கலினின்கிராத்

கலினின்கிராத் (Kaliningrad, உருசியம்: Калининград; முன்னாள்r செருமானியப் பெயர்: கோனிசுபர்க்; இத்திய மொழி: קעניגסבערג, கினிக்சுபர்க்) என்பது உருசியாவின் கலினின்கிராத் மாகாணத்தின் நிருவாக மையம் ஆகும். கலினின்கிராத் மாகாணம் பால்டிக் கடல் பகுதியில் போலந்து, லித்துவேனியா ஆகிய நாடுகளிடையே அமைந்துள்ள ஒரு உருசியப் புறநில ஆட்சிப் பகுதியாகும்.

கலினின்கிராத்
Калининград
City[1]
திருக்குடும்பக் கோவில்; கோனிசுபர் பேராலயம்; "மீனவர்களின் கிராமம்"; பிரான்டன்பர்க் வாயில்; அரசரின் வாயில்; பிரிகோலியா ஆறு
திருக்குடும்பக் கோவில்; கோனிசுபர் பேராலயம்; "மீனவர்களின் கிராமம்"; பிரான்டன்பர்க் வாயில்; அரசரின் வாயில்; பிரிகோலியா ஆறு
கலினின்கிராத்-இன் கொடி
கொடி
சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[2]
கலினின்கிராத்-இன் அமைவிடம்
Map
கலினின்கிராத் is located in உருசியா
கலினின்கிராத்
கலினின்கிராத்
கலினின்கிராத்-இன் அமைவிடம்
கலினின்கிராத் is located in உருசியா
கலினின்கிராத்
கலினின்கிராத்
கலினின்கிராத் (உருசியா)
ஆள்கூறுகள்: 54°42′01″N 20°27′11″E / 54.70028°N 20.45306°E / 54.70028; 20.45306
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்கலினின்கிராத் மாகாணம்[1]
நிறுவிய ஆண்டுSeptember 1, 1255[3]
அரசு
 • நிர்வாகம்நகரசபை உறுப்பினர்கள்[4]
 • தலைவர்[4][5]
பரப்பளவு[3]
 • மொத்தம்223.03 km2 (86.11 sq mi)
ஏற்றம்5 m (16 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[6]
 • மொத்தம்4,31,402
 • Estimate (2018)[7]4,75,056 (+10.1%)
 • தரவரிசை2010 இல் 40-வது
 • அடர்த்தி1,900/km2 (5,000/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைகலினின்கிராதின் மாகாண நகரம்[1]
 • Capital ofகலினின்கிராத் மாகாணம்,[8] city of oblast significance of Kaliningrad[1]
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்கலினின்கிராத் நகர வட்டம்[9]
 • Capital ofகலினின்கிராத் நகர வட்டம்[9]
நேர வலயம்[10] (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு(கள்)[11]236001, 236003–236011, 236013–236017, 236019–236024, 236028, 236029, 236034–236036, 236038–236041, 236043, 236044, 236700, 236880, 236885, 236890, 236899, 236931, 236950, 236960–236962, 236967, 236970, 236980–236983, 236985, 236989, 236999
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 4012
City Dayசூலை மாதத்தில் முதல் சனிக்கிழமை
இணையதளம்www.klgd.ru

ஐரோப்பிய நடுக்காலப் பகுதியில், இது துவாங்ஸ்தி என்ற பண்டைய புருசியக் குடியிருப்பாக இருந்தது. 1255 இல், வடக்கு சிலுவைப் போர்க் காலத்தில் புதிய கோட்டை கட்டப்பட்டது. இந்நகரம் புருசியாவின் குறுநிலம், மற்றும் கிழக்குப் புருசியா (இன்றைய செருமனி) ஆகியவற்றின் தலைநகராக விளங்கியது. இரண்டாம் உலகப் போரில் இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது. இது உருசிய நகரமான போது, இதன் குடிமக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 431,902 ஆகும்.2010Census

வரலாறு

ஐரோப்பிய நடுக்காலப் பகுதியில், இது துவாங்ஸ்தி என்ற பண்டைய புருசியக் குடியிருப்பாக இருந்தது. 1255 இல், வடக்கு சிலுவைப் போர்க் காலத்தில் புதிய கோட்டை கட்டப்பட்டது. இந்நகரம் புருசியாவின் குறுநிலம், மற்றும் கிழக்குப் புருசியா (இன்றைய செருமனி) ஆகியவற்றின் தலைநகராக விளங்கியது. இங்கு பெரும்பான்மையாக செருமனியினரும், சிறுபான்மையினராக போலந்து லித்துவேலிய நாட்டவரும் வாழ்ந்து வந்தனர். இரண்டாம் உலகப் போரில் 1994 ஆம் ஆண்டில் இந்நகரம் பிரித்தானியரின் குண்டுவீச்சுக்கு இலக்காகியும், 1945 ஆரம்பத்தில் சோவியத்தின் ஆக்கிரமிப்பாலும் பெரும் அழிவுக்குள்ளானது. போரின் முடிவில், அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீ ஆகியோரின் ஒப்புதலுடன், இது சோவியத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.[12] இது சோவியத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்ட போது, இதன் குடிமக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

1946 இல் கோனிசுபர்க் என்ற நகரின் பெயர் போல்செவிக்கின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான மிக்கைல் கலினின் என்பவரின் நினைவாக கலினின்கிராத் என மாற்றப்பட்டது. எஞ்சியிருந்த செருமானியர்கள் அங்கிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, சோவியத் மக்கள் குடியேற்றப்பட்டனர். அதிகாரபூர்வ மொழியாக இருந்த இடாய்ச்சு மொழி அகற்றப்பட்டு உருசிய மொழி அதிகாரபூர்வமாக்கப்பட்டது.

பனிப்போர்க் காலத்தில் இம்மாகாணம் இப்பிராந்தியத்தில் முக்கியத்துவம் பெற்றது. 1950களில் சோவியத் பால்ட்டிக் கடற்படையினரின் தலைமையகம் இங்கு இருந்தது. பனிப்போர்க் காலத்தில் வெளிநாட்டவர் இங்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கலினின்கிராத்&oldid=3238781" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை