ஏர்பஸ்

அமெரிக்க விமான தயாரிப்பாளர்கள்

ஏர்பஸ் (Airbus) என்பது வானூர்தி தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் ஈடுபட்டுள்ள ஒரு ஐரோப்பிய தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமையகம் பிரான்சு நாட்டின் துலூஸ் நகரின் அருகில் அமைந்துள்ளது.[5] ஏர்பஸின் சட்டப்பூர்வ தலைமையகம் நெதர்லாந்தின் லீடன் நகரில் உள்ளது. ஆனால் தினசரி நிர்வாகம் பிரான்சில் உள்ள நிறுவனத்தின் பிரதான தொழில்முறை தலைமையக அலுவலகத்தில் இருந்து நடத்தப்படுகிறது.[6] இந்நிறுவனத்தின் முதன்மை தொழில் வணிக வானூர்திகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியாகும். இது தவிர ஏர்பஸ் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்றும் உலங்குவானூர்தி ஆகிய இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஏர்பஸ் உலகின் மிகப்பெரிய வானூர்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும்.[7][8]

ஏர்பஸ்
Airbus
வகைபொதுப் பங்கு நிறுவனம்
தலைமையகம்துலூஸ், பிரான்சு
லீடன், நெதர்லாந்து
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
தொழில்துறை
  • வானறிவியல்
  • வான்வெளி
  • பாதுகாப்பு
  • மேம்பட்ட தொழில்நுட்பம்
வருமானம் 65.45 பில்லியன்
இயக்க வருமானம் €4.60 பில்லியன்
நிகர வருமானம் €3.79 பில்லியன்
மொத்தச் சொத்துகள் €118.87 பில்லியன்
மொத்த பங்குத்தொகை €17.73 பில்லியன்
உரிமையாளர்கள்
பணியாளர்147,893
பிரிவுகள்
  • பாதுகாப்பு மற்றும் விண்வெளி
  • உலங்கு வானூர்திகள்
துணை நிறுவனங்கள்
  • ஏர்பஸ் குரூப்
  • ஏர்பஸ் கார்ப்பரேட் ஜெட்ஸ்
  • அறியேன் (50%)
  • ஏதிஆர் (50%)
  • தசால்ட் ஏவியேசன் (10%)
  • யூரோபைட்டர் (46%)
  • எம்பிடிஏ (37.5%)
  • நாவ்ப்ளூ
  • எண்எச் இண்டஸ்ட்ரீஸ் (62.5%)
  • பனாவியா (42.5%)
  • சடையர்
  • ஸ்டெலியா ஏரோஸ்பேஸ்
  • டெஸ்டியா

2000 ஆம் ஆண்டில் பிரான்சுநட்டு நிறுவங்களான ஏரோஸ்பட்டியலே மற்றும் மாத்ரா, சேர்மனியைச் சேர்ந்த தாசா மற்றும் எசுப்பானிய காசா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏர்பஸ் நிறுவனத்தை உருவாக்கின. இந்த நிறுவனமானது 1970களில் அமெரிக்க போயிங் நிறுவனத்திற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்தை இணைத்து அதன் பெயரை எடுத்துக்கொண்டது.[9]

இந்நிறுவனத்தில் 147,000-க்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். இதன் கிளை நிறுவனங்களும் கட்டுமான இடங்களும் ஐரோப்பிய கண்டம் முழுவதும் பரவியிருக்கின்றன. இந்நிறுவனம் ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, எசுப்பானியா ஆகிய இடங்களில் கட்டுமான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இதன் கிளை நிறுவனங்கள் அமெரிக்கா, இந்தியா, சப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் உள்ளன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏர்பஸ்&oldid=3931454" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை