பழுப்புக் குறுமீன்

பழுப்புக் குறுமீன்கள் (Brown dwarfs) (பொய்த்த விண்மீன்கள் எனவும் அழைக்கப்படுபவை) அல்லது பழுப்புக் குறளிகள் என்பவை துணைவிண்மீன் வான்பொருட்களாகும்; இவை முதன்மை வரிசை விண்மீன்களைப் போல தம் அகட்டில் இயல்பான நீரகத்தை (1H) எரிக்கவல்ல அணுக்கருப் பிணைவைப் பேணி நிகழ்த்தி எல்லியமாக மாற்றும் அளவுக்குப் போதிய பொருண்மையற்றன ஆகும். மாறாக, இவை மிகப் பேரளவு பொருண்மையுள்ள வளிமப் பெருங்கோள்களுக்கும் மிகக் குறைவான பொருண்மையுள்ள விண்மீன்களுக்கும் இடையிலான, தோராயமாக, 13 முதல் 80 மடங்கு வியாழன் பொருண்மை கண்டுள்ளன.[1][2] என்றாலும், இவை வழக்கமாக, டியூட்டெரியம்(2H) அணுக்கரு வினையை நிகழ்த்துகின்றன; மேலும், இவற்றில் 65 வியாழன் மடங்கு பொருண்மையுள்ளவை கல்லியம்(7Li) அணுக்கரு வினையை நிகழ்த்துகின்றன.[2]

T-வகை பழுப்புக் குறுமீன்இன் ஓவியம்
ஒப்பீடு:பெரும்பாலான பழுப்புக் குறுமீன்கள் வியாழனைவிட பெரியவை (10–15%), ஆனால் தம் உயர் அடர்த்தியால், அதைப்போல 75 மடங்கு எடைமிக்கவை. குறிப்பு: சூரியன் படத்தில் காட்டப்பட்டுள்ளதைவிடப் பெரியது.

வானியலாளர்கள் தன்னொளிர்வு வான்பொருட்களைக் கதிர்நிரல் வகைகளாகப் பிரிக்கிறார்கள். இந்த வேறுபாடு அவற்றின் மேற்பரப்பு வெப்பநிலைகளைச் சார்ந்தமைகிறது. இவ்வகையில் பழுப்புக் குறுமீன்கள் M, L, T, Y வகைகளாகப் பகுக்கப்படுகின்றன.[3][4] பழுப்புக் குறுமீன்கள் நிலைத்த நீரக அணுக்கருப் பிணைவுக்கு ஆட்படுவதில்லை. இவை, கால அடைவில் வேகமாகக் குளிர்ந்து, அவற்றின் அகவை முதிரும்போது பிந்தைய கதிர்நிரல் வகைகளைக் கடந்து முன்செல்கின்றன.

பழுப்புக் குறுமீன்கள் தம் பெயருக்கு மாறாக, வெப்பநிலைகளைப் பொறுத்து, வெற்றுக் கண்ணுக்குப் பல்வேறு நிறங்களில் தோன்றுகின்றன.[3] மிக வெதமானவை வெளிர்சிவப்பு(ஆரஞ்சு), அல்லது சிவப்பு நிறத்திலும்,[5] அதைவிடக் குளிர்ந்த பழுப்புக் குறுமீன்கள், மாந்தக் கண்ணுக்கு மெஜந்தா அல்லது கருப்பு நிறத்திலும் தோன்றுகின்றன.[3][6] பழுப்புக் குறுமீன்கள் ஆழம் செல்லச் செல்ல, அடுக்கில்லாத வேதியியல் வேறுபாடற்ற முழுநிலை வெப்பச் சுழற்சியில் நிலவலும் உண்டு.[7]

பழுப்புக் குறுமீன்களின் இருப்பு அல்லது நிலவுகை 1960 களிலேயே கோட்பாட்டியலாக அற்விக்கப்பட்டிருந்தாலும், 1990 கள் வரை பழுப்புக் குறுமீன்கள் ஏதும் ஐயமற கண்டுபிடிக்கப்படவில்லை. பழுப்புக் குறுமீன்கள் ஒப்பீட்டளவில் தாழ் மேற்பரப்பு வெப்பநிலைகளைக் கொண்டிருப்பதால், அவை கட்புல அலைநீளங்களில் அல்லாமல், அகச் சிவப்புக் கதிர் நெடுக்கத்திலேயே ஒளியைப் பெரும்பாலும் உமிழ்கின்றனபென்றாலும், மிகத் திறமான அகச் சிவப்புக் கதிர்க் கருவிகள் உருவாகியதும், ஆயிரக் கணக்கான பழுப்புக் குறுமீன்கள் இனங்காணப்பட்டன.என்றாலும், மிகத் திறமான அகச் சிவப்புக் கதிர்க் கருவிகள் உருவாகியதும், ஆயிரக் கணக்கான பழுப்புக் குறுமீன்கள் இனங்காணப்பட்டன. மிக அண்மிய பழுப்புக் குறுமீன்களைக் கொண்டதாக உலுகுமான் 16 இருமை விண்மீன் அமைப்பு உள்ளது. இது L, T கதிர்நிரல் வகைப் பழுப்புக் குறுமீன்களால் ஆகிதாகும்; சூரியனில் இருந்து 6.5 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளதால், ஆல்பா செட்டாரிக்கும் பெர்னார்டு விண்மீன்களுக்கும் அப்பால் சூரியனுக்கு நெருக்கமாக மூன்றாம் இடத்தில் உலுகுமான் 16 இருமை விண்மீன் அமைப்பு அமைகிறது.

தெனிசு-P J082303.1-491201 b எனும் பழுப்புக் குறுமீன் மிகவும் பொருண்மை மிகுந்தது; புறக்கோளாக மார்ச் 2014 இல் நாசாவின் புறக்கோள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கோள்களின் வரம்புப் பொருண்மை வியாழனைப் போல 13 மடங்கே என்றாலும் இது அம்மதிப்பில் இருமடங்கினும் கூடுதலாக உள்ளது. அதாவது, வியாழனைப் போல 28.5 மடங்குப் பொருண்மையைக் கொண்டுள்ளது.[8]

பழுப்புக் குறுமீன்களைச் சில கோள்களும் சுற்றிவருவதாக அறியப்பட்டுள்ளது. அவை 2M1207b, MOA-2007-BLG-192Lb, 2MASS J044144b என்பனவாகும்.

வரலாறு

வியாழன் பொருண்மையைப் போல 20 முதல் 50 மடங்கு பொருண்மையுள்ள கிளீசு 229Bஎனும் கோள், கிளீசு Gliese 229 விண்மீனைச் சுற்றிவருகிறது . இது புவியில் இருந்து 19 ஒளியாண்டுகள் தொலைவில் அமையும் இலெப்பசு விண்மீன்குழுவில் உள்ளது.

"பழுப்புக் குறுமீன்கள்" என இன்று நாம் வழங்கும் இந்த வான்பொருட்கள் நிலவுவதாக 1960 களில் கோட்பாட்டுவழியே அறிவிக்க்கப்பட்டன.[3][9][10][11] இவை முதலில் கருப்புக் குறுமீன்கள் என அழைக்கப்பட்டன.[12]நீரகப் பிணைப்பை உருவாக்கப் போதுமான பொருண்மையற்ற இவை வெளியில் கட்டற்று உலவும் கருநிறத் துணைவிண்மீன் பொருட்களாக வகைபடுத்தப்பட்டன. என்றாலும், ஏற்கெனவே கருப்புக் குறுமீன் எனும் சொல் தண் வெண்குறுமீன்களைக் குறிக்கவும் நீரகப் பிணைப்பு நிகழும் செங்குறுமீன்களைக் குறிக்கவும் தொடக்கத்தில் கட்புல அலைநீளங்களில் ஒளிரும் வான்பொருட்களைக் குறிக்கவும் பயன்பட்டு வந்தது. இதனால், இந்த வான்பொருட்களுக்குக் கோள்சார், துணைவிண்மீன் சார் மாற்றுப் பெயர்கள் முன்மொழியப்படலாயின. ஆனால், ஜில் டார்ட்ட்டர் 1975 இல் இவற்றுக்குப் பழுப்புக் குறுமீன் எனும் சொல்லை ஓரளவு தோராயமான நிறத்தினைக் குறிப்பதாக முன்மொழிந்தார்.[5][13][14] இந்தச் சொல் அதற்குப் பிறகு வானியலில் தொடர்ந்து வழங்கலானது.

கருப்புக் குறுமீன் எனும் சொல், கணிசமான ஒளியை உமிழ முடியாத நிலைக்குக் குளிர்ந்த வெண்குறுமீனையும் குறிப்பிடுகிறது . என்றாலும், மிகத்தாழ்ந்த பொருண்மையுள்ள வெண்குறுமீன் இந்த வெப்பநிலையை அடைவதற்கு பிடிக்கும் நேரம், நடப்பு புடவின் அகவையை விட நீண்டமையும் கணக்கிடப்பட்டுள்ளது; எனவே இத்தகைய பொருட்கள் நிலவ வாய்ப்பில்லையென எண்ணப்பட்டது.

நீரக எரிவரம்புள்ள மிகத்தாழ்ந்த பொருண்மை விண்மீன்களின் தன்மையைப் பற்றிய தொடக்க காலக் கோட்பாடுகள் , 0.07 சூரியப் பொருண்மையினும் குறைவான திரள் I வான்பொருள் அல்லது 0.09 சூரியப் பொருண்மையினும் குறைவான திரள் II வான்பொருளை முன்மொழிந்தன; மேலும் இவை இயல்பான விண்மீன்படிமலர்ச்சியூடாக செல்லாமல், முற்றாக அழியும் விண்மீனாக மாறும் எனவும் கூறின (குமார் 1963).[9] நீரக எரிவரம்புள்ள சிறுமப் பொருண்மை மதிப்புக்கான முதல் தன்னிறைவான கணக்கீடு, திரள் I வான்பொருளுக்கு 0.08 முதல் 0.07 வரையிலான சூரியப் பொருண்மையாக அமையுமென உறுதிப்படுத்தியுள்ளது.(கயாசியும்நக்கானாவும் 1963 இல்).[10][15]பிந்தைய 1980 களில், 0.012 சூரியப் பொருண்மை அமைந்த வான்பொருட்களில் நிகழும் டியூட்டெரிய எரிப்பும், பழுப்புக் குறுமீன்களை குளிர்ந்த புர வளிமண்டலங்களில் உருவாகும் தூசின் தாக்கமும் ஆகிய கண்டுபிடிப்புகள் இந்தக் கோட்பாடுகளைக் கேள்விக்கு உள்ளாயின. என்றாலும்மிவை கட்புல ஒளியேதும் உமிழாததால் இவர்றைக் கண்டுபிடிப்பது அரிதாகவே உள்ளது. இவற்றின் வலிமையான உமிழ்வு அகச் சிவப்புக் கதிர்நிரல் நெடுக்கத்தில் அமைகிறது; அன்றைய தரத்தள அகச் சிவப்புக் கதிர்காணிகள் பழுப்புக் குறுமீன்களை இனங்காணும் அளவுக்குத் துல்லியமானவையாக அமையவில்லை.

இதற்குப் பிறகு, இந்த வான்பொருட்களைக் கண்டுபிடிக்க பலமுறைகளைக் கொண்டு பல்வேறு தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பல்வேறுமுறைகளில் கள விண்மீன்களைச் சுற்றி பன்னிறப் படிம அளக்கைகள், முதன்மை வரிசை குறுமீன்கள், பழுப்புக் குறுமீன்களுடன் அமைந்த மங்கலான துணைப்பொருட்களின் படிம அளக்கைகள், இளம் விண்மீன் கொத்துகளின் அளக்கைகள், நெருங்கியமைந்த துணைவான்பொருட்களின் ஆர விரைவுக் (திசைவேகக்) கண்காணிப்பு ஆகியன அடங்கும்.

பல ஆண்டுகளாக, பழுப்புக் குறுமீன்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் பயன்தராமலே கடந்தன. என்றாலும், 1988 இல் இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர்களான எரிக் பெக்லின், பெஞ்சமின் சுக்கர்மன் ஆகிய இருவரும் அகச் சிவப்புக் கதிர் கொண்டு வெண்குறுமீன்களை தேடுகையில், GD 165 எனும் விண்மீன் அருகில் ஒரு மங்கலான துணைவான்பொருளைக் கண்டுபிடித்தனர். இந்த வான்பொருள் GD 165B யின் கதிர்நிரல் சிவப்பாக அமைந்தது; தாழ்பொருண்மைச் செங்குறுமீனுக்கான இயல்புகள் ஏதும் இதில் அமையவில்லை.M பழுப்புக் குறுமீன்களை விட GD 165B குளிர்ந்த பொருளாக அமைந்ததால் இதைத் தனியாக வகைபடுத்தவேண்டும் என்பது தெளிவாகியது. அடுத்த பத்தாண்டுகளுக்கு GD 165B தனித்ததாக இரு மைக்கிரான் அனைத்துவான் அளக்கை உருவாகும் வரை விளங்கியது. அப்போது கலிபோர்னியா தொழில்ந்நுட்பப் பல்கலைக்கழக டேவி கிர்க்பாட்ரிக்கும் அவரது குழுவினரும் இதையொத்த நிறமும் கதிர்நிரல் இயல்புகளும் கொண்ட பல் வான்பொருட்களைக் கண்டுபிடித்தனர்.

இன்று, GD 165B "L வகைக் கதிர்நிரல்" குறுமீன்களின் முன்வகைமையாக உணரப்பட்டுள்ளது.[16][17]அப்போது குளிர்ந்த குறுமீனைக் கண்றிந்தது சிறப்பாக அமைந்தாலும், GD 165B வான்பொருளைப் பழுப்புக் குறுமீனாகவகைபடுத்துவதா அல்லது வெறுமனே மிகத்தாழ் பொருண்மையுள்ள விண்மீனாக மட்டுமே கருதுவதா எனும் விவாதம் தொடரலானது; ஏனெனில், இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை நோக்கீட்டளவில் முடிவுசெய்வது அரிதாக இருந்தது.

மற்ற பழுப்புக் குறுமீன்கள் பற்றிய அறிக்கைகள் பல, GD 165B குறுமீனைக் கண்டுபித்ததுமே, வெளிவரலாயின. இவற்றில் பெரும்பாலானவை பொய்ப்பிக்கப்பட்டன; என்றாலும் அவற்றில் கல்லியம்(லிதியம்) இல்லாமையால் அவை வெறும் விண்மீன்களே என அறியப்பட்டன. உண்மையான விண்மீன்கள் கல்லியத்தின் எரிநிகழ்வு குறைந்தது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக அமைய, பழுப்புக் குறுமீன்களில் (இவை, குழப்பும் வகையில், உண்மையான விண்மீன்களையொத்த வெப்பநிலைகளும் ஒளிர்மைகளும் கொண்டிருக்கின்றன.) அது நிகழாது. ஓரளவு மிகவும் இளம் அகவையுள்ளதாக, 100 மில்லியன் ஆண்டுகளை விட முதிர்ந்ததாக அந்த விண்மீன் இருக்கும் வரை, குறிப்பிட்ட அதன் வளிமண்டலத்தில் கல்லியத்தைக் கண்டுபிடிப்பது, அதைப் பழுப்புக் குறுமீன் தானென்பதை உறுதிப்படுத்தும்.

தீய்தே-1, கிளிசே 229B எனும் இரண்டு துணைவிண்மீன் பொருட்களை 1995 இல் கண்டுபிடித்தது, பழுப்புக் குறுமீன்களின் ஆய்வையே கணிசமாக மாற்றிவிட்டது.[18][19]இவை 670 மீநுண் மீ கல்லியக் கதிர்நிரல் வரியால் இனங்காணப்பட்டன. இவற்றில் பின்னது தான் மிகவும் குறிப்பிடத் தகுந்தவொன்றாகும். இதன் வெப்பநிலையும் ஒளிர்மையும் விண்மீன் நெடுக்கத்தை விடக் குறைவாக அமைந்தது. குறிப்பிடத்தக்க வகையில் இதன் அகச் சிவப்புக் கதிர்நிரலில் 2 நுண் மீ உறிஞ்சல் அலைப்பட்டை மீத்தேனின் இருப்பினை காட்டியது. இந்த கூறுபாடு முன்னம் வளிமக் கோள்கலின் வளிமண்டலங்களிலும் காரிக்கோலின் தித்தன் நிலாவுலும் மட்டுமே நோக்கப்பட்டிருந்தது. மீத்தேன் உறிஞ்சல் முதன்மை வரிசை விண்மீன்களின் வெப்பநிலைகளில் எதிர்பார்க்காப்படுவதில்லை.ஈந்தக் கண்டுபிடிப்பு, L கதிர்நிரல் வகைக் குறுமீன்களை விடக் குளிர்ந்த "T கதிர்நிரல் வகை குறுமீன்களைக்" அமைதலை நிறுவ உதவியது. கிளிசே 229B இக்குறுமீன்களின் முன்வகைமையாகும்.

உறுதிபடுத்தப்பட்ட பழுப்புக் குறுமீன்களின் முதல் கண்டுபிடிப்பை எசுப்பானிய வானியற்பியலாளரான இராபயேல் இரெபோலோ உலோபெசு (குழுத் தலைவர்), மரியா உரோசா சாபதெரோ ஒசாரியோ, எடுவார்டோ மார்ட்டின் ஆகியோர் 1994 நிகழ்த்தினர்.[20]அவர்கள் இந்த வான்பொருளைத் தீய்தே 1 என அழைத்தனர். இது கார்த்திகை திறந்த பால்வெளிக் கொத்தில் கண்டறிந்தனர்ரிந்தக் கண்டுபிடிப்புக்கான கட்டுரை இயற்கை இதழுக்கு 1995 இல் அனுப்பட்டட்டது. இந்தக் கட்டுரை அதில் 1995, செப்டம்பர் 14 இல் வெளியிடப்பட்டது.[18][21] இந்தப் பழுப்புக் குறுமீன் கண்டுபிடிப்பை இயற்கை இதழ் அலுவற் பாங்கில் "Brown dwarfs discovered, official" என அதன் இதழ் முன்பக்கத்தில் அறிவித்தது.

கானரியாசு வானியற்பியல் கழகத்தின் குழுவொன்று தீய்த்ந்ந் வான்காணகத்தில் 1994 ஜனவரி 6 இல் 80 செமீ தொலைநோக்கிவழி(IAC 80)நோக்கிடுகளால் திரட்டிய படிமங்களில் தீய்தே 1 கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு இதன் கதிர்நிரல் 4.2 மீ வில்லியம் எர்செல் தொலைநோக்கியால் 1994 திசம்பரில் இலாபால்மாவில் அமைந்த உரோக் தெ லாசு முச்சாச்சோசு வான்காணகத்தில் முதலில் பதிவு செய்யப்பட்டது.இது இளம் கார்த்திகை விண்மீன்கொத்தின் உருப்பாக அமைந்ததால் தீய்தே 1 இன் தொலைவும் வேதியியல் உட்கூறும் அகவையும் நிறுவ முடிந்தது. அப்போது நிலவிய மிக முன்னேறிய விண்மீன், துணைவிண்மீன் படிமலர்ச்சி சார்ந்த படிமங்களைக் கொண்டு, தீய்தே குழு தீய்தே 1 வின் பொருண்மையை 55 மடங்கு வியாழன் பொருண்மையாக மதிப்பிட்டது. இது தெளிவாக விண்மீன்சார் பொருண்மையை விடக் குறைவானதே. பிறகு அறிந்த இளம் அகவை பழுப்புக் குறுமீன் பணிகளுக்கான எடுத்துகாட்டு மேற்கோள் வான்பொருளாக இது அமையலானது.

கோட்பாட்டளவில், 65 மடங்கு வியாழன் பொருண்மைக்கும் கீழான பழுப்புக் குறுமீன்கள் தன் படிமலர்ச்சிக் கால முழுவதிலும் எப்போதும் வெப்ப அணுக்கரு வினையால் கல்லியத்தை எரிக்க இயலாது. இந்த உண்மையே வான்பொருட்களின் துணைவிண்மீன் இயல்புகளாகிய தாழ் ஒளிர்மை, தாழ் மேற்பரப்பு வெப்பநிலைகளை ஆய்தலுக்கான கல்லிய ஓருவு நெரிமுறைகலில் ஒன்றாகும்.

கெக் 1 தொலைநோக்கியால் 1995 நவம்பரில் பதிவுசெய்த தீய்தே 1 இன் உயர்தரத் தரவுகள், கார்த்திகை விண்மீன்கள் உருவாகிய முதனிலை மூலக்கூற்று முகிலில் அமைந்த தொடக்கக் கல்லிய அளவு எச்சமே என்பதைக் காட்டின. இந்நில தீய்தே 1 இன் அகட்டில் வெப்ப அணுக்கரு வினை நிகழாமையை நிறுவுகிறது. இந்த நோக்கீடுகள் தீய்தே 1 ஒரு பழுப்புக் குறுமீன் தான் என்பதோடு, கதிர்நிரலியலில் கல்லிய ஓர்வின் தமைமையையும் நிறுவின.

சிறிது காலம் வரையில், நேரடி நோக்கீட்டால் சூரியக் குடும்ப வெளிக்கப்பால் கணடறிந்த மிகவும் சிறிய பழுப்புக் குறுமீனாகத் தீய்தே 1 விளங்கியது. இதர்குப் பின்னர், 1,800 எண்ணிக்கைக்கும் மேலான பழுப்புக் குறுமீன்கள் இனங்காணப்பட்டுள்ளன;[22] இவற்றில் சூரியனில் இருந்து 12 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சூரியநிகர் விண்மீன் ஈர்ப்பில் கட்டுண்ட புவியொத்த எப்சிலான் இண்டி Ba, Bb எனும் இரு பழுப்புக் குறுமீன் இணையும் 6.5 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள உலுகுமான்16 எனும் பழுப்புக் குறுமீன் இருமை தொகுப்பும் அடங்கும்.

கோட்பாடு

விண்மீன் தோன்றுவதற்கான செந்தர இயங்கமைப்பு, ஈர்ப்புக்குலைவு வழியாகவொரு தண்ணிய உடுக்கணவெளி வளிமமும் தூசும் அகந்திள்வதேயாகும். இம்முகில் சுருங்கும்போது அது கெல்வின்-கெல்ம்கோல்ட்சு இயங்கமைப்பால் சூடாகும்மிந்நிகழ்வின் தொடக்கச் செயல்முறையின்போது செறிவுறும் வளிமம் ஆற்றலைக் கதிர்வீச்சாக வெளியேற்றும்; இதனால் ஈர்ப்புக்குலைவு மேலும் தொடர்ந்து நிகழும். முடிவில், மையப்பகுதி போதுமான அளவுக்கு அடர்ந்து கதிர்வீச்சைச் சிறைபிடிக்கும். இதன் விளைவாக, குலைவுறும் முகிலின் மைய வெப்பநிலையும் அடர்த்தியும், நேரத்தைச் சார்ந்து பேரளவில் உயர்ந்து சுருங்குவதை மெதுவாக்கும். இந்நிகழ்வு முதனிலை விண்மீன் தனது அகட்டில் வெப்ப அணுக்கரு வினை தோன்றும் அளவுக்குப் போதுமான சூடும் அடர்த்தியும் கூடும்வரைத் தொடரும்.

பெரும்பாலான விண்மீன்களில், அவற்றின் அகட்டில் அமையும் வெப்ப அணுக்கரு வினைகள், மேலும் ஈர்ப்பால் சுருங்குவதை நிறுத்தும் அளவுக்கு வளிம, கதிர்வீச்சு அழுத்தம் உருவாகும். அப்போது நீர்மநிலையியல் சமனிலை உருவாகி, முதன்மை வரிசை விண்மீனில் அமைவதைப் போல, வாழ்நாள் முழுவதும் நீரகப் பிணைவுவழி எல்லியமாக மாற்றிக்கொண்டிருக்கும்.என்றாலும், முதனிலை விண்மீனின் பொருண்மை 0.08 சூரியப் பொறுண்மையினும் குறைவாக இருந்தால், இயல்பான வெப்ப அணுக்கரு வினைகள் அகட்டை எரியச் செய்யாது. சிறிய முதனிலை விண்மீனை ஈர்ப்புச் செறிதல் மிகத் திறம்பட வெப்பமூட்டாது; எனவே, அகட்டின் வெப்பநிலை போதுமான அளிவில் கூட்டிப் பிணைவு வினையைத் தொடக்குவதற்கு முன்பே, அடர்த்தி மின்னன் அழித்தல் அழுத்தம் உருவாகப் போதுமான அளவுக்கு மின்னன்கள் நெருக்கமாக திணிந்துவிடும். பழுப்புக் குறுமீன் உட்படிமங்கலின்படி, அகட்டின் அடர்த்தி, வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றின் வகைமைtypical நிலைமைகள் பின்வருமாறு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது:

இதனால், முதனிலை விண்மீன் நீயக பிணைவு வினையை பேணும் அளவுக்குப் போதுமான பொருண்மையோ, அடர்த்தியோ எப்பவுமே அடையாது. மின்னன் அழித்தல் அழுத்தத்தால் அகந்திரளும் பொருண்மம் எப்பவுமே தேவையான அடர்த்தியையோ அழுத்தத்தையோ அடையவியலாது.

எனவே மேலும் ஈர்ப்புச் சுருங்குதல் நிகழ்வதைத் தவிர்த்து ஒரு "பொய்த்த விண்மீன்" ஆகும் அல்லது தன் அக ஆற்றலை வெளியேற்றிக் குளிரும் பழுப்புக் குறுமீனாகும்.

உயர்பொருண்மைப் பழுப்புக் குறுமீன்களும் தாழ்பொருண்மைப் பழுப்புக் குறுமீன்களும் ஒப்பீடு

  • கல்லியம் பொதுவாக பழுப்புக் குறுமீன்களில் இருக்கும்; தாழ்பொருண்மை விண்மீன்களில் அமையாது. நீரகப் பிணைவுக்கு வேண்டிய உயர்வெப்பநிலை அடையும் விண்மீன்கள் வேகமாக தம் கல்லியத்தைத் தீர்க்கின்றன. கல்லியம்-7, முன்மி(புரோட்டான்) மொத்தலால் இரண்டு எல்லியம்-4 அணுக்கருக்கள் உருவாகின்றன. இந்த அணுக்கரு வினைக்கான வெப்பநிலை நீரகப் பிணைவுக்கான் வெப்பநிலையை விட தாழ்வாகவே உள்ளது. தாழ்பொருண்மை விண்மீன்களில் நிகழும் வெப்பச்சுழற்சி, விண்மீன் முழுவதும் உள்ள கல்லியத்தைத் தீர்க்கிறது. எனவே, பழுப்புக் குறுமீன்களில் கல்லியக் கதிர்நிரல் வரிகள் இருப்பது, அவை துணைவிண்மீன் தன்மையை உறுதிசெய்யும் வலிமை வாய்ந்த கூறுபாடாகும். பழுப்புக் குறுமீன்கலில் இருந்து தாழ்பொருண்மை விண்மீன்களை வேறுபடுத்தும் கூறாக கல்லிய இருப்பு அமைதல் பொதுவாக கல்லிய ஓர்வு எனப்படுகிறது.இது முதன்முதலில் இராபயேலுரொபோலா இலெப்சும் எடுவார்டோ மார்ட்டினும் அந்தோனியோ மகாசும் முன்மொழிந்தனர். என்றாலும், கல்லியம் எரிய போதுமான நேரம் வாய்க்காத முன்னிளம் விண்மீன்களில் கல்லியம் காணப்படுகிறது. கல்லியம் தீர போதுமான வெப்பநிலை அமையாத, சூரியனை ஒத்த எடைமிகு விண்மீன்களில் கல்லியம் அதன் வெளி வளிமண்டலங்களிலும் எஞ்சியுள்ளது; ஆனால் பின்னவை, பழுப்புக் குறுமீன்களில் இருந்து தம் உருவளவால் வேறுபடுகின்றன.இது முதன்முதலில் இராபயேலுரொபோலா இலெப்சும் எடுவார்டோ மார்ட்டினும் அந்தோனியோ மகாசும் முன்மொழிந்தனர். என்றாலும், கல்லியம் எரிய போதுமான நேரம் வாய்க்காத முன்னிளம் விண்மீன்களில் கல்லியம் காணப்படுகிறது. கல்லியம் தீர போதுமான வெப்பநிலை அமையாத, சூரியனை ஒத்த எடைமிகு விண்மீன்களில் கல்லியம் அதன் வெளி வளிமண்டலங்களிலும் எஞ்சியுள்ளது; ஆனால் பின்னவை, பழுப்புக் குறுமீன்களில் இருந்து தம் உருவளவால் வேறுபடுகின்றன.ஆனால், உயர்பொருண்மைப் பழுப்புக் குறுமீன்கள், இளம்பருவத்தில் கல்லியம் தீரும் அளவுக்குப் போதுமான வெப்பநிலையைப் பெற்றுள்ளன. 65 வியாழன் மடங்கு பொருண்மையை விட உயர்பொருண்மைக் குறுமீன்கள் தம் அகாவையில் அரைம்லீயன் ஆண்டுகள் முதிரும் காலத்துக்கு முன்பே தம் கல்லியத்தை எரித்துத் தீர்த்துவிடுகின்றன;[23] எனவே, இந்த ஓர்வு செம்மையாக அமையாது.
  • விண்மீன்களைப் போலன்றி, முதிர்நிலைப் பழுப்புக் குறுமீன்கள் சிலவேளைகளில், நெடுங்கால அடைவில், தம் வளிமண்டலங்களில் நோக்கிட முடிந்த அளவு மீத்தேனைத் திரட்டும்படி குளிர்ந்தமைகின்றன. இவ்வகை நடத்தைக் குறுமீன்களில் கிளிசே 229B பழுப்புக் குறுமீனும் அடங்கும்.
  • முதன்மை விண்மீன்கள் குளிர்ந்து சிறும போல்லொஅளவி ஒளிர்மையை அடைகின்றன. இந்நிலை நிலைப்புடைய அணுக்கருப் பிணைவைத் தொடர்ந்து பேணும் வகையில் உள்ளது. இது விண்மீனுக்கு விண்மீன் வேறுபட்டாலும் பொதுவாக சூரியனைப் போல குறைந்தது 0.01% ஆக இருக்கும். பழுப்புக் குறுமீன்கள் குளிர்ந்து தம் வாழ்நாள் முடிவு வரை தொடர்ந்து இருட்டடைகின்றன: மிக முதிர்நிலை பழுப்புக் குறுமீன்கள் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு மங்கிவிடுகின்றன.
  • பழுப்புக் குறுமீன்களில் வளிமண்டல வெப்பச்சுழற்சியால் இரும்புமழை பொழிவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். சிறு விண்மீன்களில் இது நிகழ வாய்ப்பில்லை.ஈரும்புமழைக்கான கதிர்நிரல் அளவி ஆய்வு இன்னமும் நடந்துவருகிறது. ஆனால், பழுப்புக் குறுமீன்களிலும் இந்த வளிமண்டலப்பிறழுவு அமைவதில்லை. a heterogeneous iron-containing atmosphere was imaged around உலுகுமான் மண்டலத்துக்கு அருகாமையில் அமைந்த B உறுப்பு சுற்றியமைந்த வளிமண்டலத்தில் 2013 இல் இரும்பு உள்ள படிமம் எடுக்கப்பட்டுள்ளது.[24]

தாழ்பொருண்மைப் பழுப்புக் குறுமீன்களும் உயர்பொருண்மைக் கோள்களும் ஒப்பீடு

HD 29587 எனும் விண்மீனைச் சுற்றிவரும் துணைவான் பொருளாகிய HD 29587 B எனும் 55 மடங்கு வியாழன் பொருண்மையுள்ள பழுப்புக் குறுமீனின் ஓவியம்.

பழுப்புக் குறுமீன்களின் குறிப்பிடத்தக்க இயல்பு அவை வியாழன் அளவுக்கு ஒரே ஆரத்தைப் பெற்றிருத்தலேயாகும். இவற்றின் உயர்நிலைப் பொருண்மை நெடுக்கம் வியாழனைப் போல் 60 முதல் 90 மடங்காகவும் அவற்றின் பருமனளவு, வெண்குறுமீன்களைப் போல, மின்னன் அழிவுநிலை அழுத்தத்தைச் சார்ந்தும் உள்ளது;[25]பழுப்புக் குறுமீன்களின் தாழ்நிலைப் பொருண்மை நெடுக்கம் வியாழனைப் போல் 10 மடங்காகவும் அவற்றின் பருமனளவு, கோள்களைப் போல, முதன்மையாக கூலம்பு அழுத்தத்தையும் சார்ந்து உள்ளது. எனவே, மொத்தத்தில் பழுப்புக் குறுமீன்களின் ஆரம் அவற்றின் பொருண்மை நெடுக்க முழுவதிலும் 10–15% அளவுக்கு மாறுகிறது. இந்நிலையே இவற்றைக் கோள்களில் இருந்து வேறுபடுத்தலை அரியதாக்குகிறது.

மேலும், பல பழுப்புக் குறுமீன்கள் அனுக்கருப் பிணைவை மேற்கொள்வதில்லை; வியாழனைப் போல 13 மடங்குப் பொருண்மையுள்ள தாழ்நெடுக்கத்தில் இவற்றின் வெப்பநிலை டியூட்ரியத்தை எரிக்க ஏற்றதாக அமைவதில்லை; வியாழனைப் போல 60 மடங்குப் பொருண்மையுள்ள நெடுக்கத்திலும் கூட, இவை உருவாகிய 10 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, இவற்றின் வெப்பநிலை டியூட்ரியத்தை எரிக்க ஏற்றதாக அமைவதில்லை.

இந்த நிலைமையை X கதிர்நிரல், அகச் சிவப்புக் கதிர்நிரல் உமிழ்வுகளே தெளிவாகக் காட்டுகின்றன. சில பழுப்புக் குறுமீன்கள் X கதிர்களை உமிழ்கின்றன; மேலும், அனைத்து "வெம்பதக்" குறுமீன்களும் தொடர்ந்து தெளிவாக, இவை கோள் வெப்பநிலையான 1000 K அளவுக்கும் குறைந்த வெப்பநிலைகளை அடியும் வரையில், சிவப்பு, அகச் சிவப்புக் கதிர்களை உமிழ்கின்றன.

சூரியக் குடும்ப வளிமப் பெருங்கோள்கள் பழுப்புக் குறுமீன்களின் சில பான்மைகளைக் கொன்டுள்ளன. எடுத்துகாட்டாக, வியாழனும் காரிக்கோளும் சூரியனைப் போல நீரகத்தாலும் எல்லியத்தாலும் ஆகியவை. காரிக்கோளும், அதன் பொருண்மை 30% அளவு சிறியதாயினும், வியாழனைப் போலவே பெரிய கோளே ஆகும். சூரியக் குடும்பத்தின் மூன்று பெருங்கோள்களும் (வியாழன், காரிக்கோள், நெப்டியூன்) சூரியனில் இருந்து பெறும் வெப்பத்தை விட, இவை வெளியிடும் வெப்பம் பேரளவாக உள்ளது.[26]

அனைத்துப் பெருங்கோள்களும் கோளமைப்பை அதாவது, தம் நிலாக்களைப் பெற்றுள்ளன. விண்மீன்களைப் போலவே பழுப்புக் குறுமீன்களும் தற்சார்பாகவே உருவாகின்றன. ஆனால், விண்மீன்களைப் போல போதுமான பொருண்மையைப் பெறாததால் தம்முள் பர்ரவைத்துக் கொள்ள முடியவில்லை; விண்மீன்களைப் போலஏவே பழுப்புக் குறுமீன்களும் தனித்தோ அல்லது மற்றொரு விண்மீனை அண்மிய வட்டனையிலோ தோன்றுகின்றன. சில வட்டணை வின்மீன்கள் கோள்கலைப் போலவே மையம்பீறழ் வட்டணைகளைக் கொண்டுள்ளன.

நடப்பு நிலையில், பன்னாட்டு வானியல் ஒன்றியம், டியூட்ரிய வெப்ப அணுக்கரு பிணைவு வினை நிகழும் பழுப்புக் குறுமீனாக அமைய, குறிப்பிட்ட வரம்புநிலைப் பொருண்மைக்கு மேல் அதன் பொருண்மை இருக்கவேண்டுமெனக் கருதுகிறது (அண்மையில் இம்மதிப்பு 13 மடங்கு வியாழன் பொருண்மையெனச் சூரியப் பொன்மத் தன்மைக்குக் கணக்கிடப்பட்டுள்ளது); மேலும், இந்தப் பொருண்மைக்குக் கீழுள்ள வான்பொருள் ( அது வட்டணையில் சுற்றிவரும் விண்மீனாகவோ அல்லது விண்மீனின் எச்சமாகவோ இருக்கலாம்) கோளாகக் கருதுகிறது.[27]13  மடங்கு வியாழன் பொருண்மை வரம்பு குத்துமதிப்பானதே தவிர, இஅற்பியல் துல்லியம் வாய்ந்த மதிப்பன்று. பெரிய வான்பொருட்கள் மொத்த டியூட்ரியத்தையும் எரித்துவிடம்; சிறிய வான்பொருட்கள் சிறிதளவே எரிக்கும். 13 மடங்கு வியாழன் பொருண்மை மதிப்பு, இந்த இருநிலைகளுக்கு இடையில் இருக்கும்.[28]

டியூட்ரியம் எரியும் அளவு வான்பொருளின் வேதியியல் உட்கூறை, அதாவதுஆதில் இருக்கும் எல்லிய, நீரக, உயர்தனிமங்களின் அளவைச் சார்ந்ததாகும்; இந்தத் தனிம அளவுகள் வளிமண்டல ஒளிபுகாமையையும் கதிர்வீச்சுக் குளிர்வு வீத்தத்தையும் தீர்மானிக்கின்றன.[29]

சூரியக் குடும்பத்துக்கு அப்பாலைய கோள் களஞ்சியம் வியாழனைப் போல 25 மடங்குக்கு மேலுள்ள கோள்களையும் வியாழனைப் போல 24 மடங்கு வரையுள்ள புறவெளிக் கோள்களையும் உள்ளடக்குகிறது.

துணைப்பழுப்புக் குறுமீன்

சூரியன், இளம் துணைப்பழுப்புக் குறுமீன், வியாழன் ஆகியவற்றின் உருவளவு ஒப்பீடு. அகவை முதிரும்போது துணைப்பழுப்புக் குறுமீன் படிப்படியாகக் குளிர்ந்து சுருங்கும்.

ஒரு துணைப்பழுப்புக் குறுமீன் அல்லது கோட்பொருண்மைப் பழுப்புக் குறளி என்பது விண்மீன்களைப் போல அல்லது பழுப்புக் குறுமீன்களைப் போலவே உருவாகும் வான்பொருள் ஆகும். இது ஒண்முகில் குலவால் ஏற்படும்; மேலும் டியூட்ரிய வெப்ப அணுக்கரு வினைநிகழவியலாத அளவு குறைவான பொருண்மை கொண்டிருக்கும்; வியாழனைப் போல 13 மடங்கு பொருண்மை கொண்டிருக்கும்.[30]

சில ஆய்வாளர்கள் இவற்றைக் கட்டற்று உலவும் கோள்கள் என அழைக்கின்றனர்;[31] வேறு சிலரோ கோட்பொருண்மைப் பழுப்புக் குறளிகள் என அழைக்கின்றனர்.[32]

நோக்கீடுகள்

பழுப்புக் குறுமீன்களின் வகைபாடு

M கதிர்நிரல் வகை

ஒரு பிந்தைய M குறுமீனின் ஓவியம்

M6.5 அல்லது அதற்குப் பிந்தைய கதிர்நிரல் வகைப் பழுப்புக்குறுமீன்கள் உள்ளன. இவை பிந்தைய M குறுமீன்கள் எனப்படுகின்றன.

L கதிர்நிரல் வகை

ஓர் L கதிர்நிரல் வகைக் குறுமீனின் ஓவியம்

நெடிது நிலவும் செவ்வியல் விண்மீன் வரிசையில் மிகக் குளிர்ந்த வகையான M கதிர்நிரல்வகைக் குறுமீனை வரையறுக்கும் பான்மையாக, டிடானியம்(II) ஆக்சைடு (TiO), வனடியம்(II) ஆக்சைடு (VO) மூலக்கூறுகளின் உறிஞ்சல் பட்டைகள் ஓங்கலாக அமைந்த ஒளியியல் கதிர்நிரல் பகுதி அமைகிறது. என்றாலும், GD 165 வெண்குறுமீனின் குளிர்ந்த துணைமீனாகிய GD 165B இல், M குறுமீன்களின் தனித்த TiO கூறுபாடுகள் ஏதும் அமையவில்லை.மேலும், பின்னர் இனங்கண்ட GD 165B இன் கள உறுப்படிகள், இறுதியாக கிர்க்பாட்ரிக் குழுவினர், புதிய L குறுமீன்கள் கதிர்நிரல் வகையை வரையறுக்க வழிவகுத்தது. இந்த வரையறை, L குறுமீன் வகைக்கான பான்மையாக மெலிந்த TiO, VO பொன்ம ஆக்சைடு கதிர்நிரல் பட்டைகளுக்கு மாற்றாக, ஓங்கலான Na I, K I, Cs I, Rb I கதிர்நிரல் உள்ள இரும்பு(I) ஐதரைடு(FeH), குரோமியன் ஐதரைடு(CrH), மகனீசியம் ஐதரைடு(MgH), கால்சியம் ஐதரைடு(CaH) போன்றவற்றின் வலிமையான பொன்ம ஐதரைடு பட்டைகளின் சிவப்பு ஒளியியல் பகுதியை வரையறுத்தது. 2013 வரையில், 900 அளவுக்கும் மேலான L வகைக் குறுமீன்கள் இனங்காணப்பட்டுள்ளன;[22] இவற்றில் பெரும்பாலானவை பின்வரும் அகல்விரிவான கள ஆய்வுகளால் கண்டறியப்பட்டன: இரு மைக்ரான் அனைத்துவான் அளக்கை (2MASS), தென்கோள ஆழ் அகச் சிவப்புக் கதிரண்மை அளக்கை (DENIS), சுலோவான் இலக்கவியல் வானளக்கை(SDSS).

T கதிர்நிரல் வகை

ஒரு T கதிர்நிரல் வகைப் பழுப்புக் குறுமீனின் ஓவியம்

GD 165B, L கதிர்நிரல் வகைக் குறுமீன்களின் முன்வகைமையாக இருப்பது போல, கிலிசே 229B புதிய இரண்டாம் வகை T குறுமீன்களின் முன்வகைமையாக அமைகிறது.

GD 165B எனும் வான்பொருள் L கதிர்நிரல் வகைக் குறுமீன்களின் முன்வகையாக இருப்பது போல, கிலிசே 229B எனும் வான்பொருள், புதிய இரண்டாம் வகை T குறுமீன்களின் முன்வகைமையாக அமைகிறது. L குறுமீன்களின் அகச் சிவப்புக் கதிரண்மை கதிர்நிரல்கள், H2O, கரிம ஓராக்சைடு(CO) ஆகியவற்றின் வலிமையான உறிஞ்சல் பட்டைகளைக் காட்ட, கிளிசே 229B குறுமீனின் அகச் சிவப்புக் கதிரண்மை கதிர்நிரல்கள் ஓங்கலான மீத்தேனின் (CH4) உறிஞ்சல் பட்டைகளைக் காட்டுகிறது; இந்தக் கூறுபாடுகள் சூரியக் குடும்பத்தின் பெருங்கோள்களிலும் தித்தன் நிலாவிலும் அமைவனவாகும்.CH4, H2O, மூலக்கூற்று நீரக (H2) ஆகியவற்றின் மொத்தலால் தூண்டப்பட்ட உறிஞ்சல் கிளிசே 229B குறுமீனுக்கு நீலமான அகச் சிவப்புக் கதிரண்மை நிறங்களை நல்குகிறது. இதன் செஞ்சரிவான சிவப்பு ஒளியியல் கதிர்நிரலில் L குறுமீனின் பான்மையான FeH, CrH உறிஞ்சல் பட்டைகளும் இருப்பதில்லை; மாறாக, இது காரப் பொன்மங்களான சோடியம்(Na), பொட்டாசியம்(K) ஆகியவற்றின் மீத்திற அகன்ற உறிஞ்சல் கதிர்நிரல் கூறுபாடுகளின் தாக்கத்தைப் பெற்றுள்ளது. இந்த வேறுபாடுகளே கிர்க்பாட்ரிக்கை H, K , CH4 உறிஞ்சல் பட்டையை வெளியிடும் வான்பொருட்களுக்கு, T கதிர்நிரல் வகைக் குறுமீன்களை முன்மொழியச் செய்தது. 2013 வரையில், இதுவரை 355 T குறுமீன்கள் அறியப்பட்டுள்ளன.[22] அண்மையில், ஆதம் பர்காசரும் தோம் கெபால்லேவும் T கதிர்நிரல் வகைக் குறுமீன்களுக்கான அகச் சிவப்புக் கதிரண்மை வகபாட்டுத் திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.

Y கதிர்நிரல் வகை

ஓர் Y கதிர்நிரல் வகைப் பழுப்புக் குறுமீனின் ஓவியம்

Y குறுமீன்களில் எந்த கதிர்நிரல் பகுதியை வகைப்படுத்தலாம் எனும் ஐயம் நிலவிவருகிறது.[33][34] இவை T குறுமீன்களை விட மிகக் குளிர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கான கணிதப் படிமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன;[35] என்றாலும், இதுவரை இவ்வகைக்கான நன்கு வரையறுத்த கதிர்நிரல் வரிசை முன்வகைமை ஏதும் இன்னமும் அமையவில்லை.

மிகக் குளிர்ந்த பழுப்புக் குறுமீன்களின் வெப்பநிலைகள் 500 K வ்முதல் 600 K வரையில் அமையும் என 2009 இல் மதிப்பிடப்பட்டது. இவை T9 கதிர்நிரல் வகைச் சிறப்புப் பிரிவில் வகைபடுத்தபட்டன. இவற்றிற்கு எடுத்த்காட்டுகளாக CFBDS J005910.90-011401.3, ULAS J133553.45+113005.2, ULAS J003402.77−005206.7 ஆகிய பழுப்புக் குறுமீன்கள் அமைந்தன.[36]> இந்த வான்பொருட்களின் கதிர்நிரல்கள் 1.55 நுண் மீ உறிஞ்சல் பட்டைகலாக அமைந்தன.[36] Delorme et al. have suggested that this feature is due to absorption from ammonia and that this should be taken as indicating the T–Y transition, making these objects of type Y0.[36][37] என்றாலும் இந்தக் கூறுபாடு, நீர், மீத்தேன் உறிஞ்சல் பட்டைகளில் இருந்து வேறுபடுத்துவது அரிதாக இருந்தது;[36] என்வே, பிற ஆசிரியர்கள் இவற்றை Y0 வகைக் கதிர்நிரல் குறுமீன்களில் வகைபடுத்துவது அவ்வளவு சரியில்லை எனக் கூறினர்.[33]

இரண்டு புதியதாக கண்டுபிடித்த மீக்குளிர்வு துணைப்பழுப்புக் குறுமீன்களாகிய UGPS 0722-05, SDWFS 1433+35 ஆகியவை Y0 கதிர்நிரல் வகையின் முன்வகைமைகளாக 2010 ஏப்பிரலில் முன்மொழியப்பட்டது.[38]

உலுகுமான் குழுவினர் 2011, பிப்ரவரியில் தோரயமாக, 300 K வெப்பநிலையுள்ள 7 மடங்கு வியாழன் பொருண்மையுள்ள துணை பழுப்புக் குறுமீன் ஒரு வெண்குறுமீனுக்கு அருகில் உள்ளதைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.[34] உரோடிரிகுவசு குழுவினர் இது கோள் போன்ற பொருண்மையைக் கொண்டிருந்தாலும் , இது கோள்களைப் போல உருவாகியிருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகின்றனர்.[39]

சற்று பின்னர், இலியூ குழுவினர் ஒரு "மிகக் குளிர்வான" (~370 K) பழுப்புக் குறுமீனொன்று வேறொரு தாழ்பொருண்மை பழுப்புக் குறுமீனைச் சுற்றி வருவதாக வெளியிட்டு, மேலும், CFBDS J1458+10B எனும் இதன் "தாழ் ஒளிர்மையும் வகைமையற்ற நிறங்களும் தண்னிய வெப்பநிலையும் கருதுகோளியலான Y கதிர்நிரல் வகைக்குச் சரியான எடுத்துகாட்டாகௌம் எனவு குறிப்பிட்டுள்ளனர்."[40]

சில அறிவியலாளர்கள் 2011, ஆகத்தில் நாசாவின் வைசு நோக்கீட்டுத் தரவுகளைப் பயன்படுத்தி ஆறு "Y குறுமீன்களை"க் கண்டுபிடித்தனர்; இவை மாந்த உடல் வெப்பநிலை அளவுக்குக் குளிர்வான விண்மீனொத்த வான்பொருட்களாக அமைந்தன.[41][42]

WISEPC J045853.90+643451.9 என்பது வைசால் கண்டறியப்பட்ட முதல் மீக்குளிர்வு பழுப்புக் குறுமீன்(பச்சைப்புள்ளி). பச்சை, நீல நிறங்கள் அகச் சிவப்புக் க்திர் அலைநீளங்களில் இருந்து கட்புலக் காட்சிக்கு மாற்றியதால் வந்தனவாகும்.

வைசு தரவுகள் பல நூறு புதிய பழுப்புக் குறுமீன்களை இனங்காண்கின்றன. இவற்றுள், குளிர் Ys ஆக பதினான்கு குறுமீன்கள் வகைபடுத்தப்பட்டுள்ளன.[22] Y குறுமீன்களில் ஒன்றாகிய WISE 1828+2650 , 2011 ஆகத்தில், கட்புல ஒளியேதும் வெளியிடாத மிகக் குளிர்ந்தவொன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது; இவை விண்மீன்களைப் போலன்றி, கோள்களைப் போலவே அமைகின்றன. வைசு 1828+2650 குறுமீனின் வளிமண்டல வெப்பநிலையாக 300 கெ(K) மதிப்பை விடக் குளிர்ந்த ஒரு வெப்பநிலை கருதப்பட்டது.[43]ஒப்பீட்டுக்காக, அறை வெப்பநிலையின் மேல் மதிப்பு 298 கெ(K) (25 °செ, 80 °பா) ஆகும். இந்த வெப்பநிலை இப்போது மாற்றப்பட்டு, புதிய மதிப்பீடுகள் இந்த நெடுக்கத்தை இப்போது 250 to 400கெ( K) (23 முதல்127 °செ, −10–260 °பா) என வரையறுக்கின்றன.[44]மதிப்பீடு செய்த வெப்பநிலை 225 K முதல் 260 K வரையிலும் 3 முதல் 10 மடங்கு வியாழன் பொருண்மையும் உள்ள WISE 0855−0714 எனும் குறுமீன் அறிவிக்கப்ப்பட்டது.[45]இதன் வழக்கத்துக்கு மாறான நோக்கீட்டு இடமாறு தோற்றப்பிழை, இது சூரியனில் இருந்து, அண்மிய 7.2±0.7 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருப்பதைக் காட்டியது.

மதிப்பீடு செய்த வெப்பநிலை 225 K முதல் 260 K வரையிலும் 3 முதல் 10 மடங்கு வியாழன் பொருண்மையும் உள்ள WISE 0855−0714 எனும் குறுமீன் அறிவிக்கப்ப்பட்டது.[45]இதன் வழக்கத்துக்கு மாறான நோக்கீட்டு இடமாறு தோற்றப்பிழை, இது சூரியனில் இருந்து, அண்மிய 7.2±0.7 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருப்பதைக் காட்டியது.

பழுப்புக் குறுமீன்களின் கதிர்நிரல், வளிமண்டல இயல்புகள்

L, குறுமீன்களின் பெரும்பாலான கதிர்நிரல் உமிழ்வு, அண்மிய அகச் சிவப்புக் கதிர் நெடுக்கத்தில் 1 முதல் 2.5 நுண்மீ வரை அமைகிறது. M-, L-, T- குறுமீன்களின் வரிசையின் ஊடாக, முறையே குறைந்துவரும் வெப்பநிலைகள், அகல்விரிவான கூறுபாடுகளைக் கொண்ட செறிந்த அண்மிய அகச் சிவப்புக் கதிர் நெடுக்கத்தில் அமைகின்றன.இக்கதிர் நெடுக்கம், நொதுமலான அணுவகையின் ஓரளவு குறுகிய தொடர்வரிகளில் இருந்து அகன்ற மூலக்கூற்று பட்டைகள் வரை அமைகின்றன; இவை அனைத்தும் வெப்பநிலை, ஈர்ப்பு, பொன்மத் தன்மை ஆகியவற்றை பல்வேறு சார்புகளில் உள்ளன. மேலும், இந்த தாழ் வெப்பநிலை நிலைமைகள், வளிமநிலையில் இருந்து செறிந்து குறுனைகளாக அல்லது படிகமணிகளாக மாறுவதற்கு வழிவகுக்கின்றன.

நாமறிந்த குறுமீன்களின் நெடுக்க வளிமண்டலத்து வகைமை வெப்பநிலைகள் 2200 K இலிருந்து to 750 K வரை வேறுபடுகின்றன.[46] நிலைத்த அகப்பிணைவு வழி தம்ம்மை வெதப்படுத்திக்கொள்ளும் விண்மீன்களோடு ஒப்பிடும்போது, கால அடைவில் வேகமாக பழுப்புக் குறுமீன்கள் குளிர்ந்துவிடுகின்றன; பொருண்மை மிகுந்தவை மெதுவாகவும் தாழ் பொருண்மையுள்ளன வேகமாகவும் குளிர்கின்றன.

நோக்கீட்டு நுட்பங்கள்

சூரியன், வியாழன், கிளிசே 229A ஆகியவற்றோடு தீய்தே 1, கிளிசே 229B, வைசு 1828+2650 ஆகிய பழுப்புக் குறுமீன்களின் ஒப்பீடு

கிளிசே 229B உள்ளடங்கிய பொலிவான கட்புல விண்மீன்களைச் சுற்றிவரும் மங்கலான வான்பொருட்களைக் கண்டுபிடிக்க அண்மையில் சூரிய ஒளிப்புறணிவரைவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீய்தே 1 உள்ளடங்கிய தொலைவில் உள்ள விண்மீன்கொத்துகளின் மங்கலான வான்பொருட்களைக் கண்டுபிடிக்க மின்னேற்றப் பிணிப்புக் கருவிகள் பூட்டிய நுண்ணுணர்திறத் தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முப்பது ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கெலு-1 போன்ற தனித்த மங்கலான வான்பொருட்களை அகல்புலத் தேட்டங்கள் கண்டுபிடித்துள்ளன.

புறவெளிக் கோள்களைக் கண்டறியும் அளக்கைகளில் பழுப்புக் குறுமீன்கல் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன. புறவெளிக் கோள்களைக் கண்டறியும் முறைகள் பழுப்புக் குறுமீன்களையும் மிக எளிதாக கண்டுபிடிக்கின்றன.

பழுப்புக் குறுமீன்கள் வலைமை வாய்ந்த காந்தப்புலங்களைப் பெற்றுள்ளதால் திறல்மிகு கதிர்வீச்சு உமிழ்விகளாக அமைகின்றன.ஆரெசிபொ வான்காணக, மீப்பேரணித் தொலைநோகிகளின் நோக்கீட்டுத் திட்டங்கள் இதையொத்த பன்னிரு வான்பொருட்கலாஇக் கண்டுபிடித்துள்ளன; இவை கீக்குளிர்வுக் குறுமீன்கள் என அழைக்கப்படுகின்றன.ஏனெனில், இவை இந்தக் கதிர்நிரல் வகையை ஒத்த வழக்கமான கந்த இயல்புகளைப் பகிர்கின்றன.[47] பழுப்புக் குறுமீன்கள் வெளியிடும் கதிர்வீசு அலையுமிழ்வு நேரடியாக அவற்றின் காந்தப்புல செறிவுகளை அளக்க உதவுகின்றன.

கண்டுபிடிப்புக் காலநிரல்

  • 1995: முதல் பழுப்புக் குறுமீன் கண்டுபிடிப்பு நிறுவப்படுகிறது. தீய்தே 1 எனும் M8 வான்பொருள் கதிர்நிரல், கார்த்திகை விண்மீன்கொத்தில், கானரியாசு வானியற்பியல் நிறுவனத்தைச் சார்ந்த, உரோக் தெலாசு முச்சாசோசு நகர மின்னேற்றப் பிணிப்புக் கருவியமைந்த எசுப்பானிய வான்காணகத்தால் பெறப்பட்டது.
  • முதல் மீத்தேன் பழுப்புக் குறுமீன் கண்டுபிடிப்பு நிறுவப்படுகிறது. 20 ஒளியாண்டுகளுக்கு அப்பால் கிளிசே 229A செங்குறுமீனைச் சுற்றிவரும் கிளிசே 229B பழுப்புக் குறுமீன், தென்கலிபோர்னியா பலோமார் வான்காணகத்தின் 60-அங்குலம் (1.5 m) தெறிப்புவகைத் தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு, படிமங்களைக் கூர்மைப்படுத்தும் தகவமையொளியியல் கதிர்முகட்டு வரைவி பயன்படுத்தப்பட்டது. இக்குறுமீனில் மீத்தேன் செறிந்திருப்பதை அகச் சிவப்புக் கதிர்வரைவி அமைந்த, அவர்களது f200-அங்குலம் (5.1 m) கேல் தொலைநோக்கி காட்டியது.
  • 1998: முதல் X கதிர் உமிழ்வுப் பழுப்புக் குறுமீன் கண்டுபிடிப்பு நிறுவப்படுகிறது. சா கால்பா 1 எனும் M8 வகை வான்பொருள் அரணை(பச்சோந்தி) I கருமுகிலில் உள்ள X கதிர் உமிழும் வாயிலாக அமைவது கண்டுபிடிக்கப்பட்டது; இது வெப்பச் சுழற்சி பிந்தைவகை விண்மீன்களை ஒத்தமைந்தது .
  • 15 திசம்பர் 1999: ஒரு பழுப்புக் குறுமீனில் முதல் X கதிர் சுடர்வு கண்டுபிடிக்கப்பட்டது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் குழுவொன்று 16 ஒளியாண்டுகளுக்கு அப்பாலான, 60 வியாழன் பொருண்மையுள்ள LP 944-20 வான்பொருளைச் சந்திரா X கதிர் வாண்காணகத்தில் இருந்து கண்கானிக்கும்போது ஒரு இருமணி நேரச் சுடர்வைப் படம்பிடித்தது.[48]
  • 27 ஜூலை 2000: ஒரு பழுப்புக் குறுமீனில் முதல் கதிவீச்சலை உமிழ்வுச் சுடர்வும் தண்வளிமப்பரப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. மீப்பேரணித் தொலைநோக்கியில் இருந்த மாணவர் குழுவொன்று, LP 944-20 வான்பொருளில் இருந்துவரும் உமிழ்வைக் கண்டுபிடித்தனர்.[49]
  • 30 ஏப்பிரல் 2004: ஒரு பழுப்புக் குறுமீனைச் சுற்றிவரும் முதல் புறவெளிக் கோள் உறுப்படியொன்றின் கண்டுபிடிப்பு: 2M1207b என்பது மீப்பெரு தொலைநோக்கியால்(VLT) நேரடியாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் புறவெளிக் கோளாகும்.[50]
  • 20 மார்ச்சு 2013: சூரியனுக்கு மிக நெருக்கத்தில் உள்ள பழுப்புக் குறுமீன் அமைப்பின் கண்டுபிடிப்பு: உலுகுமான்.[51]
  • 25 ஏப்பிரல் 2014: மிகக் குளிர்ந்த பழுப்புக் குறுமீனின் கண்டுபிடிப்பு. 7 ஒளியாண்டுகளுக்கு அப்பாலமைந்த வைசு(WISE) 0855−0714 சூரியனுக்கு மிக அருகிலான ஏழாவது வான்பொருளாகும்; இது −48 முதல் −13 °செ வரையிலான வெப்பநிலை நெடுக்கத்தைக் கொண்டுள்ளது.[45]

X-கதிர் வகைப் பழுப்புக் குறுமீன்

தணல்வீச்சுக்கு முன்பும் அது நிகழும்போதும் எடுத்த LP 944-20 பழுப்புக் குறுமீனின் சந்திரா வாண்காணகப் படிமம்

பழுப்புக்குறுமீன்களில் 1999 இல் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட X கதிர் சுடர்வுகள், மிகத் தாழ் பொண்மை விண்மீன்களில் உள்ளது போல மாறும் காந்தப்புலங்கள் அமைதலைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

வலிமையான மைய அணுக்கரு ஆற்றல் வாயில் இல்லாததால், பழுப்புக் குறுமீன்களின் அகடு அல்லது உள்ளகம் வேகமாகக் கொந்தளித்த நிலயில் அல்லது வெப்பச் சுழற்சி நிலையில் இருக்கும். பெரும்பாலான பழுப்புக் குறுமீன்களின் வேகமான தற்சுழற்சியோடு இணைந்து வெப்பச் சுழற்சி, புறப்பரப்பில் வலிமையான கட்டிப்பிடித்த காந்தப்புலங்களை உருவாக்கும் நிலைமைகளை அமையச் செய்கிறது. LP 944-20 வான்பொருளில் இருந்து சந்திரா வான்காணகம் நோக்கிய சுடர்வு, அதன் மேற்பர்ப்புக்கு அடியில் நிலவும்கொந்தளிப்பு மிக்க காந்தமுற்ற வெம்பொருளால் தோன்ற வாய்ப்புண்டு. மேற்பரப்படிச் சுடர்வு வெப்பத்தை மேலமைந்த வளிமண்டலத்துக்குக் கடத்தி மின்னோட்டத்தைப் பாயச் செய்து, மின்னல் பாய்வைப் போல, X கதிர்ச் சுடர்வை உருவாக்கலாம்.சுடர்வு இல்லாதபோது LP 944-20 வான்பொருளில் X கதிர்களும் இன்மை இதை தெளிவாக்குகிறது. பழுப்புக் குறுமீன்களின் X கதிர் திறன் உருவாக்கம் மிகத் தாழ்வான நோக்கீட்டு வரம்பை அமைக்கிறது; இக்குறுமீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை 2800 கெ அளவுக்கும் கீழே குளிரும்போது அவை மின்னியலாக நொதுமல்நிலையை அடைந்து அதன் புறணித் தணல்வீச்சும் மறைகிறது.

அறிவியலாளர்கள் நாசாவின் சந்திரா X கதிர் வானகாணகத்தைப் பயன்படுத்தி, பல் விண்மீன் தொகுப்பில் அமைந்த ஒரு தாழ் பொருண்மை பழுப்புக் குறுமீனில் இருந்து X கதிர்கலாஇக் கண்டுபிடித்தனர்.[52] சூரியநிகர் TWA 5A போன்ற தாய்விண்மீனுக்கு நெருக்கமான பழுப்புக் குறுமீனில் இருந்து X கதிர்கள் உமிழ்வு கண்டறிந்தது இதுவே முதல் தடவையாகும்.[52]சந்திராவின் தரவுகள் பழுப்புக் குறுமீன்களின் புறணித் தணல்வீச்சு மின்ம ஊடகம் 3 மில்லியன் பாகை வெப்பநிலையில் உள்ளபோது, X கதிர்கள் உமிழ்வு ஏற்படும்" என்று தோக்கியோவில் உள்ள சுவோ பல்கலைக்கழக யாங்கோ துசுபோய் கூறுகிறார்.[52] மேலும், "இந்த பழுப்புக் குறுமீன், சூரியனைப் போல 50 இல் ஒரு பங்காக இருந்தாலும், இதன் X கதிர்கள் உமிழ்வு சூரியன் அளவுக்கு பொலிவோடு விளங்குகிறது", என்றும் துசுபோய் கூறியுள்ளார்.[52] " எனவே, இந்த நோக்கீடு, பொருண்மை மிக்க கோள்களும் தம் இளம்பருவத்தில் X கதிர்களை உமிழ்வதற்கான வாய்ப்பு உள்ளதை நிறுவுகிறது!"[52]

அண்மை ஆய்வுகள்

சா 110913-773444 எனும் பழுப்புக் குறுமீன் 50 ஒளியாண்டுகளுக்கு அப்பால் அமைந்த அரணை(பச்சோந்தி) விண்மீன் குழுவில் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இது ஒரு சிறு கோள் மண்டலத்தை உருவாக்கும் செயல்முறையில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பெஇசில்வேனியா அரசு பல்கலைக்கழக வானியலாளர்கள், சூரியக் குடும்பம் தோன்றியபோது இருந்ததாகக் கருதப்பட்டதை ஒத்த வளிம, தூசு வட்டு ஒன்றைக் க்ண்டுபிடித்துள்ளதாக நம்புகின்றனர். சா 110913-773444 இதுவரை கண்டுபிடித்தவற்றிலேயே மிகச் சிறிய பழுப்புக் குறுமீனாகும். இது வியாழனைப் போல எட்டு மடங்கினதாகும்; இது ஒரு கோள் மண்டலத்தை ஒருவேளை உருவாக்கினால், அது நாம் அறிந்துள்ளவர்றிலேயே மிகச் சிறிய கோள்மண்டலாக அமையும். இந்தக் கண்டுபிடிப்புகள் 2005 திசம்பர் 10 இல் வானியற்பியல் இதழின் கடிதங்களில் வெளியிடப்பட்டுள்ளது.[53]

நாமறிந்த பழுப்புக் குறுமீன் உறுப்படிகளின் அண்மைய நோக்கீடுகள், ஒளி பொலிவதும் மங்குவதுமான பாணியில் அவை அகச் சிவப்புக் கதிர்களை உமிழ்வதை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலை வெப்பமிகு அகட்டை மறைக்கும் ஓரளவுக்கு குளிர்ந்த ஒளிபுகா, மீவேகக் காற்றுகளாற் கிளர்வுறும், முகிலமைவையே முன்மொழிகிறது. இத்தகைய வான்பொருள்களின் மீதமையும் வானிலை மிகமிகக் கடுமை வாய்ந்ததாக, ஒப்பீட்டளவில் பெயர்பெற்ற வியாழப் புயல்களையும் மிஞ்சுவதாகவே அமையும்.

வானியலாளர்கள் 2013, ஜனவரி 8 இல் நாசாவின் அபுள், சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி 2MASS J22282889-431026 எனும் புலார்ந்த பழுப்புக் குறுமீனை ஆய்வு செய்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதன் விரிவான வானிலைப் படிமத்தை உருவாக்கியுள்ளனர்ரிது காற்று முடுக்க கோள் அளவு முகில்களைக் காட்டுகிறது. இந்தப் புதிய ஆராய்ச்சி பழுப்புக் குறுமீன்களைப் புரிந்துக் கொள்வது மட்டுமன்றி, சூரியக் குடும்பத்துக்கு அப்பால் உள்ள கோள்களின் வளிமண்டலங்களையும் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கிறது.[54]

நாசாவின் அகல்புல அகச்சிவப்புக் கதிர் அளக்கைத் தேட்டத் திட்டம்(வைசுத் திட்டம்) இதுவரை 200 எண்ணிக்கைக்கும் மேர்பட்ட புதிய பழுப்புக் குறுமீன்களைக் கண்டுபிடித்துள்ளது.[55] முன்பு நினைத்ததைப் போலல்லாமல், நமக்குக் கிட்டவுள்ள அண்டப் பின்னணியில் உண்மையில் சில பழுப்புக் குறுமீன்களே உள்ளன. ஒரு விண்மீனுக்கொன்று என்றில்லாமல், ஆறு வின்மீன்களுக்கு ஒன்றாகவே உள்ளன.[55]

கோள்களும் பழுப்புக் குறுமீன்களும்

பழுப்புக் குறுமீனைச் சுற்றியமைந்த தூசு, வளிம வட்டின் ஓவியம்.[56]

பழுப்புக் குறுமீன்களை பெரிய வட்டணையில் சுற்றிவரும் மீவியாழக் கோள்பொருண்மையுள்ள துணைஉடுக்கணப் பொருட்களான 2M1207b, 2MASS J044144 ஆகியவை வளிமக்குலைவால் ஏற்பட்டிருக்க வேண்டுமே ஒழிய அகந்திரள்வால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இவைதுணைப் பழுப்புக் குறுமீன்களாக அமையுமே தவிர கோள்களாக அமைய வாய்ப்பே இல்லை என்பது அவற்றின் பெரும்பொருண்மையும் பெருவட்டனைகளுமே உறுதிப்படுத்துகின்றன.ஆர விரைவு நுட்பத்தால், பழுப்புக் குறுமீனைச் சிறுவட்டணையில் சுற்றும் தாழ்பொருண்மைக் கோளான (சாHα8) இன் கண்டுபிடிப்பு, பழுப்புக் குறுமீன்களைச்சில வானியல் அலகு தொலைவில் அல்லது அதைவிட குறைவான தொலைவில் சுற்றும் கோள்களைக் கண்டறியும் வாய்ப்புகட்கு வழிவகுத்தது.[57][58] என்றாலும் சாHα8 எனும் கோளைப் பொறுத்தவரையில், முதன்மை, துணைப் பொருள்களுக்கிடையில் உள்ள பொருண்மை விகிதம் 0.3 என்பதால் இந்த அமைப்பு இரும விண்மீன் அமைப்பையே ஒத்துள்ளது . பிறகு 2013 இல் (OGLE-2012-BLG-0358L b) எனும் சிறுவட்டணையில் சுற்றும் தாழ்பொருண்மை கோள் ஒரு பழுப்புக் குறுமீனைச் சுற்றிவருவது கண்டறியப்பட்டது.[59]பிறகு 2015 இல் முதல் புவியொத்த மண்திணிந்த கோள் ஒரு பழுப்புக் குறுமீனைச் சுற்றிவருவது கண்டறியப்பட்டது. இது OGLE-2013-BLG-0723LBb எனப்பட்டது.[60]

பழுப்புக் குறுமீன்களைச் சுற்றிவரும் கோள்கள் பெரும்பாலும் நீரற்ற கரிமம் உள்ளவையாகவே அமையலாம்.[61]

பழுப்புக் குறுமீன் சுற்றியமையும் வட்டுகள், விண்மீன் வட்டுகளை ஒத்த பல இயல்கூறுகளைப் பெற்றிருக்கின்றன, ; எனவே, பழுப்புக் குறுமீன் சுற்றியமையும் அகந்திரண்ட கோள்கள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[62] பழுப்புக் குறுமீன் சுற்றியமையும் வட்டுகளின் சிறிய பொருண்மையைக் கருதும்போது, பெரும்பாலான கோள்கள் நிலக்கோள்களாக அமையுமே அன்றி, வளிமக்கோள்களாக இருக்க வாய்ப்பில்லை.[63] ஒரு பழுப்புக் குறுமீன் அருகில் ஒரு பெருங்கோள் சுற்றிவந்தால், தோராயமாக அவற்றின் விட்டங்கள் சம அளவில் இருப்பதால், நம் பார்வைக் கோட்டில் (கோள்கடப்பு முறையில் கண்டறிய) பெரிய குறிகையைத் தரும்.[64] பழுப்புக் குறுமீன் சுற்றியமையும் கோள்களுக்கான அகந்திரள் வட்டாரம் அதற்கு மிக அருகில் அமைகிறது. எனவே, இதன்மீது ஓத விசைகளின் விளைவு வலிமையாக இருக்கும்.[63]

வாழ்தகவு

பழுப்புக் குறுமீன்களைச் சுற்றும் கோள்களின் வாழ்தகவு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் தொடர்ந்த குளிர்வு நிகழ்வால் இவற்றின் கோள்களில் வாழும் சூழல் நிலைகள் அருகியே அமைதலைக் கணினி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் கோள்களின் வட்டணைகள் மிகவும் குறைந்த வட்டவிலக்கத்தை 10−6 கொண்டுள்ளன. எனவே பசுமைக் குடில் விளைவு தரும் வலிய ஓத விசைகள் தவிர்த்து கோள்களை வாழத் தகுதி அற்றனவாக மாற்றுகின்றன.[65]

மீஉயர் பழுப்புக் குறுமீன்கள்

  • WD 0137-349 B:தன் முதன்மைச் செம்பெருமீன் கட்ட விண்மீனில் இருந்து எஞ்சிநிலவும் முதன்முதல் பழுப்புக் குறுமீன்.[66]
  • சில வானியலாளர்கள் 1984 இல் சூரியனைச் சுற்றிவரும் பழுப்புக் குறுமீன் நிலவ வாய்ப்புள்ளதெனக் கருதினர்.இதை நெமிசிசு எனப் பெயரிட்டழைத்தனர். இது ஊர்த் முகிலுடன் ஊடாட்டம் புரிவதாகவும் அவர்கள் கருதிடலாயினர். என்றாலும் இக்கருதுகோள் மெல்ல மறைந்துவிட்டது.[67]
முதல் கண்டுபிடிப்புகளின் பட்டியல்
பதிவுபெயர்கதிர்நிரல் வகைவல ஏற்றம்/இறக்கக் கோணம்விண்மீன்குழுகுறிப்புகள்
முதல் கண்டுபிடிப்புதீய்தே 1 (கார்த்திகை திறந்த விண்மீன் கொத்து)M83h47m18.0s +24°22'31"தாரசு விண்மீன்குழு1989 இலும் 1994 இலும் படம்பிடிக்கப்பட்டது
ஒளிப்புறணி பதிவியால் முதலில் படம்பிடிக்கப்பட்டதுகிளீசு 229 BT6.506h10m34.62s −21°51'52.1"இலெப்பசு விண்மீன்குழு1994 இல் கண்டுபிடிக்கப்பட்டது
கோள்பொருளுடனான முதல் விண்மீன்2MASSW J1207334-393254M812h07m33.47s −39°32'54.0"சென்ட்டாரசு
கோள்பொருள் வட்டணையில் சுற்றும் முதல் விண்மீன்2M1207கோள் 2004 இல் கண்டுபிடிக்கப்பட்டது
முந்துகோள் வட்டமைந்த முதல் விண்மீன்
இருமுனையப் பாய்வுள்ள முதல் விண்மீன்
முதல் தனிவகை விண்மீன்தீய்தே 1M83h47m18.0s +24°22'31"தாரசு1995
இயல்பு விண்மீனின் முதல் துணை விண்மீன்கிளீசு 229 BT6.506h10m34.62s −21°51'52.1"இலெப்பசு1995
முதல் கதிர்நிரல்வகை இரும பழுப்புக் குறுமீன்PPL 15 A, B [68]M6.5தாரசுபாசுரி, மர்ட்டின், 1999
ஒளிமறைப்புள்ள முதல் இரும பழுப்புக் குறுமீன்2M0535-05 [69]

[70]

M6.5ஓரியன்இசுடாசுன் குழு, 2006, 2007 (தொலைவு ~450 பார்செக்)
முதல் T வகைப் பழுப்புக் குறுமீன்எப்சிலான் இண்டி Ba, Bb [71]T1 + T6இண்டசு (சிந்து) விண்மீன்குழுதொலைவு: 3.626 பார்செக்
முதல் மும்மை பழுப்புக் குறுமீன்தெனிசு-P J020529.0-115925 A/B/CL5, L8, T002h05m29.40s −11°59'29.7"சேதசுடெல்ஃபாசே குழு, 1997, mentions
முதல் வெளிவளிம வட்டப் பழுப்புக் குறுமீன்2மாசு J05325346+8246465துணைக்குறுமீன் L705h32m53.46s +82°46'46.5"ஜெமினி (இரட்டை) விண்மீன்குழுஆடம் ஜே. பர்காசர் குழு, 2003
முதல் பிந்தும்=M கதிர்நிரல்வகைதீய்தே 1M83h47m18.0s +24°22'31"தாரசு1995
முதல்L கதிர்நிரல்வகை
முதல் T கதிர்நிரல்வகைகிளீசு 229 BT6.506h10m34.62s −21°51'52.1"இலெப்பசு1995
அண்மைய-T கதிர்நிரல்ULAS J0034-00T9[72]சேதசு2007
முதல் Y கதிர்நிரல்வகைCFBDS0059[37]~Y02008; T9 பழுப்புக் குறுமீன் [72]
முதல் X-கதிர் உமிழ்வுவகைசா ஆல்பா 1M8அரணை(பச்சோந்தி) விண்மீன்குழு]]1998
முதல் X-கதிர்நிரல் வகைLP 944-20M9V03h39m35.22s −35°25'44.1"போர்னாக்சு1999
முதல் கதிரலை வீச்சுவகை (சுடர்விலும் அமைதிநிலையிலும்)LP 944-20M9V03h39m35.22s −35°25'44.1"போர்னாக்சு2000
முதல் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்முனைச் சுடர்வுகள் கண்டுபிடிப்புLSR J1835+3259M8.5இலைரா2015

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

அறுதி விண்மீன்கள் பட்டியல்
பதிவுபெயர்கதிர்நிரல் வகைவல ஏற்றம்/இறக்கக் கோணம்விண்மீன்குழுகுறிப்புகள்
மிக முதிர்ந்த்து
மிக இளையது
எடைமிக்கது
பொன்மச் செறிவானது
பொன்மநிலை குறைந்தது2மாசு J05325346+8246465துணைக்குறுமீன் L705h32m53.46s +82°46'46.5"ஜெமினி (இரட்டை) விண்மீன்குழுதொலைவு: ~10–30 பார்செக், பொன்மநிலை: 0.1–0.01; Zசூரியன்
மிக எடைகுறைந்தது
மிகப் பெரியது
மிகச் சிறியது
மிகத் தொலைவில் உள்ளதுவிசுப்பு 0307-7243[73]T4.503h07m45.12s −72°43'57.5"தொலைவு: 400 பார்செக்
மிக அருகில் உள்ளதுஉலுகுமான் 16தொலைவு: ~6.5 ஒளியாண்டு
மிகப் பொலிவானதுதீர்கார்டன் விண்மீன்M6.5jmag=8.4
மிகமிக மங்கலானதுவைசு 1828+2650Y2jmag=23
மிகச் சூடானது
மிகக் குளிர்ந்ததுவைசு 0855−0714[74]வெப்பநிலை -48 to -13 செல்சியசு
மிக உயரடர்த்திகொரோட்-3b[75]கோரட் 3b பழுப்புக் குறுமீன்களைக் கடக்கும் புறக்கோள்கள் வியாழன் கோள்நிகர் பொருண்மையும் 1.01±0.07 மடங்கு வியாழனின் விட்டமும் கொண்டுள்ளன. இதன் அடர்த்தி செந்தரநிலை ஆசுமிய் அடர்த்தியை விடச் சற்றே கூடுதலானது.
மிகக் குறைந்த அடர்த்தி

காட்சிமேடை

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Brown dwarf
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வரலாறு

  • S. S. Kumar, Low-Luminosity Stars. Gordon and Breach, London, 1969—an early overview paper on brown dwarfs
  • The Columbia Encyclopedia

விவரங்கள்

விண்மீன்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பழுப்புக்_குறுமீன்&oldid=3777572" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை