வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931

வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 (Statute of Westminster 1931) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டச் சட்டமாகும்.இது திசம்பர் 11, 1931 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தன்னாட்சி உடைய பிரித்தானியப் பேரரசின் மேலாட்சி நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்துடனும் மற்ற மேலாட்சிகளுடனும் சமநிலையை அளித்தது. இந்தச் சட்டத்தை ஒத்த ஆனால் தனியான சட்டங்களை ஒவ்வொரு பொதுநலவாய இராச்சியமும் தங்கள் நாடாளுமன்றங்களில் உடனடியாகவோ அல்லது ஏற்பு வழங்கியபோதோ நிறைவேற்றின. இச்சட்டத்தினை விலக்கும் மாற்றுச் சட்டம் நிறைவேற்றப்படும்வரை இந்த பொதுநலவாய இராச்சியங்களில் இச்சட்டம் செயற்பாட்டில் உள்ளது. இந்த நாடுகளின் சட்டவாக்க அவைகளுக்கு முழுமையான விடுதலை கொடுப்பதுடன் பொதுநல இராச்சியங்களுக்கும் பிரித்தானிய அரசிக்கும் (அரசர்) இச்சட்டம் பிணைப்பை உருவாக்குகிறது.[2]

வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், 1931[1]
நீளமான தலைப்பு1926இலும் 1930இலும் இம்பீரியல் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களை செயற்படுத்த வகைசெய்யும் சட்டம்.
அதிகாரம்22 & 23 Geo. 5 c. 4
நாட்கள்
அரச ஒப்புமை11 திசம்பர் 1931
நிலை: நடப்பிலுள்ள சட்டம்

நினைவு விழா

தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் ஓர் பாகமாக இருக்கும் சில நாடுகள், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு நிறைவை நினைவுறும் வண்ணம் கொண்டாடுகிறார்கள். கனடாவில் திசம்பர் 11 அன்று அரசக் கட்டிடங்களில் ஐக்கிய இராச்சியக் கொடி (கனடாவில் இது ரோயல் யூனியன் கொடி என்றழைக்கப்படுகிறது) பறக்கவிடப்படுவது கட்டாயமாகும்.[3] இதற்கான கொடிமரங்கள் இந்தக் கட்டிடங்களில் உள்ளன.

மேலும் காண்க

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை