வீ

வீ ( wii ) என்று அழைக்கப்படும் நிகழ்பட விளையாட்டு சாதனம் முதன்முறையாக நின்டென்டோ என்ற ஜப்பானிய நிறுவனத்தால் டிசம்பர் 6ஆம் திகதி 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போதய சந்தையில் விற்கப்படும் வீ சாதனங்கள், ஏழாம் தலைமுறையை சார்ந்தவை. வீ நிகழ்பட விளையாட்டு சாதனத்தின் முக்கிய போட்டியாளராக கருதப்படும் மற்ற சாதனங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் 3 ஆகும். வீ நிகழ்பட விளையாட்டு சாதனம் வீ தொலைதொடர்பு கருவி, வீ உணர்கருவி, வீ முனையம் ஆகியவற்றை உள்ளடக்கியது. வீ முனையம் தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டு, இயக்குபவர் விளையாடும் விளையாட்டின் நிகழ்படம், தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் காண்பிக்கப்படும். இந்நிகழ்பட சாதனத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது, இச்சாதனம் இதை இயக்குபவரின் அங்க அசைவுகளை துல்லியமாக அனுமானித்து அதற்கு எற்றவாறு திரையில் காட்சிகளை மாற்றவல்லது. இயக்குபவரின் கையில் இருக்கும் வீ தொலைதொடர்பு கருவியின் அசைவுகளை 3 பரிமாணத்திலும் கணிக்கவல்ல வீ உணர்கருவி மூலம் இது சாத்தியமாகிறது. இத்தன்மைகளால் விளையாட்டின்போது, நேரடியாக உண்மையில் விளையாடுவதுபோன்ற அனுபவத்தைப் பெறலாம்.

வீ
தயாரிப்பாளர்நின்டென்டோ
வகைநிகழ்பட ஆட்ட இயந்திரம்
தலைமுறைஏழாம் தலைமுறை
முதல் வெளியீடுநவம்பர் 19, 2006
CPUPowerPC
ஊடகம்குறுவட்டு
நினைவகம் 512 மெகாபைட்டு Internal திடீர் நினைவகம்
உள்ளீட்டு கருவிகள்வீ தொலைதொடர்பு கருவி, நின்டென்டோ கேம்கியுப் கட்டுபாட்டாளர்
இணைப்புஒய்-ஃபை 2 × USB 2.0 LAN Adapter (via USB)
இணையச் சேவைWi-Fi இணைப்பு வீ விற்பனை அலைவரிசை
விற்பனை எண்ணிக்கை34.55 மில்லியன்
அதிகம் விற்பனையாகும் விளையாட்டுவீ விளையாட்டு
முந்தைய வெளியீடுநின்டென்டோ கேம்கியுப்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வீ&oldid=2438516" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை