கேமரன் மலை

மலேசியாவின் பகாங் பகுதியில் உள்ள மலைவாழிடம்

(கேமரன் மலை என்று அழைக்கப்பட்ட கேமரன் மலை நகரம், அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என நிர்வாகத் தகுதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.)

கேமரன்மலை
Cameron Highlands District
மாவட்டம்
பகாங்
மேலிருந்து கீழ்: தேயிலைத் தோட்டம் • ரபிளீசியா தாவரம் • செம்புற்று பழம் • கறுப்புக் கழுத்து கதிர்ப் பறவை • டைம் டன்னல் காட்சியகம்
Map
கேமரன் மலை is located in மலேசியா
கேமரன் மலை
      கேமரன்மலை மாவட்டம்
ஆள்கூறுகள்: 4°30′N 101°30′E / 4.500°N 101.500°E / 4.500; 101.500
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம் கேமரன்மலை மாவட்டம்
நில ஆய்வு1885 - வில்லியம் கேமரன்
தொகுதிதானா ராத்தா
உள்ளூராட்சிகேமரன்மலை நகராண்மைக் கழகம்
பரப்பளவு[1]
 • மொத்தம்275.36 km2 (106.32 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்34,510
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு39xxx
மலேசியத் தொலைபேசி+6-05
மலேசியப் போக்குவரத்து எண்C
இணையதளம்www.mdcameron.gov.my

கேமரன் மலை (ஆங்கிலம்: Cameron Highlands District; மலாய்: Daerah Cameron Highlands; சீனம்: 金馬崙高原縣; ஜாவி: تانه تيڠڬي كاميرون ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். முன்பு கேமரன் மலை நகரம் என்று அழைக்கப்பட்டது. அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என நிர்வாகத் தகுதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கேமரன் மலை மாவட்டத்தின் தலைப் பட்டணம் தானா ராத்தா. பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டம் மலேசியாவிலேயே அதிகமான மலை ஊர்களைக் கொண்ட ஒரு மலைப்பகுதியாகும்.

கேமரன் மலை மாவட்டம் சிங்கப்பூர் அளவிற்கு 712 சதுர கி,மீ. பரப்பளவைக் கொண்டது. தித்திவாங்சா மலைத்தொடர் எனும் தீபகற்ப மலேசியாவின் மத்திய மலைத் தொடரில் இந்த மலைப் பிரதேசம் அமைந்துள்ளது.

பொது

வடக்கே கிளாந்தான் மாநிலமும், மேற்கே பேராக் மாநிலமும் அதன் எல்லைப் பகுதிகளாக உள்ளன. பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போவில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் இந்த மலைப்பகுதி உள்ளது.

பகாங் மாநிலத்தின் மிகச் சிறிய மாவட்டமாக, அதன் மேற்கு எல்லையில் கேமரன் மலை உள்ளது. இது ஒரு சுகமான சுற்றுலாத் தளம் ஆகும். வருடம் முழுமையும் குளிராகவே இருக்கும்.

இங்கே நிறைய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான காய்கறித் தோட்டங்களும் உள்ளன. தமிழர்களும் கணிசமான அளவிற்கு விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.

வரலாறு

கேமரன் மலையில் பிரிஞ்சாங் நகரம்
பச்சை வண்ணக் கேமரன்

கேமரன் மலைப்பகுதி 1200 - 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வில்லியம் கேமரன் (ஆங்கிலம்: Sir William Cameron) எனும் பிரித்தானிய நில ஆய்வாளரின் நினைவாக கேமரன் மலை அல்லது கேமரன் ஹைலண்ட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.[2]

1885 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் ஓய்வுத்தளமாக விளங்கிய இந்த கேமரன் மலை, 1925 ஆம் ஆண்டுக்குப் பிறகே விவசாயத் துறையில் பிரசித்திப் பெறத் தொடங்கியது.[3]

சர் வில்லியம் கேமரன்

நில ஆய்வுகளை மேற்கொண்ட சர் வில்லியம் கேமரன் தன் ஆய்வுக் குறிப்புகளைச் சமர்ப்பிக்கும் போது, சுழிப்பு முனைகளைக் கொண்ட மலைகள் இருப்பதாகவும், பல பகுதிகளில் மென்மையான சரிவுகள் இருப்பதாகவும் கூறினார்.

அந்தக் காலகட்டத்தில் பேராக் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநராக சர் இயூ லோ (ஆங்கில மொழி: Sir Hugh Low) என்பவர் இருந்தார். நில ஆய்வுகளைப் பற்றி கேள்விப்பட்ட அவர், அந்த மலைப் பகுதியில் நல்ல ஒரு நல ஆக்க நிலையத்தையும், ஓர் உடல் நலம் பேணுமிடத்தையும் உருவாக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தார்.

சர் ஜார்ஜ் மெக்ஸ்வல்

அது மட்டும் அல்லாமல் அந்த இடத்தில் விவசாயம் செய்யலாம் என்றும் கருத்து தெரிவித்தார். அடர்ந்த காடுகளாக இருந்த பகுதிகளில் ஒரு குறுகலான மண்பாதை போடப்பட்டது. அதன் பிறகு அங்கே குறிப்பிடத்தக்க வகையில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை.[4]

நாற்பது ஆண்டுகள் கழித்து, சர் ஜார்ஜ் மேக்ஸ்வல் (Sir George Maxwell) என்பவர் அந்த மலைப்பகுதிக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட இயற்கையின் அழகுப் படைப்புகளைப் பற்றி ஆங்கிலேய அரசு நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

பிரேசர் மலை

இந்தக் கட்டத்தில் பிரேசர் மலைக்குப் (Bukit Fraser) பதிலாக வேறு ஒரு மலைப் பிரதேசத்தை ஆங்கிலேயர்கள் தேடிக் கொண்டு இருந்தனர். பிரேசர் மலையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதே அதற்கு மூல காரணம் ஆகும். தவிர, ஓய்வு எடுக்க விரும்புவர்களின் மனங்களைப் பெரிதாக ஈர்க்கும் வகையில் பிரேசர் மலையில் சிறப்பாக எதுவும் அமையவில்லை.[5]

1925இல், சிங்கோனா, தேயிலை, காபி, பழங்கள், கீரை வகைகள் பயிர் செய்ய முடியுமா என்பதைக் கண்டறிய 81 ஹெக்டர் (200 ஏக்கர்) அளவில் ஒரு வேளாண்மை பரிசோதனைத் தளம் உருவாக்கப்பட்டது. அந்தப் பரிசோதனைத் தளம், பெரம்பான் மலையில் அமைக்கப்பட்டது. அதற்கு ஒரு கண்காளிப்பாளர்ரும் நியமிக்கப்பட்டார்.[6]

தெலும் ஆறு

இந்தக் கட்டத்தில், மலாய் மாநிலங்களின் கூட்டாட்சி (Federated Malay States), தெலும் ஆற்றின் (Telom River) மூலத்தைக் கண்டறிய கேப்டன் சி.சி.பெஸ்ட் (Captain C.C. Best) என்பவரை அனுப்பி வைத்தது. அந்த இடங்களை 1885-ஆம் ஆண்டிலேயே, சர் வில்லியம் கேமரன் பார்த்து ஆய்வுகள் செய்து வந்து இருப்பது கேப்டன் சி.சி.பெஸ்ட் மூலமாகத் தெரிய வந்தது.

வேளாண்மைக்கு மிகப் பொருத்தமான இடம் என்பதும் கண்டறியப்பட்டது. அத்துடன், அந்த இடத்தில் தேயிலை பயிர் செய்தால் சிறப்பான விளைச்சல் கிடைக்கும் என்பதும் தெளிவானது.[7]

டத்தோ ஜி. பழனிவேல்

பகாங் மாநிலத்தின் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு, டத்தோ ஜி. பழனிவேல் என அழைக்கப்படும் கோவிந்தசாமி பழனிவேல், டேவான் ராக்யாட் மக்களவை உறுப்பினராக இருந்தவர். இவர் மலேசியாவின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், மலேசிய இந்தியர் காங்கிரசு தலைவராகவும் சேவை செய்தவர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கேமரன்_மலை&oldid=3744615" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை