உருசிய தெற்கு நடுவண் மாவட்டம்

உருசியாவின் நிர்வாகப் பிரிவு

தெற்கு நடுவண் மாவட்டம் (Southern Federal District, உருசியம்: Ю́жный федера́льный о́круг, ஒ.பெ Yuzhny federalny okrug, பஒஅ[ˈjuʐnɨj fʲɪdʲɪˈralʲnɨj ˈokrʊk] யுஸ்னி ஃபெடரல்னி ஓக்ரக் , ஐபிஏ: [ˈJuʐnɨj fʲɪdʲɪˈralʲnɨj ˈokrʊk] ) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தப் பிரதேசம் பெரும்பாலும் தெற்கு ரஷ்யாவின் போன்டிக்-காஸ்பியன் புல்வெளியில் உள்ளது. தெற்கு நடுவண் மாவட்டத்திற்கு எல்லைகளாக உக்ரைன், அசோவ் கடல் ஆகியவையும், மேற்கில் கருங்கடல், மற்றும் கஜகஸ்தானும், கிழக்கில் காசுப்பியன் கடல் போன்றவை உள்ளன.[4] மே 2000 இல் நிறுவப்பட்டபோது தெற்கு நடுவண் மாவட்டம் முதலில் வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது, ஆனால் அரசியல் காரணங்களுக்காக 21 ஜூன் 2000 அன்று பெயர் மாற்றபட்டது. ஜனவரி 19, 2010 அன்று, தெற்கு நடுவண் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, இதன் முந்தைய தெற்கு பிரதேசங்களைக் கொண்டு புதியதாக வடக்கு காகசியன் நடுவண் மாவட்டம் உருவாக்கபட்டது .

தெற்கு நடுவண் மாவட்டம்
Южный федеральный округ
உருசியாவின் நடுவண் மாவட்டம்
தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தின் அமைவிடம். கிரிமியா, உக்ரேனிலிருந்து உருசியாவால் இணைக்கப்பட்டது பெரும்பாலும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாதது, ஆரஞ்சு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தின் அமைவிடம். கிரிமியா, உக்ரேனிலிருந்து உருசியாவால் இணைக்கப்பட்டது பெரும்பாலும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாதது, ஆரஞ்சு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
நாடு உருசியா
உருவாக்கம்18 மே 2000
Administrative centreரோஸ்டோவ்-ஆன்-டான்
அரசு
 • ஜனாதிபதி தூதர்விளாதிமிர் உஸ்டினோவ்
பரப்பளவு[1]
 • Total4,47,900 km2 (1,72,900 sq mi)
பரப்பளவு தரவரிசை7th
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • Total1,63,19,253[2]
 • தரவரிசை4th
 • அடர்த்தி33.1/km2 (86/sq mi)
 • நகர்ப்புறம்62.4%[2]
 • நாட்டுப்புறம்37.6%[2]
Federal subjects8 contained
Economic regions1 contained
ம.மே.சு. (2018)0.801[3]
very high · 6வது
இணையதளம்ufo.gov.ru
Map
சோச்சி

28 சூலை 2016 அன்று கிரிமியன் நடுவண் மாவட்டம் (இதில் கிரிமியா குடியரசு மற்றும் நடுவண் நகரமான செவாஸ்டோபோல் ஆகியவை அடங்கும் ) அகற்றப்பட்டு "நிர்வாக வசதிக்காக" தெற்கு நடுவண் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. கிரிமியன் நடுவண் மாவட்டம் உருசிய கூட்டமைப்புடன் கிரிமியாவை இணைத்த பின்னர் 21 மார்ச் 2014 அன்று நிறுவப்பட்டது. நடுவண் மாவட்டத்தில் கிரிமியா குடியரசு மற்றும் நடுவண் நகரமான செவாஸ்டோபோல் ஆகியவை அடங்கும், இவை இரண்டும் உக்ரைனின் பகுதியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு ஆகிய பகுதிகளையும் உருசியாவால் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களாக உக்ரைன் கருதுகிறது.[5][6] 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 13,854,334 (62.4% நகர்ப்புறம்) ஆகும். பரப்பளவு 420,900 சதுர கிலோமீட்டர்கள் (162,500 sq mi) ஆகும்.

புள்ளிவிவரங்கள்

நடுவண் பகுதிகள்

#கொடிகூட்டாட்சி அமைப்புகள்பரப்பளவு கி.மீ 2 இல்மக்கள் தொகைதலைநகரம் / நிர்வாக மையம்
1 அடிகேயா குடியரசு7,800447,109மேகோப்
2 அஸ்திரகான் மாகாணம்49,0001,005,276அஸ்ட்ரகான்
3 கல்மீக்கியா குடியரசு74,700292,410எலிஸ்டா
4 கிராஸ்னதார் பிரதேசம்75,5005,125,221கிராஸ்னோடர்
5 ரசுத்தோவ் மாகாணம்101,0004,404,013தொன்-மீது-ரசுத்தோவ்
6 வோல்கோகிராத் மாகாணம்112,9002,699,223வோல்கோகிராட்
சர்ச்சைக்குரிய பிரதேசங்கள்
கிரிமியா குடியரசு [a]26,1001,966,801சிம்ஃபெரோப்போல்
பி செவாஸ்டோபோல் [a]900379,200செவாஸ்டோபோல்

குறிப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை