ஆமில்டன், பெர்முடா

ஆமில்டன் (Hamilton) பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களில் ஒன்றான பெர்முடாவின் தலைநகரம் ஆகும். இது ஆட்புலத்தின் நிதிய மையமாகவும் முதன்மைத் துறைமுகமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றது. இதன் மக்கள்தொகை 1,010 (2010).[1] தலைநகரமாக உள்ள நகரங்களில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே ஆகும்.

ஆமில்டன், பெர்முடா
நகரம்
ஆமில்டனின் முன்னிலை சாலை.
ஆமில்டனின் முன்னிலை சாலை.
பெர்முடாவினுள் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்
பெர்முடாவினுள் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்
நாடு United Kingdom
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்பெர்முடா பெர்முடா
பாரிஷ்பெம்புரோக்
நிறுவனம்1790
அரசு
 • நகரத்தந்தைசார்லசு ஆர். கோசுலிங்
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,010
இணையதளம்www.cityhall.bm
ஆமில்டனில் உள்ள மிகு தூய திரித்துவ தேவாலயம்.

1778 முதல் 1794 வரை ஆமில்டனின் ஆளுநராக பணியாற்றிய சேர் என்றி ஆமில்டனின் நினைவாக இந்த நகரம் பெயரிடப்படுள்ளது.

வரலாறு

ஆமில்டனிலுள்ள நகரக் கூடம்

பிரித்தானிய நகரமாக ஆமில்டனின் வரலாறு 1790இல் துவங்குகின்றது. அவ்வாண்டில் பெர்முடா அரசு தனது வருங்காலத் தலைநகருக்காக 145 ஏக்கர்கள் (59 ha) பரப்பளவுள்ள இடத்தை ஒதுக்கியது. 1793இல் இதனை நாடாளுமன்ற சட்டவாணை மூலமாக அலுவல்முறையாக உறுதி செய்தது. பெர்முடாவின் ஆளுநராக இருந்த என்றி ஆமில்டனின் பெயரை இந்த நகருக்குச் சூட்டியது. 1815இல் செயிண்ட் ஜார்ஜசிலிருந்து இங்கு தலைநகரம் இடம் பெயர்ந்தது. அன்றுமுதல் பெர்முடாவின் படைத்துறை, அரசியல் நிலைகளில் இந்த நகரம் முதன்மையாக இருந்துள்ளது. அரசுக் கட்டிடங்களாக வடக்கில் சட்டப்பேரவைக் கட்டிடம், அரசு மாளிகையும் மேற்கில் பெம்புரோக்கில் அரச கடற்படையின் முன்னாள் கடற்தளபதியின் மாளிகையும் கிழக்கில் பிரித்தானியப் படைத்துறையின் காவற்கோட்டமும் உள்ளன.

1897இல் இது ஓர் நகரமானது; 1911இல் இங்கிலாந்து திருச்சபையின் மிகு தூய திரித்துவ தேவாலயத்தின் திறப்புவிழாவிற்கு முன்னதாக நடைபெற்றது. இதற்குப் பின்னர் கத்தோலிக்கத் தேவாலயமான செயிண்ட் திரேசா கதீட்ரல் கட்டப்பட்டது. ஆமுல்டன் துறைமுகத்தை நோக்கியுள்ள இந்த நகரம் இன்று சில அலுவலக கட்டிடங்களைத் தவிர்த்து முதன்மையாக வணிக மையமாக விளங்குகின்றது. பன்னெடுங்காலமாகவே நகரக் கட்டிடங்களின் உயரத்தையும் பார்வைக் கோணத்தையும் கட்டுப்படுத்தி வந்துள்ளது. இந்த விதிகளினால் எந்த கட்டிடமும் கதீட்ரலின் காட்சியை மறைக்கவியலாது. 21ஆம் நூற்றாண்டில் இந்த விதி தளர்த்தப்பட்டு பல கட்டிடங்கள் 10 மாடிகள் வரை திட்டமிடப்பட்டுள்ளன.

புவியியல்

ஆமில்டன் துறைமுகத்திற்கு வடக்கே ஆமில்டன் நகரம் அமைந்துள்ளது. ஆமில்டன் பாரிஷ் என்ற உள்ளாட்சி அமைப்பு இருந்தபோதும் ஆமில்டன் நகரம் பெம்புரோக் பாரிஷில் உள்ளது. 1786இலிருந்து 1793 வரையான காலத்தில் ஆளுநராக இருந்த என்றி ஆமில்டனின் பெயரில் இந்த நகரம் பெயரிடப்பட்டுள்ளது; ஆனால் ஆமில்டன் பாரிஷ் இதற்கு முன்பிருந்தே இருக்கிறது.

பெர்முடாவின் நிர்வாகத் தலைநகரமான ஆமில்டனில் நிரந்தர மக்கள்தொகை ஏறத்தாழ 1,010 (2010) ஆகும்; இருப்பினும், 13,340 (பெர்முடாவின் மக்கள்தொகையில் 40%) பேர் இங்கு நாள்தோறும் வேலை செய்கின்றனர். பெர்முடாவில் நிறுவப்பட்ட ஒரே நகரமாக விளங்கும் ஆமில்டன் வரலாற்றுச் சிறப்பு மிக்க செயிண்ட் ஜார்ஜசை விட சிறியதாகும்.

பொருளியல்

பல வெளிநாட்டு நிறுவனங்களின் கடல்கடந்த வசிப்பிடமாக விளங்கும் பெர்முடாவில் பன்னாட்டு வணிகப் பொருளியல்நிலை மேம்பட்டநிலையில் உள்ளது. காப்பீடு, மீள்காப்பீடு, முதலீட்டு நிதிகள், சிறப்பு நோக்கு ஊர்தி போன்ற நிதியச் சேவைகளை ஏற்றுமதி செய்கின்றது. பெர்முடாவின் பொருளியல்நிலையில் நிதி, பன்னாட்டு வணிகம் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த வணிக செயற்பாடுகள் அனைத்துமே ஆமில்டன் நகரிலேயே நடக்கின்றன.

பல பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் ஆமில்டனிலிருந்து இயங்குகின்றன. ஏறத்தாழ 400 பன்னாட்டளவில் இயங்கும் வணிக நிறுவனங்கள் பெர்முடாவில் நிலைகொண்டுள்ளன. கிட்டத்தட்ட 1,500 விலக்கு பெற்ற அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் பெர்முடாவின் நிறுவனப் பதிவாளர் அலுவலகத்தில் பதிந்துள்ளன.

மதுபானத் தயாரிப்பாளர் பகார்டியின் பதிவுபெற்ற தலைமையகம் இந்நகரில் உள்ளது. மேலும் அயலாக்க நிறுவனம் ஜென்பாக்ட், தொலைத்தொடர்பு நிறுவனம் குளோபல் கிராசிங், மீள்காப்புறுதி இறுவனம் டோகியோ மில்லினியம் ரெ லிட், போன்றவற்றின் பதிவு பெற்றத் தலைமையகங்கள் இங்குள்ளன.[2]பன்னாட்டு கப்பல் நிறுவனங்கள் டிரைஷிப்ஸ், பிரண்ட்லைன், டாக்வைசு போன்றவற்றின் தலைமையகங்கள் இங்குள்ளன. பெர்முடாவின் நிறுவனங்களுக்கான குறைந்த வரி விகிதங்கள் அமெரிக்க நிறுவனங்களை இங்கு ஈர்க்கின்றன.[3]

தவிரவும், பெர்முடாவின் பெரும் சங்கிலித் தொடர் அங்காடி, தி மார்க்கெட்பிளேசின் தலைமையகம் ஆமில்டனில் அமைந்துள்ளது.[4][5][6]

காட்சியகம்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆமில்டன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆமில்டன்,_பெர்முடா&oldid=3927478" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை