இணைய உலகம்

இணைய உலகம் அல்லது பொருட்களின் இணையம் (Internet of Things, IoT) இயற்பொருட்களின் பிணைப்பாகும் அல்லது "things" மின்னணுவியல், மென்பொருள், உணரிகள் மற்றும் இணைய அணுக்கம் பதிக்கப்பட்ட இயற்பொருட்களின் இணையமாகும். இணைய உலகம் என்பது ஒரு கருத்தாக்கம். இந்த கருத்தாக்கத்தில், உலகிலுள்ள அனைத்து வகையான இயற்பொருட்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைய உலகத்தில், அனைத்து வகையான இயற்பொருட்கள், மனிதர்களிடையே தகவல் பரிமாரிக் கொள்ளப்படுகிறது [1].இவற்றின் மூலமாக தரவுகளைச் சேகரிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் இயலும்.[2] இணைய உலகம் வழியே பொருட்களை ஏற்கெனவே உள்ள இணையப் பிணைப்புகள் மூலம் தொலைவிலிருந்து உணரவும் கட்டுப்படுத்தவும் இயலும்.[3] இதனூடாக இயல் உலகிற்கும் கணிமய அமைப்புகளுக்கும் இடையே நேரடி ஒருங்கிணைத்தலை ஏற்படுத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இது திறன் மேம்பாட்டிற்கும் துல்லியத்திற்கும் பொருளியல் ஆதாரத்திற்கும் வழிவகுக்கும்.[4][5][6][7][8][9] ஒவ்வொரு பொருளையும் தனிப்பட்டு அடையாளப்படுத்தக் கூடியவகையில் பதிக்கப்படும் மின்னணுவமைப்பு இருக்கும்; இவை தற்போது செயற்பாட்டிலுள்ள இணையக் கட்டமைப்புடன் ஒழுங்குபடுத்தப்படும். 2020 ஆண்டுவாக்கில் 50 பில்லியன் பொருட்கள் இணைய உலகில் பங்கேற்கும் என அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.[10] சந்தையின் மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது.[11]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இணைய_உலகம்&oldid=3927602" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை