வேதியியலுக்கான வேந்திய சங்கம்

வேதியியலுக்கான வேந்திய சங்கம் (Royal Society of Chemistry) என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட ஒரு உயர்தொழில்சார் சங்கம் ஆகும். வேதியியல்சார் அறிவியல்களை முன்னேற்றுவதே இதன் நோக்கம். வேதியியல் சங்கம், வேதியியலுக்கான அரச நிறுவனம், பரடே சங்கம், பகுப்பாய்வு வேதியியலுக்கான சங்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, 1980 ஆம் ஆண்டில் அரச பட்டயத்துடன் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஐக்கிய இராச்சியத்தில் இதற்கு 34,000 உறுப்பினர்களும், வெளிநாடுகளில் 8,000 உறுப்பினர்களும் இருந்தனர். இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள பிக்காடிலியில் பேர்லிங்டன் மாளிகையில் அமைந்துள்ளது. இதன் வெளியீட்டுப் பிரிவு கேம்பிரிட்சில் தாமசு கிரகாம் அவுசில் (Thomas Graham House) உள்ளது. ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியே, ஐக்கிய அமெரிக்காவில் பிலடெல்பியாவில் உள்ள பல்கலைக்கழக நகர் அறிவியல் மையத்தில் ஒரு அலுவலகமும், சீனாவில் பீஜிங்கிலும், சாங்காயிலுமாக இரண்டு அலுவலகங்களும், இந்தியாவில் மும்பாயில் ஒரு அலுவலகமும் உள்ளன.

வேதியியலுக்கான வேந்திய சங்கம்
உருவாக்கம்1980 (1877)
வகைதுறைதேர்ந்தோர் சங்கம்
தலைமையகம்இலண்டன்
தலைமையகம்
உறுப்பினர்கள்
46,000
ஆட்சி மொழி
ஆங்கிலம்
வலைத்தளம்http://www.rsc.org/
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை