அலுமினியம் ஐதராக்சைடு

அலுமினியம் ஐதராக்சைடு (Aluminium hydroxide), Al(OH)3, இயற்கையில் கிப்சைட்டு (ஐதராகில்லைட்டு எனவும் அழைக்கப்படுகிறது) எனும் கனிமத்திலிருந்து கிடைக்கப் பெறுகிறது. மேலும், இதன் மிக அரிய வகை  பல்லுறுப்பிகளாவன: பேயரைட்டு, டோய்லெய்ட்டு மற்றும் நார்ட்ஸ்ட்ரான்டைட்டு ஆகியவை ஆகும். அலுமினியம் ஐதராக்சைடானது இயற்கையில் ஈரியல்புத்தன்மை கொண்டதாகும். அதாவது இச்சேர்மமானது, அமிலத்தன்மையையும் மற்றும் காரத்தன்மையையும் ஒருங்கே கொண்டதாக உள்ளது. இச்சேர்மத்தோடு மிகவும் பொருந்திப் போகக்கூடியவை அலுமினியம் ஆச்சைடு ஐதராக்சைடு, AlO(OH), மற்றும் அலுமினியம் ஆக்சைடு அல்லது அலுமினா (Al2O3) ஆகும். இவற்றில் பிந்தையதும் ஈரியல்புத்தன்மை கொண்டதுமாகும். அலுமினியத்தின் கனிமூலமான பாக்சைட்டின் முக்கிய பகுதிக்கூறுகளாக இச்சேர்மங்கள் அனைத்தும் உள்ளன.

அலுமினியம் ஐதராக்சைடு
Unit cell ball and stick model of aluminium hydroxide
Sample of aluminium hydroxide in a vial
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் ஐதராக்சைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
அலுமினியம்(3+) டிரைஆக்சிடனைடு
வேறு பெயர்கள்
அலுமினிக் அமிலம்

அலுமினிக் ஐதராக்சைடு
அலுமினியம்(III) ஐதராக்சைடு
அலுமினியம் ஐதராக்சைடு
அலுமினியம் டிரைஐதராக்சைடு
நீரேற்றப்பட்ட அலுமினா

ஆர்த்தோஅலுமினிக் அமிலம்
இனங்காட்டிகள்
21645-51-2 Y
ChEBICHEBI:33130 Y
ChEMBLChEMBL1200706 N
ChemSpider8351587 Y
DrugBankDB06723
InChI
  • InChI=1S/Al.3H2O/h;3*1H2/q+3;;;/p-3 Y
    Key: WNROFYMDJYEPJX-UHFFFAOYSA-K
    A02AB02 (algeldrate) N
  • InChI=1/Al.3H2O/h;3*1H2/q+3;;;/p-3
    Key: WNROFYMDJYEPJX-DFZHHIFOAJ
யேமல் -3D படிமங்கள்Image
KEGGD02416
பப்கெம்10176082
வே.ந.வி.ப எண்BD0940000
SMILES
  • [OH-].[OH-].[OH-].[Al+3]
UNII5QB0T2IUN0 Y
பண்புகள்
Al(OH)3
வாய்ப்பாட்டு எடை78.00 கி/மோல்
தோற்றம்வெண்ணிறத்தூள் சீருறாத் திண்மம்
அடர்த்தி2.42 கி/செமீ3, திண்மம்
உருகுநிலை 300 °C (572 °F; 573 K)
0.0001கி/100 மிலி
கரைதிறன் பெருக்கம் (Ksp)
3×10−34
கரைதிறன்அமிலம் மற்றும் நீர்க்காரத்தில் கரையும்
காடித்தன்மை எண் (pKa)>7
சமமின்புள்ளி7.7
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
−1277 கிலோயூல்·மோல்−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்External MSDS
GHS pictograms
H319, H335
P264, P261, P280, P271, P312, P304+340, P305+351+338, P337+313
தீப்பற்றும் வெப்பநிலைதீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
>5000 மிகி/கிகி (எலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்ஏதுமில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பெயரிடும் முறை

அலுமினியம் ஐதராக்சைடின் வெவ்வேறு வடிவங்களுக்குப் பெயரிடும் முறையானது குழப்பமானதாக உள்ளது. இதற்கான சர்வதேச அளவிலான வரையறைகள் ஏதும் இல்லை. பல்லுருக்கள் நான்குமே அலுமினியம் டிரைஐதராக்சைடின் வேதியியைபைக் (ஒரு அலுமினியம் அணுவானது மூன்று ஐதராக்சைடு தொகுதிகளுடன் இணைந்துள்ள) கொண்டுள்ளன. 

கிப்சைட்டு ஐதராகில்லைட்டு எனவும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மமானது. நீர் (hydra) மற்றும் களி(argylles) இவற்றின் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டதாகும். ஐதராகில்லைட்டு எனப் பெயரிடப்பட்ட முதல் சேர்மமானது அலுமினியம் ஐதராக்சைடாக கருதப்பட்டது. ஆனால், பின்னர் அது அலுமினியம் பாசுபேட்டு என அறியப்பட்டது; இவற்றிற்குப் பிறகாகவும், கிப்சைட்டு மற்றும் ஐதராகில்லைட்டு ஆகியவை அலுமினியம் ஐதராக்சைடின் பல்லுருத்தன்மையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. கிப்சைட்டானது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரும்பான்மையாகவும் மற்றும் ஐதராகில்லைட்டு ஐரோப்பாவில் அதிகமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. 

தயாரிப்பு

வணிகரீதியாக பயன்படுத்தப்படும் அலுமினியம் ஐதராக்சைடானது பேயர் தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது.[1] இம்முறையானது பாக்சைட்டினை 270செல்சியசு அளவிற்கு வெப்பப்படுத்தப்பட்ட சோடியம் ஐதராக்சைடில் கரைக்கின்ற செயல்முறையை உள்ளடக்கியதாகும். பாக்சைட்டுக் கழிவானது திண்மக்கழிவாக பிரித்தெடுக்கப்பட்ட பின் சோடியம் அலுமினேட்டுக் கரைசலில் இருந்து அலுமினியம் ஐதராக்சைடானது வீழ்படிவாக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற அலுமினியம் ஐதராக்சைடானது, அலுமினியம் ஆக்சைடு அல்லது அலுமினாவாக சூடேற்றிப் பிரித்தல் மூலம் மாற்றப்படுகிறது.

பண்புகள்

கிப்சைட்டு ஐதரசன் பிணைப்புகளோடு கூடிய உலோக ஐதராக்சைடு அமைப்பினைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பானது, அலுமினியம் அயனிகள் மற்றும் ஐதராக்சில் தொகுதிகளாலான இரட்டை அடுக்குகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளுக்கு இடையிலான எண்முகியின் மூன்றில் இரண்டு பங்கு துளைகளை அலுமினியம் அயனிகள் நிரப்பிக் கொள்கின்றன.[2][3]

அலுமினியம் ஐதராக்சைடானது ஈரியல்புத் தன்மை உடையதாக உள்ளது. அமிலத்தில், அமிலத்தில் உள்ள ஐதரசன் அயனிகளை எடுத்துக் கொண்டு அமிலத்தை நடுநிலைப்படுத்தி பிரான்ஸ்டெட்-லெளரி காரமாகச் செயல்பட்டு ஒரு உப்பினைத் தருகிறது:[4]

3HCl + Al(OH)3 → AlCl3 + 3H2O

காரக்கரைசலில், இது லூயிசு அமிலத்தைப் போன்று அதாவது, ஐதராக்சைடு அயனியிலிருந்து ஓரிணை எதிர்மின்னிகளை எடுத்துக் கொண்டு செயல்படுகிறது:

Al(OH)3 + OH → Al(OH)4

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை