ஒமுவாமுவா

ஒமுவாமுவா (ʻOumuamua, /ˌməˈmə/ ()) என்பது சூரியக் குடும்பத்தின் வழியாகச் சென்ற ஒரு விண்மீனிடைப் பொருளைக் குறிக்கும். இதனை 2017 அக்டோபர் 19-இல் இது சூரியனுக்குக் கிட்டவாகச் சென்ற 40-வது நாளில் கனடிய இயற்பியலாளர் இராபர்ட் வெரிக் என்பவர் அவாய், அலேக்காலா வான்காணகத்தில் கண்டுபிடித்தார். இதனை இவர் கண்டபோது, அது புவியில் இருந்து ஏறத்தாழ 33,000,000 கிமீ (21,000,000 மைல்; 0.22 வாஅ) தூரத்தில், சூரியனை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது.

ஒமுவாமுவா
ʻOumuamua
விண்மீனிடைப் பொருள் ஒமுவாமுவா சூரியக் குடும்பத்தில் இருந்து விலகிச் செல்லும் காட்சி (ஓவியரின் கைவண்ணத்தில்) (animation)
கண்டுபிடிப்பு [1][2] and designation
கண்டுபிடித்தவர்(கள்) இராபர்ட் வெரிக்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் அலேக்கலா வான்காணகம், அவாய்
கண்டுபிடிப்பு நாள் 19 அக்டோபர் 2017
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் அவாய் மொழியில் சாரணம்[3]
வேறு பெயர்கள்[7]
  • 1I
  • 1I/ʻOumuamua
  • 1I/2017 U1 (ʻOumuamua)
  • A/2017 U1[4]
  • C/2017 U1[2]
  • P10Ee5V[5]
சிறு கோள்
பகுப்பு
விண்மீனிடைப் பொருள்[3]
மீவளைய சிறுகோள்[6]
காலகட்டம்2 நவம்பர் 2017 (JD 2458059.5)
சூரிய அண்மை நிலை 0.25534±0.00007 AU
அரைப்பேரச்சு −1.2798±0.0008 AU[Note 1]
மையத்தொலைத்தகவு 1.19951±0.00018
சராசரி சுற்றுப்பாதை வேகம் 26.33±0.01 கிமீ/செ (விண்மீனிடை)[8]
சராசரி பிறழ்வு 36.425°
சாய்வு 122.69°
Longitude of ascending node 24.599°
Argument of perihelion 241.70°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 100–1,000 m
330–3,280 அடி long[9][10][11]
230 m × 35 m × 35 m
755 அடி × 115 அடி × 115 அடி[12][13]
(est. at albedo 0.10)[12][13]
சுழற்சிக் காலம் Tumbling (non-principal axis rotation)[14]
Reported values include: 8.10±0.02 h[15]
8.10±0.42 h[16]
6.96+1.45
−0.39
h[17]
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.1 (spectral est.)[12]
0.06–0.08 (spectral est.)[16]
Spectral typeD?[12]
B–V = 0.7±0.06[12]
V-R = 0.45±0.05[12]
g-r = 0.47±0.04[16]
r-i = 0.36±0.16[16]
r-J = 1.20±0.11[16]
தோற்ற ஒளிர்மை 19.7 to >27.5[8][Note 2][18]
விண்மீன் ஒளிர்மை 22.08±0.445[6]

கருஞ் சிவப்பு நிறம் கொண்ட இந்த விண்மீனிடைப் பொருளின் அளவு: 100 மீ–1,000 மீ × 35 மீ–167 மீ × 35 மீ–167 மீ ஆகும்.[9] எரி விண்மீனைப் போன்று வால் எதுவும் ஒமுவாமுவாவுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. (அப்படி இருந்திருந்தால் சூரியனுக்கு அருகில் போகும்போது அது தெரிந்திருக்கும்.)[19][20][21] இதில் மாழைப் பொருட்கள் மிகுதியான அளவில் இருக்குமெனத் தெரிகின்றது. இதன் இயக்கம் சீரான சுழற்சியாக இல்லாமல், புரளுகின்ற ஒரு பொருள்போல இயங்கியதாலும், மிக வேகமாக சூரியனைக் கடந்து சென்றதாலும், இது சூரிய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பொருள் போலத் தெரியவில்லை. எனவே, இது சூரியனைச் சுற்றி இயங்கும் ஒரு பொருளாக இருக்க வாய்ப்பில்லை. இது இறுதியாக சூரிய மண்டலத்தை விட்டு வெளியே சென்று, விண்மீனிடை வெளியில் உலாவும் என்று கருதலாம். மேலும், ஒமுவாமுவா எங்கு தோன்றியது, அங்கிருந்து சூரிய மண்டலத்திற்கு வர எத்தனை ஆண்டுகள் ஆயின என்பன ஒன்றும் தெரியவில்லை.

பெயரிடுமுறை

நாம் அறிந்த வரையில், ஒமுவாமுவா ஒன்றுதான் சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருந்த வந்த ஒரு பொருள். இது ஒரு எரி விண்மீன் என்று கருதி C/2017 U1 என்ற பெயர் சூட்டப் பட்டது. பின் அது ஒரு நுண்கோள் (asteroid) என்று அறிந்த பிறகு, A/2017 U1 என்று பெயர் சூட்டப் பட்டது. அவாயி மொழியில் ஒமுவாமுவா (ʻoumuamua) என்றால் "தொலைவில் இருந்து வந்த முதல் தூதுவர்" என்று பொருள்படும்.[3][22] இந்த நுண்கோளுக்கு ராமா என்று வைக்கலாமா என்றும் கருதப்பட்டு, பின் கைவிடப்பட்டது.[23]

ஒமுவாமுவாவின் பாதை

ஒமுவாமுவாவைப் பற்றிய செய்திகள், விளக்கங்கள், தரவுகள் ஆகியன Pan-STARRS1, Canada-France-Hawaii, Gemini South (சிலி என்ற நாட்டில் உள்ளது) ஆகிய தொலைநோக்கிகள் வழியாகக் கிடைத்தன[24] இந்த நுண்கோள் வேகா (Vega) என்ற விண்மீன் உள்ள திசையில் இருந்து வந்ததுபோல் தெரிகின்றது.[25]

இதன் பாதை மிகைவளையப் (hyperbolic ) பாதையாக இருக்கலாம். இதன் விரைவு 26.33 km/s என்று கணக்கிடப்பட்டுள்ளது. சூரியனின் புவிஈர்ப்பு விசையினால் இந்தக் கல்லின் விரைவு 87.71 km/s (315,800 km/h) வரை அதிகமாயிற்று[Note 3].

ஒமுவாமுவாவின் பிறப்பிடம்

ஒமுவாமுவா சூரியமண்டலத்தின் வழியாகச் செல்லும் அசைவுப் படம்

இது வேகா என்ற விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்து இருக்குமேயானால், நம் சூரிய மண்டலம் வந்து சேர்ந்து அடைய இதற்கு 600,000 ஆண்டுகள் ஆகி இருக்கும். இதன் வேகத்தைப் பார்த்தால், நம் பால் வெளியில் பல இடங்களில் சுற்றி விட்டு, பின் நம் சூரிய மண்டலத்திற்குள் நுழைந்தது போல் தெரிகின்றது. பால் வெளியில் கோள் ஏதேனும் சிதைந்து அதிலிருந்து ஒமுவாமுவா வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.[26]

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
commons:Category:1I/ʻOumuamua
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒமுவாமுவா&oldid=3731130" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை