வியட்நாம் ஒருங்கிணைப்பு நாள்

ஒருங்கிணைப்பு நாள் (Reunification Day) (Ngày Thống nhất), வெற்றி நாள் (Victory Day) (Ngày Chiến thắng) அல்லது விடுதலை நாள் (Liberation Day) (Ngày Giải phóng அல்லது Ngày Giải phóng miền Nam) அல்லது தேச ஒருங்கிணைப்புக்கு தெற்கின் விடுதலைபெற்ற நாள் (Giải phóng miền Nam, thống nhất đất nước) எனும் அலுவல்பெயர் உள்ள நாள்[1] என்பது வியட்நாமில் ஒரு பொது விடுமுறை நாளாகும். இது வியட்காங் படையும் வடக்கு வியட்நாம் படையும் சாய்கோன் தலைநகரைக் கைப்பற்றிய நாளைக் குறிக்கிறது. சாய்கோன் வீழ்ந்த, 1975 ஏப்பிர்ல் 30 இல் இருந்து இது ஓ சி மின் நகரம் என வழங்குகிறது. இது வியட்நாம் போரின் முடிவைச் சுட்டுகிறது. வியட்நாம் போர் வியட்நாம் மொழியில் Chiến tranh Việt Nam (Vietnam War) அல்லது Kháng chiến chống Mỹ cứu nước ("அமெரிக்க முற்றுகையைத் தகர்த்த போர்") எனப்படுகிறது. இது வியட்ந்நம் ஒருங்கிணைப்புக்கான மாற்றக்காலத் தொடக்க நாளாகும். வியட்நாம் 1976 ஜூலை 2 இல் ஒருங்கிணைந்தது. அப்போது தென்வியட்நாம் குடியரசு, வடக்கு வியட்நாம் குடியரசு ஆகிய இரண்டின் புரட்சி அரசுகள் இணைந்து, தற்கால வியட்நாம் அல்லது வியட்நாம் சமவுடைமைக் குடியரசு உருவாகியது.

ஒருங்கிணைப்பு நாள்
கனாயில் ஒருங்கிணைப்புப் பதாகை
அதிகாரப்பூர்வ பெயர்ஒருங்கிணைப்பு நாள் (Ngày Thống nhất)
பிற பெயர்(கள்)Day of liberating the South for national reunification (Giải phóng miền Nam, thống nhất đất nước)
Black April (Tháng Tư Đen)
விடுதலை நாள் (Ngày Giải phóng)
வெற்றி நாள் (Ngày Chiến thắng)
தேசிய வெட்குதல் நாள் (Ngày Quốc Nhục)
தேசிய வருந்தல் நாள் (Ngày Quốc Hận)
சாய்கோன் வீழ்ச்சி (Sài Gòn Thất thủ)
கடைபிடிப்போர்வியட்நாமியர்
வகைதேசிய நாள்
முக்கியத்துவம்சய்கோனை வட வியட்நாம் பிடித்த நாள்
அனுசரிப்புகள்புலம்பெயர் வியட்நாமியர்
நாள்ஏப்பிரல் 30
நிகழ்வுannual
தொடர்புடையனசாய்கோன் வீழ்ச்சி

இந்த விடுதலை நாள் பல்வேறு விழாக்களாகக் கொண்டாடப்படுகிறது.

பன்னாட்டு புலம்பெயர் வியட்நாமியர்கள் இந்நாளை "சாய்கோன் வீழ்ச்சி", "கருப்பு ஏப்பிரல் (Tháng Tư Đen)" அல்லது [2][3][4][5][6][7] தேசிய வெட்குதல் நாள் (Ngày Quốc Nhục) அல்லது தேசிய வருத்த நாள் (Ngày Quốc Hận) என நினைவுகூர்கின்றனர்.[3][8][9][10][11] இது புலம்பெயர் வியட்நாமியருக்கு தங்கள் அவலத்தின் நினைவுகூர் நாளாக அமைகிறது.

காட்சி மேடை

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை