இரும்பு(II) ஆக்சைடு

வேதிச் சேர்மம்

இரும்பு(II) ஆக்சைடு (Iron(II) oxide) என்பது FeO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்ரசு ஆக்சைடு, இரும்பு மோனாக்சைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இரும்பினுடைய மூன்று முக்கியமான ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். இரும்பு(III ) ஆக்சைடு (Fe2O3) மற்றும் இரும்பு(II,III) ஆக்சைடு (Fe3O4) என்பவை ஏனைய இரண்டு ஆக்சைடுகளாகும். எண்ணற்ற இரும்பு ஆக்சைடுகளில் ஒன்றான உசுடைட்டு என்ற ஆக்சைடு கனிமம் இரும்பு(II) ஆக்சைடின் கனிம வடிவமாகும். நீர், காரங்கள், ஆல்க்கால் போன்றவற்றில் இது கரையாது. ஆனால் அமிலத்தில் கரைந்து விடும். கருப்பு நிற தூளாக இருக்கும் இரும்பு(II) ஆக்சைடு சில சமயங்களில் துருவைப் போல தோற்றமளித்து குழப்பமடையச் செய்யும். துரு என்பது நீரேற்ற இரும்பு(III) ஆக்சைடு அல்லது பெர்ரிக் ஆக்சைடு என்பதை கவனித்திற் கொள்ள வேண்டும். விகிதவியலற்ற சேர்மங்கள் குடும்பத்தில் இரும்பு(II) ஆக்சைடும் ஓர் உறுப்பினர் என்று கருதப்படுகிறது. இவ்வகையில் இரும்பின் இயைபு அளவு குறைவாக Fe0.84O முதல் Fe0.95O வரை என்ற விகிதத்தில் காணப்படும் [2]

இரும்பு(II) ஆக்சைடு
இரும்பு(II) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) ஆக்சைடு
வேறு பெயர்கள்
பெர்ரசு ஆக்சைடு, இரும்பு மோனாக்சைடு
இனங்காட்டிகள்
1345-25-1 Y
ChEBICHEBI:50820 Y
ChemSpider14237 Y
Gmelin Reference
13590
InChI
  • InChI=1S/Fe.O Y
    Key: UQSXHKLRYXJYBZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Fe.O/rFeO/c1-2
    Key: UQSXHKLRYXJYBZ-WPTVXXAFAB
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்14945
SMILES
  • [Fe]=O
UNIIG7036X8B5H Y
பண்புகள்
FeO
வாய்ப்பாட்டு எடை71.844 கி/மோல்
தோற்றம்கருப்பு படிகங்கள்
அடர்த்தி5.745 கி/செ.மீ3
உருகுநிலை 1,377 °C (2,511 °F; 1,650 K)[1]
கொதிநிலை 3,414 °C (6,177 °F; 3,687 K)
கரையாது
கரைதிறன்காரம், எத்தனால் போன்ரவற்ரில் கரையாது
அமிலத்தில் கரையும்
+7200•10−6செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD)2.23
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்காற்றில் எரியலாம்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்ICSC 0793
Autoignition
temperature
மாறுபடும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்இரும்பு(II) புளோரைடு, இரும்பு(II) சல்பைடு, இரும்பு(II) செலீனைடு, இரும்பு(II) தெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள்மாங்கனீசு(II) ஆக்சைடு, கோபால்ட்(II) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு

இரும்பு(II) ஆக்சலேட்டு சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி இரும்பு(II) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது.

FeC2O4 → FeO + CO2 + CO

இத்தயாரிப்புச் செயல்முறை மந்தமான வளிமண்டலச் சூழலில் மேற்கொள்ளப்படவேண்டும். இல்லையெனில் இரும்பு(III) ஆக்சைடு (Fe2O3) உருவாகிவிடும், இதே தயாரிப்புச் செயல்முறையே மாங்கனசு ஆக்சைடு மற்றும் வெள்ளீய ஆக்சைடு தயாரிப்புகளுக்கும் பின்பற்றப்படுகிறது[3][4]விகிதவியல் அளவிலான இரும்பு(II) ஆக்சைடை Fe0.95O சேர்மத்தை இரும்பு உலோகத்துடன் சேர்த்து 720 பாகை செல்சியசு மற்றும் 36 கிலோபார் வளிமண்டல அழுத்தத்தில் சூடுபடுத்தினால் தயாரிக்க முடியும்[5]

வேதி வினைகள்

575 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் இரும்பு(II) ஆக்சைடு வெப்ப இயக்கவிசையியல் ரீதியாக நிலைப்புத்தன்மை அற்றது என்பதால் விகிதவியல் அளவின்றி உலோகம் மற்றும் இரும்பு(II,III) ஆக்சைடாக (Fe3O4) மாறுகிறது :[2]

4FeO → Fe + Fe3O4

கட்டமைப்பு

இரும்பு(II) ஆக்சைடு கனசதுர பாறை உப்பு கட்டமைப்பை ஏற்கிறது. இங்கு இரும்பு அணுக்கள் ஆக்சிசன் அணுக்களால் எண்முக வடிவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதேபோல ஆக்சிசன் அணுக்களும் இரும்பு அணுக்களால் எண்முக வடிவடிவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. FeII இலிருந்து FeIII ஆக ஆக்சிசனேற்றம் அடைவதே விகிதச்சமமின்மைக்கு உரிய காரணமாகும். FeII இன் சிறிய பகுதியான மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கை திறனுடன் FeIII ஆக மாற்றப்படுகிறது. இதனால் மூடிய பொதிவு ஆக்சைடு பின்னலில் நான்முகி நிலைகள் தோன்றுகின்றன[5]. 200 கெல்வின் வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் கட்டமைப்பில் சிறிதளவு மாற்றம் ஏற்படுகிறது. படிகச் சீரொழுங்கு சாய்சதுர சீரொழுங்கிற்கு மாறி மாதிரிகள் எதிர்பெர்ரோகாந்தப் பண்பை வெளிப்படுத்துகின்றன[5].

இயற்கைத் தோற்றம்

புவியின் மேலோட்டில் இரும்பு(II) ஆக்ச்சைடு தோராயமாக 9 சதவீதம் காணப்படுகிறது. இம்மேலோட்டிற்கு உள்ளேயே இது மின்சாரத்தை கடத்துவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். பூமியின் சுழற்சியில் ஏற்படும் இடையூறுகளுக்கு இதுவொரு சாத்தியமான விளக்கமாகும், புவிமேலோட்டுப் பண்புகளின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளால் கணக்கிடப்படவில்லை [6].

பயன்கள்

இரும்பு(II) ஆக்சைடு ஒரு நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அழகியல் துறையில் இதைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கியுள்ளது. உடலில் பச்சை குத்துதலுக்காகவும் சில இனைப்புகளுடன் இரும்பு(II) ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. நீர்வாழ் காட்சித் தொட்டிகளில் உள்ள பாசுபேட்டை நீக்கவும் இச்சேர்மம் பயன்பட்டுத்தப்படுகிறது.

இதையும் காண்க

இரும்பு(II) ஐதராக்சைடு

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இரும்பு(II)_ஆக்சைடு&oldid=2867490" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை