அல் காயிதா

அல்-காய்தா

அல் காய்தா
القاعدة
தலைவர்அய்மன் அல் ழவாகிரி
நிறுவனர்ஒசாமா பின் லாடன்
தொடக்கம்1988
உறுப்பினர்தெரியாது
பன்னாட்டு சார்புஆப்கானிஸ்தான், ஈராக், பாகிசுத்தான், சோமாலியா, ஏமன் மற்றும் உலகமுழுவதும்

அல்-காய்தா ஜிகாத் கொள்கையுடைய பன்னாட்டு சுணி முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஒன்றியமாகும். இவ்வியக்கம் 1989 ஆம் ஆண்டில் அப்கானிதானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற்ற காலத்தில் ஒசாமா பின் லாடன் மற்றும் சிலரால் பாகிஸ்தானின் பெஷாவரில் 1988 ஆகத்து மாதத்துக்கும் 1989ஆம் ஆண்டுகடைசிக்கும் இடையில் தொடக்கப்பட்டதாகும்.[1] முஸ்லிம் நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளைக் இல்லாதொழித்து முகமது நபியின் காலத்தை ஒத்த ஒரு தலைவருக்குக் கீழான இசுலாமிய இராச்சியத்தை உருவாகுதல் அல்-காய்தாவின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றகும்.உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் மீதும் ராணுவத்தின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

அல்-காய்தா பல உலக நாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இவற்றுள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை,[2] நேட்டோ,[3][4] ஐரோப்பிய ஒன்றியம்,[5] ஐக்கிய அமெரிக்க நாடுகள்,[6] அவுஸ்திரேலியா,[7] கனடா,[8] இசுரேல்,[9] யப்பான்,[10] the நெதர்லாந்து,[11] ஐக்கிய இராச்சியம்,[12] ரஷ்யா,[13] சுவீடன்,[14] சுவிட்சர்லாந்து[15] என்பவை முக்கியமானவையாகும். அல்-காய்தா உறுப்பினர்கள் உலகின் பல நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவற்றுள் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் முக்கியமானவையாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க அரசு அல் கைதாவுக்கு எதிராக பாரிய புலனாய்வு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நிதி

தொடக்ககாலத்தில் பின் லாடன் தனது சொந்தப்பணத்தை இந்த இயக்கத்திற்காக செலவளித்துள்ளார். 2001-இல் ஆப்கான் நடவடிக்கைகளுக்குப் பின் இவ்வியக்கத்திற்கு வரும் நிதியின் அளவு முடக்கப்பட்டது. குவைத், சவுதி அரேபியா மற்றும் பிற இஸ்லாமிய நாடுகள் இவ்வியக்கத்திற்கு முக்கிய நன்கொடையாளர்களாக இருந்துள்ளனர்.ஹெராயின் போதைப் பொருள் வணிகம் மூலமும் அதிக அளவு நிதியைத் திரட்டியுள்ளனர். விக்கிலீக்ஸ் -ன் ஆவணங்களின் படி சவுதி அரேபியா சுணி இஸ்லாமியக் குழுக்களுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது..[16] அல்-காய்தாவின் தனித்தியங்கும் சிறு குழுக்கள் காரணமாகத் தாக்குதல்களுக்கான சூத்திரதாரிகளை இனம்காண்பது கடினமாகும். அல்-காய்தாவுக்கு எதிரான அரசுகள் அல் கைடாவின் உலக நீட்சியை ஏற்றுக் கொள்கின்றன.[17]இருப்பினும் அல்-காய்தாவின் உறுப்பினர் தொகை அதிகரிக்கப்பட்டு காண்பிக்கப்படுவதாக கருத்தும் உண்டு.[18] என்பது அல் கைடாவுக்கு ஆதாரவாகவோ அல்லது அவர்களைப் பின்பற்றி அதே பாணியிலும் அல் கைடாவுடன் தொடர் பற்ற வேறு சிறு குழுக்கள் பயங்கரவாத நடவடிகைகளில் ஈடுபடுவதை "அல் கைடாயிசம்" எனலாம்.[19]

அல் கைதாவின் இரட்டை கோபுர தாக்குதல்கள்

இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் தரைமட்டமான உலக வணிக மையக் கட்டிடங்கள்

அல் கைதா அமைப்பு நடத்திய தாகுதல்களில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உலகை அதிர வைத்தது. நான்கு பயணி விமானங்களைக் கடத்திக் கொண்டு சென்று ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மிக உயரமான உலக வணிக மையத்தின் இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்கியதுடன் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழக்க காரணமாயினர். மேலும் வாசிங்டன் டி. சி.யில் உள்ள அமெரிக்காவின் இராணுவ அலுவலகமாக பெண்டகன் மாளிகையையும் ஒரு பயணி விமானத்தை கடத்திச் சென்று மோதி பெருஞ்சேதப்படுத்தினர்.[20] இத்தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா நாட்டிற்கு பத்து பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டது.[21] இத்தாக்குதலுக்கு அல்கைதா அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.[22]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Media
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அல்_காயிதா&oldid=3619008" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை