2017 மகளிர் அணிவகுப்பு

மகளிர் அணிவகுப்பு (2017 Women's March )[1] [2] [3] அமெரிக்கக் குடியரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற மறுநாள் சனவரி 21, 2017 அன்று நடந்த போராட்டத்தினைக் குறிப்பதாகும். டிரம்பின் பல அறிக்கைகள் பெண்களுக்கு எதிராகவோ அல்லது பெண்களை அடக்குவதனைப் போன்று உள்ளது எனக் கருதப்பட்டதால் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. [1] இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது .[4] பெண்களின் உரிமைகள், குடிவரவு சீர்திருத்தம், சுகாதாரச் சீர்திருத்தம், இனப்பெருக்க உரிமைகள், சுற்றுச்சூழல், நங்கை, நம்பி, ஈரர், திருனர் உரிமைகள், இன சமத்துவம், மத சுதந்திரம், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய காரணத்திற்காக இது நடைபெற்றது.[5] எனினும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உாிமைகள் மறுக்கப்பட்ட போது அவா்கள் துணிவுடன் களத்தில் இறங்கிப் போராடினா். போராடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானதால் போராட்டம் பொிதானது. இந்தப் போராட்டதின் அமைப்பாளர்களின் கூற்றுப்படி, "புதியதாகப் பதவியேற்ற அரசிற்கு முதல் நாளில் தைரியமான செய்தியை அனுப்புவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது என்றனா், மேலும் பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகள் தான் என்று உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினோம் என்று கூறினார்". [6]

இதன் முக்கிய ஆர்ப்பாட்டம் வாசிங்டன், டிசியில் நடைபெற்றது, இது பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உாிமைக்கான போராட்டம் என்று அறியப்பட்டது. இப்போராட்டம் நியாயமானதாக இருந்ததால்,ஆதரவு பெருகியது. உலகெங்கிலும் பல ஊர்வலங்கள் இது தொடர்பாக நடைபெற்றன. வாசிங்டனில் நடைபெற்ற அணிவகுப்பு யூடியூப், முகநூல் மற்றும் டுவிட்டரில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. [7] இதில் 470,000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் நடந்த அணிவகுப்புகளில் 3,267,134 மற்றும் 5,246,670 பேர் பங்கேற்றனர், [8] இது அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 1.0 முதல் 1.6 சதவீதம் பேர் ஆகும். உலகளாவியப் பங்கேற்பு ஏழு மில்லியனுக்கும் அதிகமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. [9] அமெரிக்காவில் குறைந்தது 408 அணிவகுப்புகளும், [9] மற்ற நாடுகளில் 168 அணிவகுப்புகள் நடத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. [10] அணிவகுப்புகளுக்குப் பிறகு, உலகெங்கிலும், ஏழு கண்டங்களிலும், கனடாவில் 29, மெக்சிகோவில் 20, மற்றும் அண்டார்டிகாவில் 1,என மொத்தம் சுமார் 673 அணிவகுப்புகள் நடந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். [11] மக்கள் அமைதியாகத் தங்களது போராட்டங்களை நடத்தினர். டிசி, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரம் அல்லது சியாட்டிலில் அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் யாரும் கைது செய்யப்படவில்லை, அங்கு மொத்தம் இரண்டு மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர். "குடிசார் உரிமைகள் இயக்கம் வன்முறையற்ற சித்தாந்தத்தை கடைப்பிடிக்க விரும்புவதாக" இந்த அம்மைப்பின் இணையதளம் கூறுகிறது. [12]

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 2017 மகளிர் அணிவகுப்பு.

அமைப்பாளர்கள்

நவம்பர் 9, 2016 அன்று, அமெரிக்கக் குடியரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாள், டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல் கருத்துக்களுக்கு எதிர்வினையாகவும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இலரியின் தோல்விக்கு ஹவாய் நாட்டைச் சேர்ந்த, தெரசா ஷூக் முகநூல் நிகழ்வை உருவாக்கி, நண்பர்களுடன் வாசிங்டனுக்கு அணிவகுத்துச் சென்று எதிர்ப்பு தெரிவித்தார். எசி ஆர்மன், ஃபான்டைன், ஃபான்டைன் பியர்சன்(ஒரு நியூயார்க் அலங்கார நிபுணர்), ப்ரீன் பட்லர் மற்றும் சிலர் உருவாக்கிய இதே போன்ற முகநூல் பக்கங்கள் ஆயிரக்கணக்கான பெண்கள் விரைவாக அணிவகுப்பில் சேர வழிவகுத்தது. [13] ஹார்மோன், பியர்சன் மற்றும் பட்லர் வாசிங்டனில் உத்தியோகபூர்வ மகளிர் அணிவகுப்பைத் தொடங்கி,ஒருங்கிணைக்க முடிவு செய்தனர்.

சர்வதேச அளவில்

ஓஸ்லோ, நோர்வேயில் பிரிட் ஆக்னசு சவேரி,[14][15] டொரான்டோ, கனடாவில் மரிசா மெக் டசுனேவும், கரேன் ஓல்சன், ஜெனிவா, சுவிட்சர்லாந்து; [16] கெர்ரி ஹாகெர்டி, இலண்டன், ஐக்கிய இராச்சியம்; [17] ரெபேக்கா டர்ன்போ, சிட்னி, ஆத்திரேலியா; [18] மற்றும் அமெரிக்காவில் பிரேன் பட்லர் மற்றும் எவ்வி ஹார்மன் [19][20] ஆகியோர் சர்வதேச அளவில் இந்த அணிவகுப்பை ஒருங்கிணைத்தனர். சமூக ஊடகங்கள் மூலமாக இந்த அணிவகுப்பை இவர்கள் ஒருங்கிணைத்தனர். ஒவ்வொரு வாரமும் இசுகைப் மூலமாக வியூகம் வகுத்தனர்.[19][21][20]

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை