கருப்பர் உயிரும் உயிரே

Black Lives Matter (BLM) ( தமிழில் "கருப்பர் உயிரும் உயிரே" அல்லது "கறுப்பர் உயிரும் உயிரே" (க. உ. உ.)) என்பது கருப்பர்களைக் குறிவைத்த வன்முறை மற்றும் அமைப்பிய இனப்பாகுபாடுக்கு எதிராக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தொடங்கிய பன்னாட்டுச் செயற்பாட்டு இயக்கம் ஆகும். க. உ. உ. கருப்பர்கள் காவல்துறையால் கொல்லப்படுவது குறித்தும், இன அடையாளப்படுத்துதல், காவல்துறைக் கொடூரம், ஐக்கிய அமெரிக்க குற்றவியல் நீதி அமைப்பில் இனச் சமத்துவமின்மை குறித்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.[1]

கருப்பர் உயிரும் உயிரே
உருவாக்கம்சூலை 13, 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-07-13)
நிறுவனர்கள்
  • அலிசீயா கர்சா
  • பத்ரிசே கலர்ஸ்
  • ஓப்பல் டொமட்டி
வகைசமூக இயக்கம்
தலைமையகம்
  • உலகளாவியது
    (பெருமளவு ஐக்கிய அமெரிக்காவில்)
முக்கிய நபர்கள்
ஷான் கிங்
டீரே மேக்கின்சன்
ஜானிட்டா எல்சி
வலைத்தளம்BlackLivesMatter.com
ஆர்ப்பாட்டக்காரர்கள் "கருப்பர் உயிரும் உயிரே" பதாகைகளை ஏந்தி இரயில் தண்டவாளம் மீது படுத்துப் போராடுகின்றனர்.
செயின்ட் பால், மின்னசோட்டாவில் செப்டம்பர் 20, 2015 அன்று காவல் துறை கொடூரமாகத் தாக்கியாகக் குற்றம் சாட்டி  நடந்த கருப்பர் உயிரும் உயிரே மரணப் போராட்டம்.

2013 இல் ஆப்பிரிக்க அமெரிக்க பள்ளி மாணவரான டிரய்வான் மார்டின் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜார்ஜ் சிம்மர்மேன் விடுவிக்கப்பட்டதை அடுத்து, #BlackLivesMatter என்ற சமூக ஊடக கொத்துக்குறியை (hashtag) இந்த இயக்கம் தொடக்கியது. 2014 இல் காவல்துறை அத்துமீறலால் மைக்கேல் பிரௌன், எரிக் கார்னர் ஆகிய இரு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உயிர் இழந்தனர்.[2][3] அன்று முதல், காவல்துறை செயற்பாடுகளாலோ அவர்களின் கட்டுபாட்டில் இருக்கும் போதோ எண்ணற்ற ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இறந்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2015 கோடைக் காலத்தில், கருப்பர் உயிரும் உயிரே செயற்பாட்டாளர்கள் 2016 ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஈடுபாடு காட்டினார்கள்.[4] முதன்முதலில் '''#BlackLivesMatter''' என்ற அறைகூவலை முன்னெடுத்த அலீசியா கர்சா, பத்ரிசே கலர்ஸ், ஓப்பல் டொமட்டி ஆகியோர், 2014 தொடங்கி 2016க்குள் தங்கள் திட்டத்தை முப்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர் கிளைகளைக் கொண்ட நாடு தழுவிய இயக்கமாக மாற்றினார்கள்.[5] எனினும், ஒட்டு மொத்த கருப்பர் உயிரும் உயிரே இயக்கமானது, எந்த விதமான அதிகார அடுக்குகளையும் கொண்டிராமல், குவியமற்ற அமைப்புமுறையாகத் திகழ்கிறது.[6]

இந்த இயக்கம் பலதரப்பட்ட எதிர்வினைகளைக் கண்டது. இந்த இயக்கம் குறித்த ஐக்கிய அமெரிக்க மக்களின் கண்ணோட்டம் அவர்களது இனக்குழுவைப் பொருத்து பெரிதும் மாறுபட்டது.[7] "அனைத்து உயிரும் உயிரே" என்று கூட புதிதாக ஓர் அறைகூவல் தோன்றியது. எனினும், இது கருப்பர் உயிரும் உயிரே இயக்கம் விடுக்கும் செய்தியைப் பொருட்படுத்தாமம் தவறாகப் புரிந்து கொள்வதாக விமரிசிக்கப்பட்டது.[8] பெர்குசனில் இரு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, நீல உயிரும் உயிரே என்ற குறியீட்டைக் காவலர்களின் ஆதரவாளர்கள் உருவாக்கினர்.[9] சில கருப்பின குடிமை உரிமைத் தலைவர்கள் இந்த இயக்கத்தினரின் உத்திகளோடு உடன்படவில்லை.[10][11]

வியூகங்களும் உத்திகளும்

தொடக்கத்தில், கருப்பர் உயிரும் உயிரே இயக்கம் சமூக ஊடகங்கள், அவற்றில் குறியீடுகள் பயன்பாடு வழியாக ஆயிரக்கணக்கான மக்களின் கவனத்தை விரைந்து ஈர்த்தனர்.[12] அன்று முதல் பல்வேறு வகையான உத்திகளைப் பின்பற்றி வருகிறார்கள்.[13]

இணையமும் சமூக ஊடகங்களும்

2014 இல், அமெரிக்க வட்டார வழக்குக் கழகம் #BlackLivesMatter என்பதை அந்த ஆண்டின் சொல்லாக அறிவித்தது.[14][15] யெஸ்! மேகசின் #BlackLivesMatter என்பதை 2014 இல் உலகை மாற்றிய 12 குறியீடுகளுள் ஒன்றாக தேர்ந்தெடுத்தது.[16] முகநூல், டுவிட்டர் போன்ற தகவல் தொடர்பாடல் நுட்பங்கள் மூலம் பரவிய மீளிகள் இணையத்துக்கு வெளியேயும் ஆதரவைப் பெற்றுத் தந்தன.[17] எனினும், இந்த இயக்கத்தோடு முரண்படும் நீல உயிரும் உயிரே போன்ற இயக்கங்களும் மீளிகளைப் பயன்படுத்தி விமர்சனங்களையும் நையாண்டிகளையும் பரப்பினர்.[18]

செப்டம்பர் 2016 நிலவரப்படி "Black Lives Matter" என்னும் குறியீடு 30 மில்லியன் முறைக்கும் மேல் டுவிட்டரில் பதிவாக இருந்தது.[19] கரும் டுவிட்டர் என்ற பண்பாட்டு அடையாளத்தோடு இணையத்தில் முனைப்பாக இயங்கும் செயற்பாட்டாளர்கள் இந்த இயக்கம் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்த்தனர். இந்த இயக்கத்தின் வீச்சை இணையப் பயனர்களுக்குத் தெரிவிக்கவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இணைந்து போராடவும் #BlackLivesMatter என்ற குறீயிடு பெரும் பங்கு ஆற்றியது.[20] ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர். கதீஜா வைட், கருப்பர் உயிரும் உயிரே இயக்கம் பல்கலைக்கழக அளவில் கருப்பின மாணவர் இயக்கங்களைத் தோற்றுவிக்கும் புதிய அலையைக் கொணர்ந்திருக்கிறது என்று கூறுகிறார். காவலர் அத்துமீறல்கள் நிகழும் போது அருகில் உள்ளவர்கள் மிக இலகுவாக தங்கள் திறன்பேசிகளில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர முடிவது உலகெங்கும் இந்த இயக்கத்துக்கான ஆதரவைப் பெற்றுத் தருகிறது.[21]

களப் போராட்டங்கள்

"கைகளை உயர்த்து" என்று எழுதிய பதாகையோடு ஆர்ப்பாட்டக்காரர்கள்.

க. உ. உ. பொதுவாக களப் போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் இது குறித்து ஒரு நிலைப்பாடு எடுக்கத் தூண்டுகிறது.[22] ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மரணப் போராட்டங்கள் என்று பல்வேறு களப்போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறது.[23] இவ்வாறு கூடும் போது பல்வேறு அரசியல் முழக்கங்களை எழுப்புகிறார்கள். "கருப்பர் உயிரும் உயிரே", "கைகளை உயர்த்து, சுடாதே"[24], "எனக்கு மூச்சு முட்டுகிறது"[25][26] (எரிக் கார்னரின் இறப்பைக் குறிக்கிறது), "வெள்ளையின அமைதியே வன்முறை தான்",[27] "நீதி இல்லை, அமைதி இல்லை",[28][29] "அடுத்து என் மகனா?",[30] போன்றவை அத்தகைய சில முழக்கங்கள் ஆகும்.

ஊடகங்கள்

கெண்டிரிக் லமார் எழுதிய "ஆல்ரைட்" போன்ற பாடல்கள் ஆர்ப்பாட்டங்களின் போது மக்களை ஒன்று திரட்டும் முழக்கங்களாகப் பயன்படுகின்றன.[31] Bars4Justice, Stay Woke: The Black Lives Matter Movement ஆகிய ஆவணப்படங்கள் இந்த இயக்கத்தைப் பேசு பொருளாகக் கொண்டிருந்தன.[32][33]

மேற்கோள்கள்

Lim, Naomi (July 11, 2016). "Rudy Giuliani: Black Lives Matter 'inherently racist'". CNN Politics. பார்க்கப்பட்ட நாள் October 26, 2016.

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை