கர்த்தெகனா, கொலம்பியா

கர்த்தெகனா நகரம் (Cartagena), குடியேற்றக் காலத்தில் கர்த்தெகனா தெ இந்தியசு (Cartagena de Indias, எசுப்பானியம்: Cartagena de Indias [kaɾtaˈxena ðe ˈindjas]  ( கேட்க)), 1533இல் கொலம்பியாவின் கரிபியன் வலயத்தில் வடக்குக் கடலோரத்தில் நிறுவப்பட்ட பெரியத் துறைமுகமாகும். இது மக்டெலெனா ஆற்றுக்கும் சினு ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ளது. இது 1540களில் எசுப்பானியா மற்றும் அதன் வெளிநாட்டு இராச்சியத்தின் முதன்மைத் துறைமுகமாக விளங்கியது. குடியேற்றக் காலத்தில் இங்கிருந்து தான் பெருவிய வெள்ளி எசுப்பானியாவிற்கு ஏற்றுமதியும் ஆபிரிக்க அடிமைகளின் இறக்குமதியும் செய்யப்பட்டது. இத்துறைமுகம் கரீபிய கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாப்புடன் விளங்கியது.[2] இது பொலீவர் மாநிலத்தின் (டிபார்ட்மென்ட்) தலைநகரமாகவும் விளங்குகிறது. 2016இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 971,592.[1] கொலம்பியாவிலுள்ள நகரங்களில் ஐந்தாவது பெரிய நகரமாக கர்த்தெகனா உள்ளது. கரிபிய வலயத்தில் பார்ரென்குலாவை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகின்றது. கர்த்தெகனாவின் நகரியப் பகுதியும் நாட்டின் ஐந்தாவது பெரிய நகரியப் பகுதியாகும். சுற்றுலா தவிர்த்து கப்பல் துறையும் பெட்ரோலிய வேதித் தொழில்களும் முதன்மையான பொருளியல் செயற்பாடுகளாக உள்ளன.

கர்த்தெகனா
நகரம்
கர்த்தெகனா தெ இந்தியசு
மேல்: போகாகிராண்டெ துறைமுகம். இரண்டாம் வரிசை: சான்டா குரூசு மாங்கா தீவுக் காட்சி, எர்தியா கலையரங்கம். மூன்றாம் வரிசை: மணிக்கூண்டு (டோர் தெல் ரெலாஃ), பிலர் ரிபப்ளிகானோ, சான் பெலிப்பே பராகாசு கோட்டை (மேலே), சார்லசுட்டன் உண்டுறை விடுதி (கீழே). கடைசியில்: நகர வான்காட்சி.
மேல்: போகாகிராண்டெ துறைமுகம். இரண்டாம் வரிசை: சான்டா குரூசு மாங்கா தீவுக் காட்சி, எர்தியா கலையரங்கம். மூன்றாம் வரிசை: மணிக்கூண்டு (டோர் தெல் ரெலாஃ), பிலர் ரிபப்ளிகானோ, சான் பெலிப்பே பராகாசு கோட்டை (மேலே), சார்லசுட்டன் உண்டுறை விடுதி (கீழே). கடைசியில்: நகர வான்காட்சி.
கர்த்தெகனா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கர்த்தெகனா
சின்னம்
அடைபெயர்(கள்): "மாய நகரம்", "பல்லினத்தவர் நகரம்", "கர்த்தெகனா நகரம்", "பேராண்மையுடை", "பவளப்பாறை", " அருமையான"
குறிக்கோளுரை: "கர்த்தெகனாவால்"
போர் கர்த்தெகனா
கர்த்தெகனா is located in Colombia
கர்த்தெகனா
கர்த்தெகனா
ஆள்கூறுகள்: 10°24′N 75°30′W / 10.400°N 75.500°W / 10.400; -75.500
நாடு Colombia
மாநிலம் (டிபார்ட்மென்ட்) பொலீவர்
வலயம்கரீபியன்
நிறுவல்சூன் 1, 1533
தோற்றுவித்தவர்பெத்ரோ தெ எரெதியா
பெயர்ச்சூட்டுகர்த்தெகனா, எசுப்பானியா
அரசு
 • நகரத்தந்தை (இடைக்காலம்)செர்கியோ லண்டனோ சூரெக்
பரப்பளவு
 • நகரம்572 km2 (221 sq mi)
ஏற்றம்2 m (7 ft)
மக்கள்தொகை (2016)
 • நகரம்9,71,592 [1]
 • தரவரிசைஐந்தாமிடத்தில்
 • பெருநகர்10,13,389[1]
இனங்கள்கர்த்தெகனீரோ(க்கள்) (எசுப்பானியம்)
நேர வலயம்கொலம்பிய நேரம் (ஒசநே-5)
அஞ்சல் குறியீடு130000
தொலைபேசி குறியீடு57 + 5
மமேசு (2008) 0.798 – High
புரக்கும் புனிதர்கள்செயின்ட் காத்தரீன், செபஸ்தியார்
சராசரி வெப்பநிலை30 °C (86 °F)
இணையதளம்www.cartagena.gov.co (எசுப்பானியம்)

இந்த நகரம் சூன் 1, 1533இல் நிறுவப்பட்டது. இது எசுப்பானியாவிலுள்ள கர்த்தெகனாவின் நினைவாக பெயரிடப்பட்டது (குறிப்பு:எசுப்பானிய கர்த்தெகனா தூனிசியாவின் கார்த்திஜை ஒட்டிப் பெயரிடப்பட்டது). கர்த்தெகனா விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் பொ.யு முந்தைய 4000 ஆண்டுகளிலேயே உள்ளக மக்கள் வாழ்ந்துள்ளனர். எசுப்பானியக் குடியேற்றக் காலத்தில் கர்த்தெகனா எசுப்பானியப் பேரரசின் நிர்வாகத்திற்கும் விரிவாக்கத்திற்கும் முதன்மையான மையமாக விளங்கியது. இது அரசியல், சமய, பொருளியல் செயற்பாடுகளுக்கான மையமாக இருந்தது.[3] 1984இல் கர்த்தெகனாவின் மதில்சூழ் நகரமும் கோட்டையும் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:EB1911 poster

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை