பால்டிக் கடல்

பால்டிக் கடல் என்பது, மத்தியதரைக் கடலைச் சார்ந்த ஒரு கடல் ஆகும். இது மத்திய ஐரோப்பாவுக்கும், வட ஐரோப்பாவுக்கும் இடையில், குறுக்குக்கோடுகள் 53°வ, 66°வ என்பவற்றுக்கும், நெடுங்கோடுகள் 10°கி, 30°கி என்பவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. இசுக்கன்டினேவியத் தீவக்குறையின் சுவீடியப் பகுதி, ஐரோப்பியத் தலைநிலம், டேனியத் தீவுகள் என்பன இக்கடலின் எல்லைகளாக உள்ளன. இது கட்டெகாட் என்னும் கடற்பகுதி, இசுக்காகெராக் கடற்பகுதி என்பவற்றினூடாக அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்கிறது. பால்டிக் கடல் வெண்கடற் கால்வாய் என்னும் செயற்கை நீர்வழியூடாக வெண் கடலுடனும், கியெல் கால்வாய் எனப்படும் இன்னொரு செயற்கை நீர்வழியூடாக வட கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் போத்னியக் குடாவும், வடகிழக்குப் பகுதியில் பின்லாந்துக் குடாவும், கிழக்கில் ரீகா குடாவும் எல்லைகளாக இருப்பதாகக் கொள்ளலாம். அதேவேளை, இக்குடாக்கள் பால்டிக் கடலில் பகுதிகளாகவும் கொள்ளப்படலாம். டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இக்கடலைத் தொட்டுக்கொண்டுள்ளன.

பால்டிக் கடல்
பால்டிக் கடலின் வரைபடம்
அமைவிடம்ஐரோப்பா
ஆள்கூறுகள்58°N 20°E / 58°N 20°E / 58; 20
வகைகடல்
முதன்மை வரத்துடோகாவா, நேமன், நேவா, ஒடெர், விசுட்டுலா
முதன்மை வெளியேற்றம்டேனிய நீரிணை
வடிநில நாடுகள்கரையோரம்: டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, செருமனி, லாத்வியா, லித்துவேனியா, போலந்து, உருசியா, சுவீடன்
கரையோரம் அற்றது: பெலருஸ், செக் குடியரசு, நோர்வே, சிலோவாக்கியா, உக்ரைன்[1]
நீர்தங்கு நேரம்25 years
குடியேற்றங்கள்கோபனாவன், கதான்ஸ்க், ஹெல்சின்கி, கலினின்கிராத், Kiel, Klaipėda, Lübeck, Luleå, ரீகா, Rostock, சென் பீட்டர்ஸ்பேர்க், ஸ்டாக்ஹோம், தாலின், Turku
மேற்கோள்கள்[2]

வரலாறு

பண்டைய காலம்

ரோம சாம்ராஜ்யத்தின் காலப்பகுதியில், பால்டிக் கடலை மேரே சுபிக்கம் அல்லது மேரே சர்மட்டிக்கம் என்று அழைக்கப்பட்டது. டேக்டீஸ் பொ.ஊ.மு. 95 இல் அக்கிரிகோலா மற்றும் ஜெர்மானியா பகுதிகளை சேர்ந்தவர்கள் சூபி பழங்குடியினத்தவரை மேரே சுபிக்கம் என்றழைத்தனர் ஏனென்றால் வசந்தகாலங்களில் உறைந்துபோன பால்டிக் கடல் பனிக்கட்டி துண்டுகளாக உடைந்து மிதக்கத் தொடங்கும் அப்போது சூபி இனத்தவர் தென்மேற்கு பக்கமாக உள்ள இப்போதுள்ள ஜெர்மனியில் குடிபெயரத் தொடங்குவர். அங்கு ரெனிலென்டு என்ற பகுதியில் சிறிது காலம் தங்கியிருப்பர். இந்த வரலாற்று சிறப்புமிக்கப் பகுதியில் இன்றும் இவர்களை ஸ்வாபியா என்ற பெயரில் அழைக்கின்றனர். ஜோர்டான் நாட்டினர் ஜெடிக்கா என்றழைக்கின்றனர்.

மத்திய காலம்

ஆரம்ப கால மத்திய காலத்தில், நோர்சியன் (ஸ்காண்டிநேவியன்) வணிகர்கள் பால்டிக் சுற்றுவட்டாரத்தில் வர்த்தக பேரரசை உருவாக்கினார்கள். பின்னர், நோர்ஸ் பால்டிக் கடலை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர தெற்கு கடற்கரைப் பகுதியில் வென்டிஷ் பழங்குடியினருக்கு எதிராக போராடினர். நோர்ஸ் ரஷ்யாவின் ஆறுகளை வர்த்தக வழிகளாக பயன்படுத்தியது, இறுதியில் கறுப்பு கடல் மற்றும் தெற்கு ரஷ்யாவிற்கு தங்கள் வழியைக் கண்டறிந்தது. இந்த நோர்ஸ்-ஆதிக்கம் நிறைந்த காலம் வைகிங் காலம் என குறிப்பிடப்படுகிறது.

வைகிங் காலத்தில், ஸ்காண்டிநேவியர்கள் பால்டிக் கடலை Austmarr ("கிழக்கு ஏரி") என்று குறிப்பிட்டுள்ளனர். "கிழக்கு கடல்" என்று ஹெர்ம்ஸ்ரிங்கலாவில் தோன்றுகிறது மற்றும் ஈஸ்ட்ரா உப்பு என்று சோற்லா பாட்றாவில் தோன்றுகிறது.

இந்தக் கடலில் மீன் தவிர கூடுதலாக ஆம்பர் கிடைக்கிறது, குறிப்பாக போலந்து, ரஷ்யா மற்றும் லித்துவேனியா நாடுகள் இதன் எல்லைகளுக்குள் அதன் தெற்கு கரையில் இருக்கிறது. பால்டிக் கடலின் தென் கரையோரத்தில் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ள அம்பர் படிமங்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன.[3] எல்லைக்குட்பட்ட நாடுகள் மரபுவழியாக பால்டிக் முழுவதும் மரத்தண்டு, மரம் தார், ஆளிவிதை, சணல் மற்றும் ஃபர் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. ஆரம்பகால மத்திய காலப் பகுதிகளில், சுவீடன் இரும்பு மற்றும் வெள்ளி ஏற்றுமதி செய்யப்பட்டது. போலந்து நாட்டின் இன்றலவும் உப்புச் சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இவ்வாறு பால்டிக் கடல் நீண்ட நெடிய வணிக கப்பல் போக்குவரத்து மிகுந்த பகுதியாக பயன்பட்டது.

மோதல்கள்

8 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பொமரெனியா மற்றும் பிரசியா ஆகிய பகுதிகளிலிருந்த பால்டிக் கடல் பகுதிகளில் கடல் கொல்லைகள் (திருட்டு) மிகுந்த இருந்தது.

11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, பால்டிக் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப்பகுதி முக்கியமாக ஜெர்மனியில் இருந்து குடியேறியவர்களால் குடியேற்றப்பட்டது, இது (Ostsiedlung) "கிழக்கில் குடியேறல்" என்று அழைக்கப்படும் ஒரு இயக்கம். மற்ற குடியேறிகள் நெதர்லாந்து, டென்மார்க், ஸ்காட்லாந்து ஆகிய இடங்களிலிருந்து வந்தவர்கள். போலப்பியன் அடிமைகள் படிப்படியாக ஜெர்மனியர்களுடன் இணைக்கப்பட்டனர். டென்மார்க் படிப்படியாக பால்டிக் கரையோரத்தின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது, இந்த நிலை 1227 போரானோவ்வெல் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தனது கட்டுப்பாட்டை இழக்கும் வரை தொடர்ந்தது.

13 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில், வடக்கு ஐரோப்பாவில் வலுவான பொருளாதார சக்தியாக ஹன்சியடிக் கூட்டமைப்பு இருந்தது, இது பால்டிக் கடல் மற்றும் வட கடற்பகுதி முழுவதும் உள்ள வணிக நகரங்களின் கூட்டமைப்பு ஆகும். பதினாறாவது மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில், போலந்து, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகியவை டொமினியம் மரிஸ் பால்கிடிக் ("பால்டிக் கடல் மீது ஆதிக்கம் செலுத்துதல்") என்று அழைக்கப்படும் பல போர்கள் அவர்களுக்குள் போரிட்டன. இறுதியில், சுவீடன் நாடுதான் பால்டிக் கடல் முழுவதையும் சுற்றியிருந்த நாடாகும். சுவீடனில் பால்டிக் கடல் மரே நாஸ்டெம் பால்டிக் ("நம் பால்டிக் கடல்") என்று குறிப்பிடப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் சுவீடனின் போர் நோக்கம் பால்டிக் கடல் முழுவதையும் சுவீடன் கடலாக மாற்றுவதாக இருந்தது ஆனால் இதில் வெற்றி பெற முடியவில்லை. எவ்வாறாயினும், பதினேழாம் நூற்றாண்டில் பால்டிக் வர்த்தகத்தை ஆதிக்கம் செலுத்திய நாடு டச்சு நாடாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில், ரஷ்யா மற்றும் பிருசியா பால்டிக் கடல் மீது ஆதிக்கம் செலுத்தும் முன்னணி சக்திகள் ஆனது. பெரிய வடக்குப் போரில் சுவீடன் ரஷ்யாவிடம் தோற்றதால் ரஷ்யா கிழக்கு கரையோரம் முழுவதும் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. பால்டிக் கடல் முழுவதும் ரஷ்யா ஒரு மேலாதிக்க சக்தியாக மாறியது. ரஷ்யாவின் பீட்டர் பேர்ரசர் பால்டிக் கடலின் முக்கியத்துவத்தைக் உண்ர்ந்து, பின்லாந்து வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் நெவா நதியின் வாயிலில் தனது புதிய தலைநகரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கை உருவாக்கினார். பால்டிக் பிராந்தியத்தில் உள்ள வர்த்தகம் மட்டுமல்லாமல், வட கடல் பகுதி, குறிப்பாக கிழக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துடனும் மரம், தார், ஆளி மற்றும் சணல் வர்த்தகத்தில் ஈடுபட, பால்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவின் கடற்படைகள் தேவைப்பட்டன.

கிரிமியப் போரின் போது, ஒரு கூட்டு பிரித்தானிய மற்றும் பிரஞ்சு படைகள் பால்டிக் ரஷ்ய படைகளின் கோட்டைகளை தாக்கின. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் பாதுகாப்பு அரனாக விளங்கிய ஹெல்சின்கி மற்றும் கெரோடட் நகரங்களை தாக்கியது; மற்றும் அவர்கள் ஆலாண்ட் தீவுகளில் போமர்குண்டத்தையும் அழித்தனர். 1871 இல் ஒன்றுபட்ட ஐக்கிய ஜெர்மனி, முழு தென் கடற்கரையும் ஜெர்மனியாக மாறியது. முதலாம் உலகப் போரின் ஒரு பகுதியாக பால்டிக் கடலிலும் போர் நடந்தது.

இரண்டாம் உலகப் போரிலிருந்து

இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து, சோவியத் யூனியன், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், பால்டிக் கடலில் இரசாயன ஆயுதங்களை கலந்து, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட காரணமாக இருந்தனர். இப்போதும் கூட மீனவர்களின் வலைகளில் தற்செயலாக இந்த இராசாயன ஆயுதங்கள் சிக்கி சிலவற்றை மீட்டெடுக்கின்றனர்: ஹெல்சிங்கி ஆணைக்குழுவின் மிக சமீபத்தில் கிடைத்த அறிக்கையானது 2005 ஆம் ஆண்டில் சுமார் 105 கிலோ (231 பவுண்டு) பொருட்களைச் சேதப்படுத்தும் நான்கு சிறிய அளவிலான இரசாயன ஆயுதங்களைப் கிடைக்கப்பட்டுள்ளது. இது 2003 ஆம் ஆண்டிலிருந்து 1,110 கிலோ (2,450 எல்பி) இரசாயன பொருட்களுக்கான 25 சம்பவங்களின் ஒன்றாகும். இதுவரை, அமெரிக்காஅரசு எவ்வளவு இரசாயன பொருட்களை கடலில் கலந்தது என்பதை வெளிப்படுத்த மறுத்துவிட்டது. இதனால் இரசாயன பாட்டில்களில் ஏற்படும் கசிவால் வாழும் சுழலில் இழப்பு மற்றும் பிற பொருட்கள், பால்டிக் கடலின் கணிசமான பகுதிகளை மெதுவாக விஷமாக மாற்றி வருகிறது.

1945 க்குப் பின்னர், ஜெர்மன் மக்கள் கிழ்க்கிலிருந்து வரிசையாக அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர், இது இடம்பெயர்ந்த போலந்துகாரர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடமளித்தது. போலந்து மிகப்பெரிய தெற்குக் கரையோரப் பகுதிகளை பெற்றது. சோவியத் ஒன்றியம் பால்டிக் மற்றொரு பகுதியாக கலினின்கிராட் ஒப்லாஸ்து பெற்றது. கிழக்கு கரையில் பால்டிக் நாடுகள் சோவியத் ஒன்றியத்தால் இணைக்கப்பட்டன. நேட்டோ மற்றும் வார்சா உடன்பாடு: பால்டிக் பின்னர் இராணுவ முகாங்களை எதிர்த்துப் பிரிக்கப்பட்டிருந்தது. போர் உன்டாகும் சூழல் இருந்ததால், போலந்து கடற்படை டேனிஷ் தீவுகளுக்கு படையெடுக்க தயாராக இருந்தது. இந்த எல்லை நிலை வணிகம் மற்றும் பயணத்தை தடைசெய்தது. 1980 களின் பிற்பகுதியில் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சிகளின் சரிவிற்குப் பின் இது முடிவடைந்தது.

வெள்ளப் பெருக்கு

நீரின் அளவு சாதாரண அளவிற்கு மேல் ஒரு மீட்டருக்கு மேல் இருக்கும் போது புயல் வெள்ளப்பெருக்கு பொதுவாக ஏற்படும். வார்னேமுண்டில் 1950 ஆம் ஆண்டு முதல் 2000 வரையான காலத்தில் 110 வெள்ளங்கள் ஏற்பட்டன, சராசரியாக வருடத்திற்கு இரண்டு வெள்ளங்கள் என்ற கண்க்கில் உண்டானது.[4]

1320, 1449, 1625, 1694, 1784 மற்றும் 1825 ஆகிய ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு நிகழ்ந்தது. வெள்ளப்பெருக்க நிகழ்வுகள் 1304 ஆம் ஆண்டின் அனைத்து புனிதர்களின் வெள்ளப்பெருக்கு என்றழைக்கப்படுகிறது.[5]

1872 ஆம் ஆண்டு முதல், பால்டிக் கடலில் நீர் நிலைகளின் வழக்கமான மற்றும் நம்பகமான பதிவுகள் உள்ளன. 1872 ஆம் ஆண்டின் வெள்ளப்பெருக்கு 2.43 m (8 அடி 0 அங்) அதிகபட்சமாக கடல் மட்டத்திலிருந்து வார்னேமுண்டில் 2.83 m (9 அடி 3 அங்). கடைசி வெள்ளப்பெருக்கில், நீரின் சராசரி அளவு 1904 இல் கடல் மட்டத்திற்கு மேல் 1.88 m (6 அடி 2 அங்), 1913 இல் 1.89 m (1.89 m), 1995 ஆம் ஆண்டு 2-4 நவம்பர் 1.68 m (5 அடி 6 அங்) மற்றும் 21 பிப்ரவரி 2002 இல் 1.65 m (5 அடி 5 அங்).[6]

புவியியல்

புவிசார் தரவு

இவற்றையும் பார்க்கவும்

  1. பால்டிக் கடலை சூழவுள்ள நகரங்கள் பட்டியல்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பால்டிக்_கடல்&oldid=3925374" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை