ஹொங்கொங் ஏர்லைன்சு

ஹொங்கொங் ஏர்லைன்சு லிமிடெட் (Hong Kong Airlines Ltd (Chineseமரபுவழிச் சீனம்: 香港航空公司), IATA: HX என்பது ஹொங்கொங்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும், அதன் தலைமையகம் துங் சுங் மாவட்டத்தில் உள்ளது. மேலும் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் அதன் முக்கிய மையமாக உள்ளது. இது 2006 இல் ஹெச்.என்.ஏ. குழுமத்தின் உறுப்பினராக நிறுவப்பட்டது.

ஹொங்காங் ஏர்லைன்சானது வளர்ந்து வரும் வலைப்பின்னலாகும்.  தற்போது கோல்ட் கோஸ்ட், ஆக்லாந்து, பெய்ஜிங், ஷாங்காய், பாங்காக், பாலி, தைப்பி, சியோலோ, டோக்கியோ, சப்போரா மற்றும் ஒகினாவா, மற்றும் 2017 இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வான்கூவர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பாதைகளில் 30 பிராந்திய நகரங்களில் உள்ளடக்கி சேவையை வழங்கிவருகிறது. இந்த வானூர்தி நிறுவனத்தில் 35 வானூர்திகள் இணைக்கப்பட்டுள்ளன. 2017 செப்டம்பர் வரையான சுமார் 5 ஆண்டுகளில் சராசரியாக 31 விமானங்களுடன் நிறுவனம் இருந்துள்ளது.

வரலாறு

ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையத்தில், ஏ சிஆர்  ஏர்வேஸ் போயிங் 737-800. (2006)

2001-2006: துவக்க ஆண்டுகள்

சீன மருத்துவம், இணைய தளம், கட்டுமானம் மற்றும் சொத்து மேம்பாடு ஆகியவற்றில் வணிகங்களில் ஈடுபாடு  கொண்ட சீன ராச் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் யப் 2001 மார்ச் 28 இல் ஹாங்காங்கில் சிஆர் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவினார்.[1][2] இந்த வானூர்தி நிறுவனமானது 2002 ஆம் ஆண்டு ஹொங்கொங் சிவில் விமான போக்குவரத்துத் துறையிடம் (கே.ஏ.டி) இருந்து ஏர் ஆபரேட்டர் சான்றிதழையும் (ஏ.ஓ.ஓ.)  மணி நேரத்துக்கு 285 கிலோமீட்டரில்  12 பயணிகள் சிகோர்ஸ்கி எஸ்-76 சி உலங்கு வானூர்திகளை இயக்க அனுமதியும் பெற்றது.  இது ஆங்காங்கின் மூன்றாவது வணிக உலங்கு வானூர்தி இயக்கு நிறுவனம் மற்றும்  சீன மக்கள் குடியரசின் ஒரு சிறப்பு நிர்வாக பிராந்தியமாக ஹாங்காங் இணைக்கப்பட்ட பிறகு, ஏஓசி பெற்ற முதல் உலங்கு வானூர்தி இயக்கு நிறுவனமாகும்.[3]

2003 சூன் 27 இல், ஏர்போர்ட் லாம் இயக்குநரிடம் திருத்தப்பட்ட ஏஓசியைப் பெற்ற  சி.ஆர்.ஏ ஏர்வேஸ் ஹொங்கொங்கின் மூன்றாவது பயண  வானூர்தி சேவை நிறுவனமாக மாறியது. மறுநாளை தன் முதல் பயனிகள் வானூர்தியை இயக்கியது.[4] ஜிபி கேபிடல் ஏவியேஷன் சர்வீஸிலிருந்து ஒரு பாம்பார்டியர் சி.ஆர்.ஜி.200 குத்தகைக்கு எடுத்த பின்னர் 2003 சூலை 5 அன்று பிலிப்பைன்சின், லாகாகிற்கு பயணிகள் போக்குவரத்தைத் தொடங்கியது.[5][6]  2003 செப்டம்பரில், நிறுவனமானது  லாங்காக் மற்றும் சீன நகரான ஜினான், நினிங், மெக்ஷியன் மற்றும் வென்ஜோ ஆகியவற்றிற்கு பயணிகள் சேவைக்கான போக்குவரத்து உரிமைக்கு விண்ணப்பித்தது.  இந்நிலையில், ராபர்ட் யிப் தனது வானூர்தி நிறுவனத்தின் 40 விழுக்காடு பங்கை  சீன பணக்கார ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு HK $ 180 மில்லியனுக்கு விற்றது.[7]  நிறுவனமானது 2004 மார்ச்சில், தனது போக்குவரத்து வலைப்பின்னலில் கம்போடியாவின் சேம்பல் நெட்வொர்க்கை சியெம் ரீப்யைச் சேர்த்தது.

ஹாங்காங் ஏர்லைன்சின் ஒரு போயிங் 737-800 ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டது. 

2005 ஏப்ரலில், ஹாங்காங் ஏர் டிரான்ஸ்பார்ட் உரிமம் வழங்கும் ஆணையம் (ATLA) சீனாவிற்கு பயணிகள், சரக்குகள் மற்றும் அஞ்சல் சேவைகளைக் கையாள ஐந்து வருட உரிமத்தை நிறுவனத்துக்கு வழங்கியது; நிறுவனமானது சீனாவில் 10 நகரங்களுக்கு வானூர்தி போக்குவரத்து வழங்குவதற்கு கட்டற்ற உரித்துக்கு விண்ணப்பித்தது.[8] 2005 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி, டென்மார்க் நிறுவனமான மேயெர்ஸ்க் ஏர்னிடமிருந்து இரண்டு பாம்பார்டியர் CRJ700 களை வாங்குவதாக நிறுவனம் அறிவித்தது.[9]  மேலும், 2005 ஆம் ஆண்டு திசம்பர் 20 ஆம் தேதி அன்று  3.28 பில்லியன் அமெரிக்க டாலரில் 10 போயிங் 787 ட்ரீம்லைனர் மற்றும் 30 போயிங் 737-800 க்கள் வாங்குவதற்கு போயிங் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. போயிங் விமானம் ஹெய்னான் ஏர்லைன்ஸின் ஆர்டரில் இருந்து வந்ததாக விமான நிறுவன நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.[10][11]

2006: உரிமையாளர் மாற்றம் 

2006 சூன் 27 அன்று, ஹைனான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமானது இந்த நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கி, ஹோயிங்ஸ் ஹைனான் ஏர்லைன்ஸின் புதிய ஹோல்டிங் நிறுவனமான கிராண்ட் சீனா ஏர் நிறுவனத்திற்கு மாற்றியது.[12] இரண்டு மாதங்களுக்குப் பின்னர், திரு முங் கின் கியூங், மீதமுள்ள 55 சதவீத பங்குகளை வாங்கி  ஆகத்து 7 இல் கட்டுப்பாட்டு பங்குதாரராக மாறினார்; மேலும் அதன் இயக்குனராக ஆகஸ்ட் 13 அன்று ஆனார். 2006  செப்டம்பர் 22  இல், சி.ஆர் ஏர்வேஸ் லிமிடெட் என்ற பெயர் ஹொங்கொங் ஏர்லைன்ஸ் லிமிடெட் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. அதன் துவக்க விழா 2006 நவம்பர் 28, அன்று நடந்தது. விமான நிறுவனம் ஒரு புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தியது, இது  ஆத்தி பூவை அடையாளப் படுத்தும் விதமாக இருந்தது, இது ஹாங்காங்கின் குறியீடாகும். புதிய இலட்சினையானது விமான நிறுவனத்திற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான நெருங்கிய உறவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் உள்நாட்டு விமானத் துறையில் அதன் புதிய  சகாப்தத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[13]  இந்த நிறுவனமானது  ஐரோப்பிய விமானத் தயாரிப்பு தயாரிப்பாளரான ஏர்பஸ்சிலிருந்து  51 பெரிய விமானங்களை 6 பில்லியன் டாலர் மதிப்பில் ஆர்டர் செய்வதன் மூலம் 2007 சூலை 21 இல் அதன் இளம் வரலாற்றில் மிகப்பெரிய வானூர்தி வரிசையை இந்த விமான நிறுவனம் உருவாக்கியது.[14] விமான நிறுவனத்தின் IATA குறியீடானது 2007 மே 27  இல் N8 லிருந்து HX என்று மாற்றப்பட்டது.[15]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஹொங்கொங்_ஏர்லைன்சு&oldid=3352735" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை