வி. எல். சி. ஊடக இயக்கி

காணொளிகளை காணக் கூடிய வி.எல்.சி ஊடக இயக்கியானது தமிழ் மொழியில் கிடைக்கிறது.

வி. எல். சி. ஊடக இயக்கி (ஆங்கிலம்: VLC Media Player) என்பது ஓர் இலவச ஊடக இயக்கி ஆகும். இந்த மென்பொருள் கோப்புகள், குறுவட்டுக்கள், இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுக்கள் என்பனவற்றிலிருந்து காணொளிகளைத் திறக்கக் கூடியது.[1] வி. எல். சி. ஊடக இயக்கி தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது.

வி. எல். சி. ஊடக இயக்கி
தொடக்க வெளியீடுபெப்ரவரி 1, 2001; 23 ஆண்டுகள் முன்னர் (2001-02-01)
மொழிசி, சி++
இயக்கு முறைமைகுனூ லினக்சு, விண்டோஸ் 2000 சேவைப் பொதி 4உம் அதற்குப் பிந்தியவையும், மாக் ஓ. எசு.
கிடைக்கும் மொழி53 மொழிகள்
மென்பொருள் வகைமைஊடக இயக்கி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம் பதிப்பு 2 மற்றும் அதற்குப் பிந்தியவை
இணையத்தளம்http://www.videolan.org/vlc

வசதிகள்

வி. எல். சி. ஊடக இயக்கியானது காணொளிகள், ஒலிக் கோப்புகள் என்பனவற்றைத் திறக்கக் கூடியது.[2][3] இந்த மென்பொருளை இலகுவாகக் கையாள முடியும். அத்துடன் வி. எல். சி. ஊடக இயக்கியானது சக்தி வாய்ந்ததும் வேகமானதும் ஆகும். கோப்புக்கள், வட்டுக்கள் (குறுவட்டு, இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு), வலைப் புகைப்படக் கருவிகள், இணையத்தில் உள்ள காணொளிகள் என்பனவற்றைத் திறக்கக் கூடியது. முற்றிலும் இலவசமானதும் கட்டற்றதுமான வி. எல். சி. ஊடக இயக்கி விளம்பரங்கள் அற்ற மென்பொருளாகும். விண்டோஸ், லினக்சு, மாக் ஓ. எசு., யுனிக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வி.எல்.சி.
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை