கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

இந்தியாவின் 15-வதும் மற்றும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம்.

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (IATA: CJB, ICAO: VOCB) தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் நகரின் பீளமேட்டில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம். இது முன்பு பீளமேடு விமான நிலையம் அல்லது கோயம்புத்தூர் குடிசார் விமான நிலையம் என அழைக்கப்பட்டது. இது விமான போக்குவரத்தில் இந்தியாவின் பதினைந்தாவது மிக பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். தொழில் வளர்ச்சியினாலும், உலக நாடுகள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் காரணமாகவும் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான நிலைய பட்டியலுல் முதல் தர பட்டியலில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டு விமான நிலையங்களைக் கொண்ட மாநகரங்கள் இரண்டு மட்டுமே. அவை சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகும். கோவையின் மற்றொரு விமான நிலையம் கோவை சூலூரில் அமைந்துள்ள சூலூர் விமான படை தளம் ஆகும்.

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
COIMBATORE INTERNATIONAL AIRPORT


கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

IATA: CJBICAO: VOCB
CJB is located in தமிழ் நாடு
CJB
CJB
CJB is located in இந்தியா
CJB
CJB
இந்திய வரைபடத்தில் கோவை வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகோயம்புத்தூர் மற்றும் அடுத்துள்ள மாவட்டங்கள்
அமைவிடம்பீளமேடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
உயரம் AMSL404 மீ / 1,324 அடி
ஆள்கூறுகள்11°01′48″N 077°02′36″E / 11.03000°N 77.04333°E / 11.03000; 77.04333
இணையத்தளம்www.airportsindia.org.in
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
அடிமீ
05/239,7602,990தார்ச்சாலை
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 - மார்ச் 2019)
பயணியர் வரத்து3,000,882 (24.8%)
வானூர்தி வரத்து25,253 (16.9%)
சரக்கு வரத்து12,865 (23%)
சான்று AAI[1][2][3]

சேவை வழங்கும் மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் சுற்றி உள்ள அண்டை மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலத்தவரும் பயன் பெற்று வருகின்றனர். இந்த விமான நிலையம் அருகில் உள்ள திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், பாலக்காடு, பைனாவு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயணங்களை தொடர்கின்றனர்.

வரலாறு

1940களில் கோயம்புத்தூர் குடிசார் விமான நிலையம் இந்தியன் ஏயர்லைன்சின் ஃபோக்கர் F27, டக்ளஸ் DC-3, ஆவ்ரோ748 வானூர்திகள் பயன்படுத்துமாறு தனது இயக்கத்தைத் துவங்கியது. துவக்கக் காலங்களில் சென்னைக்கும் மும்பைக்கும் மட்டுமே சேவைகள் இருந்தன. பின்னர் கொச்சி மற்றும் பெங்களுருக்கு சேவைகள் இயக்கப்பட்டன. 1980களில் சேவைகள் நிறுத்தப்பட்டு நவீன வானூர்திகள் இயங்க வசதியாக ஓடுபாதை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டது. தடைபட்ட காலத்தில் சேவைகள் வான்படையைச் சேர்ந்த சூலூர் வானூர்திநிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. 1987ஆம் ஆண்டு விரிவாக்கப்பணி முடிவடைந்த பிறகு நிலையம் மீள சேவைகளை இயக்கியது. 1995 முதல் பன்னாட்டுச் சேவைகள் சார்ஜாவிற்கு தொடங்கின. 2007ஆம் ஆண்டு பன்னாட்டுச் சேவைகள் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் நிலையங்களுக்கு விரிவானது.

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்

வானூர்திச் சேவைகள்சேரிடங்கள்
ஏர் அரேபியாசார்ஜா
ஏர் இந்தியாதில்லி, சென்னை, மும்பை
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-
இன்டிகோஐதராபாத்து, தில்லி, பூனா, மும்பை, சென்னை, பெங்களூர், கோவா-மோப்பா
சிறீலங்கன் விமானச் சேவைகொழும்பு
விஸ்தாராதில்லி, மும்பை
ஸ்கூட் ஏர்சிங்கப்பூர்
ஸ்பைஸ் ஜெட்பெங்களூர்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை