வெண் குறுமீன்

அடர்ந்த விண்மீன் எச்சம்

வெண் குறுமீன் (white dwarf) அல்லது வெண்குறளி அல்லது அழியும் குறளி என்பது ஓர் அடர்ந்த விண்மீன் எச்சம் ஆகும். இதில் பெரிதும் மின்னன்-அழிநிலைப் பொருண்மம் நிரம்பியிருக்கும். இது சூரியனை நிகர்த்த பொருண்மை அடர்த்தியும் ந்ம் புவியை ஒத்த பருமனும் கொண்டிருக்கும். இதன் மங்கலான பொலிவு அல்லது ஒளிர்மை தேக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் கதிர்வீச்சு உமிழ்வால் விளைவதாகும்.[1] மிக அருகே உள்ள வெண்குறலி சீரியசு B ஆகும். இது 6 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும் இது சீரியசு இரும விண்மீனின் சிறிய பகுதியாகும். இப்போது சூரியனுக்கு அருகே உள்ள விண்மீன் அமைப்புகளில் எட்டு வெண்குறளிகள் அமைந்துள்ளன எனக் கூறப்படுகிறது.[2] என்றி நோரிசு இரசலும் எட்வார்டு சார்லெசு பிக்கெரிங்கும் வில்லியமினா பிளெமிங்கும் 1910 இல் வெண்குறளிகளின் இயல்புக்கு மாறான மங்கலான பொலிவைக் கண்டுபிடித்தனர்;[3], p. 1 வெண்குறளி என்ற சொல் வில்லியம் உலூட்டன் அவர்களால் 1922 இல் உருவாக்கப்பட்டது.[4]

ஃஅபுள் விண்வெளித் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட சீரியசு A, சீரியசு B படிமம்.வெண்குறளியான சீரியசு B, பொலிவுகூடிய சீரியசு B யின் இடதுபுறத்தில் கீழே மங்கலான வெண்புள்ளியாக்க் காணப்படுகிறது.
வெண்குறளி அகவை முதிர்வு காட்டும் ஓவியம்

நொதுமி விண்மீனாகும் அளவுக்குப் பொருண்மை போதாத விண்மீன்கள் தம் படிமலர்ச்சி இறுதிக் கட்டத்தில் வெண்குறளிகளாக மாறுகின்றன எனக் கருதப்படுகிறது. இவற்றில் நம் சூரியனும் உள்ளடங்கும். மேலும் நம் பால்வழியில் அமைந்த 97% விண்மீன்கள் இத்தகையனவே.[5], §1. தாழ் அல்லது இடைநிலை பொருண்மை கொண்ட விண்மீன்களின் நீரகப் பிணைவு ஆயுட்காலம் முடிவுற்றதும், இவை விரிவடைந்து செம்பெருமீன்கள் ஆகின்றன, இந்நிலையில் இவை தம் அகட்டில் உள்ள எல்லியத்தைக் கரிமமாகவும் உயிரகமாகவும் மூ ஆல்பா வினையால் மாற்றுகின்றன. இவை கரிமத்தை பிணைக்கவல்ல 1 பில்லியன் K வெப்பநிலை உருவாகும் அளவுக்கான பொருண்மை வாய்த்திராவிட்டால். அப்போது இவற்றின் அகட்டில் கரிமமும் உயிரகமும் திரளும். பின்னர் இவற்றின் வெளி அடுக்குகள் உதிர்வுற்று, கோளாக்க வளிம வட்டாகும். எஞ்சியுள்ள அகடு வெண்குறுமீனாக மாறும்.[6] எனவே வெண்குறுமீன்களில் கரிமமும் உயிரகமும் நிலவும். ஆனால் செம்பெருமீனின் பொருண்மை 8 முதல் 10.5 மடங்கு சூரியப் பொருண்மையுடன் இருந்தால் கரிம்ம் பிணையவல்ல வெப்பநிலை உருவாகிக் கரிமம் நியானாக மாறும். இந்நிலையில் உயிரகம், நியான், மகனீசியம் அகடுள்ள வெண்குறுமீனாகும்.[7] மேலும் சில எல்லியம் அமைந்த வெண்குறுமீன்களும்[8][9] இரும விண்மீன் அமைப்பில் நிகழும் பொருண்மையிழப்பால் உருவாகின்றன.

வெண்குறுமீனின் பொருட்கள் மேலும் பிணைப்பு வினையை மேற்கொள்ள முடியாத்தால் பிணைப்பால் அதில் வெப்பம் உருவாகாது. எனவே விண்மீனுக்கு ஈர்ப்புக் குலைவை எதிர்கொள்ளுவதற்கான ஆற்றலைத் தரும் வாயில் ஏதும் இல்லை. இந்நிலையில் மின்னன் அழிவெதிர்ப்பு அழுத்தம் மட்டுமே அதைத் தாங்குகிறது. எனவே விண்மீன் உயரடர்த்தியுள்ளதாகிறது. சுழலாத வெண்குறுமீனுக்கு இந்த அழிவெதிர்ப்பு இயற்பியல் பெருமப் பொருண்மையை, அதாவதுசந்திரசேகர் வரம்பான 1.4 மடங்குச் சூரியப் பொருண்மையை, ஈட்டுகிறது. இந்நிலைக்குப் பிறகு இது மின்ன்ன் அழிவெதிர்ப்பு அழுத்தத்தால்தஙிப் பிடிக்க இயலாது. இந்த கட்டமெய்தும் கரிம-உயிரக வெண்குறுமீன் தன் துணை விண்மீனில் இருந்துபொருண்மை பரிமாற்றத்தால் பொருண்மை வரம்பை அடைந்து கரிம த் தகர்வெடிப்பு வினையால் வகை 1a விண்மீன் பெருவெடிப்புக்கு ஆட்படும்.[1][6] (SN 1006 is thought to be a famous example.)

தோன்றிய நிலையில் வெண்குறுமீன் மிகவும் சூடாக இருக்கும். ஆனால் ஆற்றல் வாயில் எதும் இல்லாததால், இது தொடர்ந்து ஆற்றலை வெளியிட்டுக் குளிரும். அதாவது உயர்வெப்பத்தில் வெண்மை நிறத்தில் இருந்த விண்மீன்கால அடைவில் சிவப்பாகும்.நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மிகவும் குளிர்ந்து ஒளியோ வெப்பமோ எந்த வகைஆற்றலும் வெளியிடமுடியாத நிலையை அடைந்து, மிக்க் குளிர்ந்த கருப்புக் குறுமீன் ஆகிவிடும்.[6] என்றாலும் இந்நிலை எய்த அது புடவியின் அகவையை விட கூடுதலான காலம், அதாவது 13.8 பில்லியன் ஆண்டுகள், எடுத்துக் கொள்ளும்.[10] எந்தவொரு வெண் குறுமீனும் அகவையில் புடவியினும் கூடுதலாக அமைய வாய்ப்பில்லை என்பதால் இதுவரை கருங்குறுமீன்கள் நிலவ வாய்ப்பேயில்லை எனக் கருதப்படுகிறது.[1][5] மிகப் பழைய வெண் குறுமீன்கள் இன்னமும் சில ஆயிரம் கெல்வின் வெப்பநிலையுடன் கதிர்வீசுகின்றன.

கண்டுபிடிப்பு

சிறப்பியல்புகள்

  • சூரியனையொத்த நிறையுடைதாக இருப்பினும், இதன் அளவு பூமியை ஒத்ததாக இருப்பதால் அடர்த்தி மிகவும் அதிகமாகவிருக்கும் (1 x 109 kg/m3). பூமியின் அடர்த்தியை (5.4 x 103 kg/m3) ஒப்பிடுகையில் வெண் குறுமீன் 200,000 மடங்கு அடர்வு மிகுந்து இருக்கும் ; அதாவது, சீனிப்படிக அளவுள்ள (வெண் குறுமீனின்) ஒரு சிறு துண்டு நீர்யானையின் எடையுடையதாய் இருக்கும்.[11]

வெண் குறுமீனின் வகைகள்

கலைச்சொற்கள்

  • படிமலர்ச்சி முடிவுப்புள்ளி - evolutionary endpoint;
  • உமிழ்வு ஒண்முகில் - emission nebula ;
  • ஈர்ப்பெதிர்-நிலை மின்னன் அழுத்தம் - degenerate-electron pressure;
  • சீனிப்படிகம் - sugar cube.

குறிப்புகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்பும் கூடுதல் பார்வைநூல்களும்


பொது

இயற்பியல்

உருவாக்கம்

மாறுதிறன்

காந்தப் புலம்

  • Wickramasinghe, D. T.; Ferrario, Lilia (2000). "Magnetism in Isolated and Binary White Dwarfs". Publications of the Astronomical Society of the Pacific 112 (773): 873. doi:10.1086/316593. Bibcode: 2000PASP..112..873W. 

அலைவெண்

நோக்கீடுகள்

படிமங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வெண்_குறுமீன்&oldid=3777926" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை