கெனிங்காவு

சபாவின் ஐந்தாவது பெரிய நகரம்

கெனிங்காவு என்பது (மலாய்: Pekan Keningau; ஆங்கிலம்: Keningau Town); மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, கெனிங்காவு மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபாவின் ஐந்தாவது பெரிய நகரம்; தாவாவ்; லகாட் டத்து ஆகிய நகரங்களுக்கு அடுத்தப் பெரிய நகரம். மேலும் பழைமையான நகரங்களில் ஒன்றாகும். [1]

கெனிங்காவு நகரம்
Keningau Town
சபா
Keningau town centre
கெனிங்காவு நகர மையம்.
Location of கெனிங்காவு நகரம்
கெனிங்காவு நகரம் is located in மலேசியா
கெனிங்காவு நகரம்
கெனிங்காவு நகரம்
சபாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 5°20′00″N 116°10′00″E / 5.33333°N 116.16667°E / 5.33333; 116.16667
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி பிரிவு
மாவட்டம்கெனிங்காவு மாவட்டம்
நகராண்மைக் கழகம்1 January 2022
மக்கள்தொகை
 • மொத்தம்173,130
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு89xxx0 to 89xx49
மலேசியத் தொலைபேசி+6-087
மலேசிய வாகனப் பதிவெண்கள்SU NNNN

மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலுவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் அமைந்து இருந்தாலும்; தம்புனான் - தெனோம் ஆகிய இரு பெரும் நகரங்களுக்கும் இடையில் இந்த நகரம் அமைந்து உள்ளது என்பது தான் மிக முக்கியமான புவியியல் கூறு. இந்த நகரத்தில் 173,130 மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.[1]

கெனிங்காவில் முக்கியமாக கடாசான், மூருட், சீனர்கள், பஜாவ் போன்ற மக்கள் வசிக்கின்றனர். பனை எண்ணெய்த் தோட்டங்களில் கணிசமான அளவிற்கு இந்தோனேசிய மக்கள் பணிபுரிகின்றனர். ஒரு காலத்தில் இலவங்கப்பட்டை மற்றும் வெப்பமண்டல மரங்களுக்கு பெயர் பெற்ற இடமாக விளங்கியது.[2]

சொல் பிறப்பியல்

கெனிங்காவு மாவட்டத்தின் உள்பகுதிகளில் ஏராளமான ஜாவானிய இலவங்கப் பட்டை (Cinnamomum burmannii) மரங்கள் இருந்தன. அந்த மரங்களில் இருந்து கெனிங்காவ் என்ற பெயர் பெறப்பட்டது. இந்த மரங்கள் உள்நாட்டில் கோனிங்கா என்று அழைக்கப் படுகின்றன. மலாய் மொழியில் 'காயூ மானிஸ்'.[2]

இந்த மரம் சில சமயங்களில் 'மசாலாப் பொருட்களின் ராஜா' என்றும் குறிப்பிடப் படுகிறது. அதன் பட்டைகள், பிரித்தானிய போர்னியோ நிறுவனத்தால் மசாலாப் பொருள்களாக விற்கப்பட்டன.[3]

வரலாறு

1893-ஆம் ஆண்டில் கெனிங்காவ் ஒரு சாதாரண நகரமாகத் தான், தன் தொடக்கத்தைத் தொடங்கியது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தார், கெனிங்காவில் ஒரு வணிக நிலையத்தையும்; பின்னர் ஒரு மாவட்ட அலுவலகத்தையும் அமைத்தனர்.

அந்தக் காலக் கட்டத்தில், கெனிங்காவில் இருந்து சேகரிக்கப்பட்ட இலவங்கப்பட்டை தெனோம் நகரில் இருந்து இரயில் வண்டி வழியாக ஜெசல்டன் (தற்சமயம்: கோத்தா கினபாலு) கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டது, பின்னர் அங்கு இருந்து ஐரோப்பா முழுவதும் விநியோகிக்கப்பட்டு சந்தைப் படுத்தப்பட்டது.[2]

ஜப்பானியர்கள் ஆட்சி

பிரித்தானியக் காலனித்துவ காலத்தில், பிரித்தானிய வடக்கு போர்னியோவின் மிக முக்கியமான நிர்வாக மையங்களில் ஒன்றாக கெனிங்காவ் நகரம் விளங்கியது.[2]

இரண்டாம் உலகப் போரின் போது, வடக்கு போர்னியோவை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்த காலக் கட்டத்தில், கெனிங்காவ் நகரத்தைத் தங்களின் முக்கிய நிர்வாக மையங்களில் ஒன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

நகரப் பிரிவுகள்

கெனிங்காவ் தெருக் காட்சி

கெனிங்காவ் 1

கெனிங்காவ் 1 (Keningau 1), கெனிங்காவ் நகருக்கு தெற்கே உள்ளது. சில வரலாற்று 'கடை வீடுகள்' கொண்ட துடிப்பான வணிக மாவட்டம்.

கெனிங்காவ் 2 புதிய நகரம்

கெனிங்காவ் 2 (Keningau 2), கெனிங்காவ் நகருக்கு வடக்கே அமைக்கப்பட்ட புதிய நகரம். இந்தப் புதிய நகரத்தில், புதிய கெனிங்காவ் மருத்துவமனை உள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகளும் உள்ளன.

மக்கள்தொகை

இனம் மற்றும் மதம்

கெனிங்காவ் மாவட்டத்தின் மக்கள் தொகை 2020-இல் 150,927 என மதிப்பிடப்பட்டு உள்ளது. மொத்தத்தில், 90% டூசுன் மற்றும் மூருட்; 8% சீனர்கள் என பிரிக்கப்பட்டு உள்ளனர்.[4]

மொழிகள்

சொந்த மொழிகளைத் தவிர, கெனிங்காவில் உள்ள பழங்குடிச் சபா இனத்தவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம், மலாய், மலாய் மொழி அடிப்படையிலான கிரியோல் மொழி பேசுகிறார்கள்.[4]

சீன இன மக்கள் தங்களுக்குள் சீன மொழி பேசுகிறார்கள். ஆனால் பழங்குடி இனத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது மலாய் மொழி பேசுகிறார்கள்.

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து குடியேறியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தாய்மொழிகளுடன்; மலாய் மொழியையும் பேசுகின்றனர்.

காட்சியகம்

மேற்கோள்

மேலும் காண்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கெனிங்காவ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கெனிங்காவு&oldid=3655055" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை