ஒரியோல் மாகாணம்

ஒரியோல் மாகாணம் (Oryol Oblast, உருசியம்: Орло́вская о́бласть, ஒர்லோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், உருசியாவின் ஒரு மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் ஒரியோல் நகரம். மக்கள் தொகை: 786,935 (2010 கணக்கெடுப்பு .)[5]

ஒரியோல் மாகாணம்
Oryol Oblast
மாகாணம்
Орловская область
ஒரியோல் மாகாணம் Oryol Oblast-இன் கொடி
கொடி
ஒரியோல் மாகாணம் Oryol Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[1]
பொருளாதாரப் பகுதிமத்திய[2]
நிர்வாக மையம்ஓரியோல்
அரசு
 • நிர்வாகம்மக்கள் பிரதிநிதிகள் சபை
 • ஆளுநர்வதிம் பத்தோம்சுக்கி[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்24,700 km2 (9,500 sq mi)
பரப்பளவு தரவரிசை70வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5]
 • மொத்தம்7,86,935
 • Estimate (2018)[6]7,47,247 (−5%)
 • தரவரிசை63வது
 • அடர்த்தி32/km2 (83/sq mi)
 • நகர்ப்புறம்65.5%
 • நாட்டுப்புறம்34.5%
நேர வலயம்[7] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-ORL
அனுமதி இலக்கத்தகடு57
அலுவல் மொழிகள்உருசியம்[8]
இணையதளம்http://www.adm.orel.ru/

புவியியல்

இந்த பிராந்தியம் மைய கூட்டமைப்பு மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் கலூகா மாகாணம், மற்றும் துலா வட்டாரம், மேற்கில் பிரையான்சுக் மாகாணம், தெற்கில் கூர்க்ஸ் ஒப்லாஸ்து, கிழக்கில் லிபெட்ஸ்க் ஒப்லாஸ்து, ஆகியன உள்ளன. இந்த ஒப்லாஸ்து வடக்கு தெற்காக 150 கிலோமீட்டர் (93 மைல்), கிழக்கு மேற்காக 200 கிலோமீட்டர் (120 மைல்) நீளமும் 24,700 சதுர கிலோமீட்ர் (9,500 சதுர மைல்) பரப்பளவு கொண்டு, சிறிய மாகாணமாக உள்ளது.[9]

பிராந்தியத்தின் சராசரி சனவரி வெப்பநிலை -8° டிகிரி செல்சியஸ் (18 ° பாரங்கீட்), சராசரி சூலை வெப்பநிலை +18° டிகிரி செல்சியஸ் (64° டிகிரி பாரன்ஹீட்) கொண்டுள்ளது. சராசரி மழையளவு 490 மிமீ முதல் 590 மிமீ வரை, பனிமழை ஆண்டுக்கு சராசரி 126 நாட்கள்வரை நிலவுகிறது. பிராந்தியத்தில் 4,800 சதுர கிலோமீட்டர் (1,900 சதுர மைல்) கரிசல் மண் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

இந்த ஒப்லாஸ்துவின் முக்கிய தொழில்கள் உணவு மற்றும் இலகுரக தொழிற்துறை, குறிப்பாக பொறியியல், உலோகத் தொழில்கள் உள்ளன. மேலும் பல்வேறு துறைகளுக்கு தேவையான கருவிகளான போர்க் லிப்ட் என்னும் பாரந்தூக்கிகள் சரக்குந்துகள், கட்டுமான மற்றும் விவசாய உபகரணங்கள், இயந்திரங்கள் நகராட்சி சேவைக் கருவிகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பிராந்தியத்தின் முதல் எண்ணியல் தொலைபேசி இணைப்பகம் , 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[10]

வேளாண்மை

ஒப்ளாஸ்துவின் வேளாண் நிலங்களில் பெரும்பாலும் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது. முதன்மையாக குளிர்காலத்தில் கோதுமை, கம்பு ஆகியன முக்கிய பயிர்களாக உள்ளன. மேலும் ஓட்ஸ் , பார்லி, உருளைக்கிழங்கு போன்றவையும் சாகுபடி ஆகிறன. மாட்டிறைச்சி, பால் போன்றவற்றுக்கான மாட்டுப் பண்ணை, பன்றிப் பண்ணை, இறைச்சி மற்றும் கம்பளிக்கான ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு , மற்றும் குதிரை வளர்ப்பு ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில்கள் உள்ளன. [11]

மக்கள் வகைப்பாடு

பிராந்தியத்தின் மக்கள் தொகை: 786,935 ( 2010 கணக்கெடுப்பு ); 860,262 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 890,636 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • 2012 முதன்மை புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 8 650 (1000 க்கு 11.1)
  • இறப்பு: 12 639 (1000 க்கு 16.2) [12]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[13]

2009 - 1.45 | 2010 - 1.50 | 2011 - 1.43 | 2012 - 1.54 | 2013 - 1.53 | 2014 - 1.53 (இ)

  • இனக்குழுவினர் (2010): [5]
  • ரஷ்யர்கள் - 96,1%
  • உக்ரைனியர்கள் - 1%
  • மற்றவர்கள் - 2.9%
  • 17.468 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இந்த இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[14]

சமயம்

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி,[15] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 40.9% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 5% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தினர், 1% பழைய நம்பிக்கையாளர்கள், 34% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 8% நாத்திகர், 9.1% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[15]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒரியோல்_மாகாணம்&oldid=3594041" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை