ஊரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்

2019ஆம் ஆண்டில் வெளியான இந்தி மொழி அதிரடி திரைப்படம்

ஊரி: தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது 2019ல் இந்தியாவில் வெளிவந்த இராணுவ நடவடிக்கைத் திரைப்படம் ஆகும்.[1][2][3][4] இது இந்தி மொழிப் படம் ஆகும். இத்திரைப்படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் ஆதித்யா தரின் முதல் படம் இது. விக்கி கௌஷல், பரேஷ் ராவல், மொஹித் ரெய்னா மற்றும் யாமி கௌதம் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை 2016ல் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளான ஊரியில் நடந்தவற்றை அடிப்பாடையகக் கொண்டே எடுக்கப்பட்டது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இந்திய இராணுவத்தை சேர்ந்த மேஜர் விஹான் சிங் ஷெர்கிலைக் கொண்டுள்ளது.[5][6]

ஊரி படம் 11 ஜனவரி 2019 இல் வெளியிடப்பட்டது.[7] வெற்றிகரமாக ஓடிய இப்படம் உலகளவில் 336 கோடி ரூபாய் (55 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வசூலித்தது.[8][9] அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பெற்றுள்ளது.

கதை

படம் ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஏழு சகோதரி மாநிலங்கள்

முதல் அத்தியாயம் ஜூன் 2015 இல் மணிப்பூர் மாநிலத்தின், சந்தேல் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினரின் மீது நாகாலாந்தின் தேசிய சோசலிச கவுன்சில் (கே) போராளிகள் பதுங்கியிருந்து தாக்குவதிலிலிருந்து துவங்குகிறது. இதற்கு இந்தியத் தரைப்படை பதிலடி கொடுக்கும் விதமாக, ஒரு எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி மேஜர் விஹான் சிங் ஷெர்கில் (விக்கி கௌசல்) மற்றும் அவரது மைத்துனர் மேஜர் கரண் காஷ்யப் (மோகித் ரைனா) ஆகியோர் அடங்கிய அவரது படைப்பிரிவு வடகிழக்கு போராளிக் குழுவுக்குள் ஊடுருவி தாக்குகிறது, மேலும் பதுங்கியிருந்த அதன் முக்கிய தலைவரையும் கொல்கிறது. இந்த வெற்றிகரமான தாக்குதலுக்குப் பின்னர் அவருக்கும் அவரது படைப்பிரிவிற்கும் ஒரு இரவு விருந்தில் இந்தியப் பிரதமர் (ரஜித் கபூர்) வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ஆல்சைமர் நோயின் ஆறாம் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயுடன் நெருக்கமாக இருக்க விரும்புவதால் விஹான் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புகிறார். ஆனால் பிரதமர் ஓய்வுபெறுவதற்குப் பதிலாக புது தில்லியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் பணிபுரிந்து கொண்டு அவரது தாய்க்கு அருகில் இருக்குமாறு கூறுகிறார்.[10]

அமைதியற்ற அமைதி (புது தில்லி)

இரண்டாவது அத்தியாயத்தில் விஹான் புது தில்லி ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகத்தில் பணியில் சேர்வதையும், அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதையும் காட்டுகிறது. இந்த பிரிவு பதான்கோட் தாக்குதல் பற்றிய சுருக்கமான விளக்கத்தையும் காட்டுகிறது. விஹானின் தாயை கவனித்துக்கொள்வதற்காக ஜாஸ்மின் டி அல்மெய்டா (யாமி கௌதம்) என்ற செவிலி நியமிக்கப்படுகிறார். விஹான் இந்திய வான்படை லெப்டினன்ட் சீரத் கவுர் (கீர்த்தி குல்ஹாரி) என்பவரைச் சந்திக்கிறார். இராணுவ அதிகாரியாக இருந்து இறந்த அவரது கணவனின் தேசபக்தியை நிரூபிக்க முயற்சிக்கிறார். ஒரு நாள் விஹானின் தாய் காணாமல் போகிறார். விஹான் தனது தாயைத் தேடுகிறார், அவர் அறியாமையால் ஜாஸ்மினை குற்றம் சாட்டுகிறார். அவளுடைய பாதுகாப்பு தேவையில்லை என்று ஜாஸ்மினிடம் கூறுகிறார். விஹானின் தாயார் ஒரு பாலத்தின் கீழ் காணப்படுகிறார். ஜாஸ்மின் தன்னை ஒரு உளவுத்துறை முகவராக வெளிப்படுத்துகிறார். வடகிழக்குப் பகுதி பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சிறப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்பதற்கான குறிப்பை படம் வெளிப்படுத்துகிறது.

ஊரி

செப்டம்பர் 19, 2016 அன்று, சம்மு காசுமீர் மாநிலத்தின் ஊரி பகுதியின் படைப்பிரிவு தலைமையகத்தை ஆயுதமேந்திய நான்கு போராளிகள் அதிகாலையில் தாக்கி, 19 வீரர்களை தூக்கத்தில் கொன்று விடுகின்றனர். பயங்கரவாதிகளும் கொல்லப்படுகிறார்கள். ஆனால் பயங்கரவாதியின் வெடிகுண்டு தற்செயலாக வெடித்ததால் கரண் இறந்துவிடுகிறார். விஹான் உட்பட முழு குடும்பமும் ஆற்றவொண்ணாத துயரத்திற்கு ஆளாகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமைச்சகம் முடிவு செய்கிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கோவிந்த் பரத்வாஜ் (பரேஷ் ராவல்) ஒரு துல்லியத் தாக்குதல் யோசனையை தெரிவிக்கிறார். பிரதமர் அதற்கு அனுமதியளித்து தாக்குதலுக்கு பத்து நாட்கள் அவகாசம் அளிக்கிறார். விஹான் தனது வேலையை விட்டுவிட்டு உதம்பூர் தளத்திற்கு செல்கிறார். அவர் இந்திய இராணுவத் தளபதி அர்ஜுன் சிங் ராஜாவத் (ஷிஷிர் சர்மா) அவர்களைச் சந்தித்து தான் மேற்கொள்ளும் நடவடிக்கையை பற்றி அறிவிக்கிறார். தாக்குதலில் கொல்லப்பட்ட பெரும்பாலான வீரர்கள் இந்த ரெஜிமென்ட்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிறப்பு படையினருடன் பீகார் ரெஜிமென்ட் மற்றும் டோக்ரா ரெஜிமென்ட் ஆகியவற்றிலிருந்து உயரடுக்கு கட்டாக் படை கமாண்டோக்களை விஹான் தேர்வு செய்கிறார். விஹான் அவர்களிடம் தாக்குதல் முடியும்வரை தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த முடியாது என்று அவர்களுக்குத் தெரிவிக்கிறார், மேலும் வழக்கமான பயிற்சியாகவே இருக்குமாறு தங்கள் பணியை அமைத்துக்கொள்கிறார்கள். கமாண்டோக்கள் தங்கள் பயிற்சியைத் தொடங்குகிறார்கள்.[10][11][12][13][14]

வரவேற்பு

வசூல்

ஊரி படம் 11 ஜனவரி 2019 இல் வெளியிடப்பட்டது.[7] இப்படம் இந்தியாவில் 289.68 கோடி ரூபாய் மற்றும் பிற நாடுகளில் 47 கோடி ரூபாய் என உலகளவில் 336 கோடி ரூபாய் (55 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வசூலித்தது.[15][16] அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் 21 ஆவது இடம் பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் நடிப்பு
எடுத்துக் கொண்ட நாட்கள்உலகளாவிய மொத்தகுறிப்புக்கள்
8100 கோடி ரூபாய் ( யுஎஸ் $ 15 மில்லியன்)[15]
15200 கோடி ரூபாய் ( அமெரிக்க $ 31 மில்லியன்)
28300 கோடி ரூபாய் ( US $ 46 மில்லியன்)

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை