அவதார் (2009 திரைப்படம்)

அவதார் (ஆங்கில மொழி: Avatar) என்பது 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க நாட்டு காவிய அறிபுனைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ், லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்டு, ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் இங்கெனியசு மீடியா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

அவதார்
இயக்கம்ஜேம்ஸ் கேமரூன்
தயாரிப்புஜேம்ஸ் கேமரூன்
ஜான் இலாண்டாவ்
கதைஜேம்ஸ் கேமரூன்
இசைஜேம்சு கோர்னர்
நடிப்புசாம் வோர்த்திங்டன்
ஜோ சல்டனா
இசுடீபன் லாங்
மிச்செல் ரோட்ரிக்வெஸ்
சிகர்னி வேவர்
ஒளிப்பதிவுமாரோ பியோர்
படத்தொகுப்புஜான் ரேபுவா
இசுடீபன் ரிவ்கின்
ஜேம்ஸ் கேமரூன்
கலையகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்டு
ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட்
இங்கெனியசு மீடியா[1]
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்[2]
வெளியீடுதிசம்பர் 10, 2009 (2009-12-10)
(லண்டன்)
டிசம்பர் 18, 2009
(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்162 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$237 மில்லியன்[3]
$9 மில்லியன்
(மறு-வெளியீடு)
மொத்த வருவாய்$2.923 பில்லியன்

இந்த திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ஜான் இலாண்டாவ் ஆகியோர் தயாரிப்பில், ஜேம்ஸ் கேமரூன் என்பவர் இயக்கம் மற்றும் திரைக்கதையில், சாம் வோர்த்திங்டன், ஜோ சல்டனா, இசுடீபன் லாங், மிச்செல் ரோட்ரிக்வெஸ் மற்றும் சிகர்னி வேவர் போன்ற பலர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 22 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மதிப்புமிக்க கனிமமான யூனோப்டானியத்தை வெட்டுவதற்காக, ஆல்பா செண்டாரி நட்சத்திர அமைப்பில் உள்ள ஒரு பசுமையான வளிமப் பெருங்கோளில் வாழக்கூடிய நிலவான பண்டோராவை மனிதர்கள் காலனித்துவப்படுத்துவது போன்றும் அத்துடன் நாவியின் உள்ளூர் பழங்குடியினரின் தொடர்ச்சியான இருப்பை ஆர்கொள்ள நினைக்கும் மனித இனம் இதற்காக வரும் பிரச்சனைகளை சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவதாரின் வளர்ச்சி 1994 இல் தொடங்கியது,[4] படத்திற்காக ஜேம்ஸ் கேமரூன் என்பவர் 80 பக்க கதையை எழுதினார். கேமரூனின் 1997 திரைப்படமான டைட்டானிக் முடிந்த பிறகு, 1999 இல் திட்டமிடப்பட்ட வெளியீட்டிற்காக படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும்;[5] இருப்பினும், கேமரூனின் கூற்றுப்படி, திரைப்படத்தை உருவாக்குவதற்கு தேவையான தொழில்நுட்பம் இன்னும் கிடைக்கவில்லை ஆகும்.[6] அதை தொடர்ந்து 2005 இல் நாவி மொழிக்கான பணிகள் தொடங்கப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரைக்கதை மற்றும் கற்பனையான பிரபஞ்சம் உருவாக்கப்பட்டது.[7][8]இந்த திரைப்படம் அதிகாரப்பூர்வமாக $237 மில்லியன் பொருள்செலவில் எடுக்கப்பட்டது.[9][10]

அவதார் படம் திசம்பர் 10, 2009 இல் லண்டனில் திரையிடப்பட்டது, மேலும் டிசம்பர் 18 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டு, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் அதன் அற்புதமான காட்சி விளைவுகளைப் பாராட்டினர்.[11][12][13] இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளின் போது பல வசூல் சாதனைகளை முறியடித்தது மற்றும் அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த படமாக ஆனது, அதே போல் அமெரிக்கா மற்றும் கனடாவில், பன்னிரண்டு ஆண்டுகளாக அந்த சாதனைகளை வைத்திருந்த கேமரூனின் டைட்டானிக்கை முறியடித்தது.[14]

இது சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர்[15] உட்பட ஒன்பது அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது, மேலும் சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த திரை வண்ணம்[16] ஆகிய மூன்றையும் வென்றது.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் என்பவர் 20ஆம் சென்சுரி பாக்ஸ் உடன் இணைந்து நான்கு தொடர்ச்சியான படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்: அவதார்: தி வே ஆப் வாட்டர் மற்றும் அவதார் 3 ஆகியவை முதன்மைப் படப்பிடிப்பை முடித்துவிட்டன, மேலும் அவை முறையே திசம்பர் 16, 2022 மற்றும் திசம்பர் 20, 2024 ஆகிய தேதிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த தொடர்கள் திசம்பர் 18, 2026 மற்றும் திசம்பர் 22, 2028 ஆகிய தேதிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[17]

கதைச் சுருக்கம்

பண்டோரா எனும் வேற்றுலகில் வளங்கள் மண்டிக்கிடப்பதை அறியும் குழு தம் வளத்தட்டுப்பாட்டிற்கு தீர்வாக அவ்வுலகை வன்கவர்வு செய்ய முயல்கின்றனர். இதற்காக, தம்முள் ஒருவனை அக்குழு ஆளாக மாற்றி அனுப்பியும் வைக்கின்றனர். இவ்வாறு அனுப்பப்பட்டவன் அவ்வுலகினை பாதுகாக்க போராடுவதாக கதை பரிணமிக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை