திருப்பெரும்புதூர்

(ஸ்ரீபெரும்புதூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருப்பெரும்புதூர் (ஆங்கிலம்:Sriperumbudur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புதூர் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். மேலும் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு இயங்குகிறது.

திருப்பெரும்புதூர்
திருப்பெரும்புதூர்
இருப்பிடம்: திருப்பெரும்புதூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம்12°57′45″N 79°56′43″E / 12.962500°N 79.945300°E / 12.962500; 79.945300
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
வட்டம்திருப்பெரும்புதூர்
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
மக்களவை உறுப்பினர்

த. ரா. பாலு

சட்டமன்றத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்ற உறுப்பினர்

கு. செல்வப்பெருந்தகை(இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

24,864 (2011)

1,480/km2 (3,833/sq mi)

நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

19.39 சதுர கிலோமீட்டர்கள் (7.49 sq mi)

66 மீட்டர்கள் (217 அடி)

இணையதளம்www.townpanchayat.in/sriperumbudur

திருப்பெரும்புதூர் வைணவ ஆச்சாரியரான இராமானுசர் பிறந்த தலமாகும். இப்பேரூராட்சி பகுதியில் ஆதிகேசவபெருமாள் மற்றும் இராமானுஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நினைவிடமும் இப்பேரூராட்சி பகுதியில் உள்ளது.

அமைவிடம்

திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்கு தெற்கே காஞ்சிபுரம் 38 கிமீ; வடக்கே சென்னை 33 கிமீ; கிழக்கே தாம்பரம் 25 கிமீ; மேற்கே திருவள்ளூர் 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

19.39 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 383 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4][5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,318 வீடுகளும், 24,864 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86.26% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 950 பெண்கள் வீதம் உள்ளனர்.[6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°58′N 79°57′E / 12.97°N 79.95°E / 12.97; 79.95 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 37 மீட்டர் (121 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தொழிற்சாலைகள்

  • டெல் - மடிக்கணினி, மேசைக் கணினி உற்பத்தி தொழிற்சாலை
  • ஹுன்டாய் தானுந்து தொழிற்சாலை
  • ஜெ.கெ டயர்ஸ்
  • செயிண்ட் கோபைன்
  • பாக்ஸ்கான்
  • சாம்சங் - குளிர்சாதன பெட்டி

ஆதாரங்கள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை