங்கில விக்கியின் பகுப்பு:1947 இறப்புகள் பகுப்பில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளைக் காட்டும் (தமிழ் விக்கியில் உள்ளவை மட்டும்) (Home Language – "ta" , enter category name without "category:". after selecting Go select "en" for enwiki)
செயலாக்கத் திட்டங்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை