அசோவ் கடல்

கடல்

அசோவ் கடல் (Sea of Azov)[3] கிரேக்கம்: Μαιῶτις λίμνη or Propontis[4] or now இலத்தீன்: mare Asoviense;[5] [6]கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கருங்கடலுடன் ஏறத்தாழ 4 கிலோ மீட்டர் அகலம் கொண்ட குறுகிய கெர்ச் நீரிணையால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சில சமயங்களில் அசோவ் கடல், கருங்கடலின் வடக்கு விரிவாக்கமாகவும் கருதப்படுகிறது.[7][8] அசோவ் கடல் உக்ரைன் நாட்டின் தெற்கிலும் மற்றும் ருசியாவின் தோனெத்ஸ்க் மாகாணத்தின் மேற்கிலும் அமைந்துள்ளது. தொன் ஆறு மற்றும் குபன் ஆறு போன்ற ஆற்று நீர்கள் அசோவ் கடலில் கலக்கிறது. அசோவ் கடலில் இருந்து கருங்கடலுக்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது. அசோவ் கடல் உலகின் மிக ஆழமற்ற கடல் ஆகும், இதன் ஆழம் 0.9 மற்றும் 14 மீட்டர் (2 அடி 11 அங்குலம் மற்றும் 45 அடி 11 அங்குலம்) வரை மாறுபடும்.[9][10] மணல், வண்டல் மற்றும் ஓடுகளை கொண்டு வரும் எண்ணற்ற ஆறுகளின் நீரோட்டத்தால் கடலின் ஆழம் பெருமளவில் குறைகிறது. இதையொட்டி ஏராளமான விரிகுடாக்கள் மற்றும் குறுகிய துப்பங்கள் அசோவ் கடலில் உருவாகின்றன. மேலும் கடலின் அடிப்பகுதி ஒப்பீட்டளவில் மென்மையாகவும் சமதளமாகவும் உள்ளதுடன், கடலின் ஆழம் படிப்படியாக குறைகிறது. மேலும் ஆறுகளின் பெருமளவு நீர் வரத்து காரணமாக, கடல் நீரின் உப்புத்தன்மை குறைவதுடன், அதிக அளவு உயிரியும் (பச்சை பாசி போன்றவை) இருப்பதால் நீர் நிறத்தை பாதிக்கிறது. ஏராளமான மிதவைவாழிகள் காரணமான, வழக்கத்திற்கு மாறாக அதிக மீன் உற்பத்தியை அசோவ் கடல் கொண்டுள்ளது. அசோவ் கடற்கரை தாவரங்கள் வளர்ச்சிக்கும், பறவைகளின் குடியிருப்புகளுக்கும் நல்வாய்ப்பாக உள்ளது.

அசோவ் கடல்
அசோவ் கடல்
அசோவ் கடல் is located in ஐரோப்பா
அசோவ் கடல்
அசோவ் கடல்
அசோவ் கடல்
அமைவிடம்தெற்கு உக்ரைன் மற்றும் மேற்கு ருசியா
ஆள்கூறுகள்46°N 37°E / 46°N 37°E / 46; 37
வகைகடல்
முதன்மை வரத்துதொன் ஆறு மற்றும் குபன் ஆறு
வடிநில நாடுகள்ருசியா மற்றும் உக்ரைன்
அதிகபட்ச நீளம்360 km (220 mi)
அதிகபட்ச அகலம்180 km (110 mi)
மேற்பரப்பளவு39,000 km2 (15,000 sq mi)[1][2]
சராசரி ஆழம்7 மீட்டர்கள் (23 அடி)
அதிகபட்ச ஆழம்14 m (46 அடி)
நீர்க் கனவளவு290 km3 (240×10^6 acre⋅ft)
அசோவ் கடலின் ஒரு உமிழ்வு

புவியியல் மற்றும் ஆழ்கடல் அளவியல்

ஆழமற்ற அசோவ் கடலையும், ஆழமான கருங்கடலையும் வேறுபடுத்தி காட்டும் செயற்கைக்கோள் படம், எண் 1. ஒனிப்ப்பர் ஆறு, 2. ககோவ்கா நீர்த்தேக்கம், 3. மோலோச்னா ஆறு, 4. மோலோச்னி லிமன், 5. அராபத் உமிழ்வு, 6. சிவாஷ் குளம் அமைப்பு, 7. கர்கினித் விரிகுடா, 8. கலாமிட்ஸ்கை விரிகுடா, 9. கிரிமியா, 10. ஃபெடோசிஸ்கி விரிகுடா, 11. கெர்ச் நீரிணை, 12. கருங்கடல், 13. அசோவ் கடல், 14. தொன் ஆறு , 15. தாகன்ரோக் விரிகுடா, 16. யேய்ஸ்க் கடற்கழி, 17.பெய்சுங் கடற்கழி

ருசியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே 2003-ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, அசோவ் கடல், இருநாடுகளால் நிர்வகிக்கப்படும் கடல் ஆகும்.[11]அசோவ் கடலின் வடக்கில் உக்ரைன் நாடும், மேற்கில் கிரிமியாவும், தென்கிழக்கில் ருசியாவும், தெற்கில் கருங்டலும் எல்லைகளாக உள்ளது.

அசோவ் கடல் 360 கிலோமீட்டர்கள் (220 mi) நீளம் மற்றும் 180 கிலோமீட்டர்கள் (110 mi) அகலமும் கொண்டது. மேலும் இதன் பரப்பளவு 39,000 சதுர கிலோமீட்டர்கள் (15,000 sq mi) உடையது. முந்தைய சோவியத் ஒன்றியத்தில் இதுவே மிகச்சிறிய கடல் ஆகும்.[12]அசோவ் கடலில் கலக்கும் ஆறுகளில் முக்கியமானது தொன் ஆறு மற்றும் குபான் ஆறுகள் ஆகும். அசோவ் கடலின் நீர் உப்புத்தன்மை குறைவாக உள்ளது. இக்கடலில் அதிக உமிழ்வுகளும், மணற்குன்றுகளும் காணப்படுகிறது. இது உலகின் குறைந்த ஆழம் கொண்ட கடல் ஆகும். இதன் சராசரி ஆழம் 7 மீட்டர்கள் (23 அடி) மற்றும் அதிகபட்ச ஆழம் 14 மீட்டர்கள் (46 அடி) ஆகும்.

மேற்கோள்கள்

ஊசாத்துணை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அசோவ்_கடல்&oldid=3817192" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை