ஊக்கம்

தன்முனைப்பு

ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல் (motivation) என்பது மக்களின் செயல்கள், ஆசைகள் மற்றும் தேவைகளுக்குக் காரணமாக அமைவதாகும். இதுவே ஒருவரின் செயலுக்கான வழியும், ஒருவர் ஒரு செயலைத் திரும்பச் திரும்பச் செய்வதற்கான காரணமும் ஆகும். உணர்வு நிலைக் காரணிகள் மற்றும் தன்னையறியாமல் இருக்கும் உள்மன நிலைக் காரணிகள் ஆகிய இரண்டிற்கும் இடையிலான ஒருங்கிணைந்த விளைவாகவே ஊக்கம் இருக்கின்றது.

ஒரு நபர் முன்னோக்கிச் செல்ல ஊக்குவிப்பதில் இது ஒரு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.[1] ஊக்கத்தைப் பெறுவதன் மூலம் நீடித்த மற்றும் திட்டமிட்ட பயிற்சியை செய்வது என்பது உயர்தர சாதனைகளின் (எ.கா. விளையாட்டு, மருத்துவம் மற்றும் இசை உலகில்) மையம் ஆகும்.[2] ஊக்கம் என்பது ஒரு நடத்தையை விளக்க பயன்படுத்தப்படும் ஒரு கட்டமைப்பு எனவும் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு நபர் செயல்படுவதற்கு இதுவே காரணமாகின்றது.

ஒருவர் திருப்தியடைவதற்கான தேவையே ஊக்கம் ஆகின்றது. இந்தத் தேவைகள் சமூகம், வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றினால் ஏற்படுவதாகவோ, அல்லது இயல்பாகவே தோன்றியதாகவோ இருக்கலாம். ஒரு தனி நபருக்குக் கொடுக்கப்படும் ஊக்கம் மற்றவர்களாலோ, அல்லது சில நிகழ்வுகளாலோ ஏற்படலாம். அவ்வாறாயின் அது வெளிப்புற ஊக்கமாகும் (Extrinsic motivation).[3] அவ்வாறின்றி, ஒருவரின் உள்ளிருந்தே கூட ஊக்கம் கிடைக்கலாம். அது உள்ளார்ந்த ஊக்கமாகும் (Intrinsic motivation).[4]

மேற்கோள்கள்

ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல் என்றால் என்ன, அது நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது?

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஊக்கம்&oldid=3521363" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை