ஆங்காங்-சூகாய்-மக்காவு பாலம்

சீனாவையும் ஆங்காங்கையும் இணைக்கும் கடல் பாலம்

சீனா - ஆங்காங் கடல் பாலம் (Hong Kong–Zhuhai–Macau Bridge) என்பது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நகரான சூகாய் உடன் மக்கள் சீனக் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான மக்காவு மற்றும் ஆங்காங் ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் பாலமாகும். சூகாய், மக்காவு மற்றும் ஆங்காங் ஆகிய மூன்று நகரங்களுமே பியர்ல் ஆற்றங்கரைச் சமவெளியில் அமைந்துள்ள நகரங்களாகும். இப்பாலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. [1] இந்தப் பாலம் சற்றேறக்குறைய 55 கிலோமீட்டர் நீளம் உடையதாகும். இந்தப் பாலம் 6.7 கிலோமீட்டர் அளவுக்கு சுரங்க வழிப்பாதையையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.[2]இந்த பாலத்தைக் கட்ட 1.48 இலட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 6.8 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும், சீனா - ஆங்காங் இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

உருவாக்கம்

1980 களில் ஹோப்வெல் ஹோல்டிங்சு நிறுவனத்தின் அந்நாளைய நிர்வாக இயக்குநர் கோர்டன் வு இந்தப் பாலத்திற்கான திட்டத்தை முன் வைத்தார்.[3] இப்பாலத்தின் கட்டுமானம் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. சீனத் தரப்பிலிருந்து 2009 டிசம்பர் 15 ஆம் நாளில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.[4] இத்திட்டத்தின் ஆங்காங் பகுதி கட்டுமானம் டிசம்பர் 2011 இல் தொடங்கியுள்ளது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை