ஏர் இந்தியா

ஏர் இந்தியா இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். பயணிகள், பொதிகள் சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் மும்பாயின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. 1932 இல் டாட்டா எயர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இப்பொழுது உலகின் 146 விமான நிலையங்களுக்குப் பறப்புக்களை மேற்கொள்கிறது.

ஏர் இந்தியா
IATAICAOஅழைப்புக் குறியீடு
AIAICAIRINDIA
நிறுவல்ஜூலை 1932 டாட்டா விமான பணிகள் என
செயற்பாடு துவக்கம்15 அக்டோபர் 1932
மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
கவன செலுத்தல் மாநகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்Flying Returns
கிளை நிறுவனங்கள்
வானூர்தி எண்ணிக்கை89 (+30 orders)
சேரிடங்கள்55 (excl. subsidiaries)
தாய் நிறுவனம்ஏர் இந்தியா நிறுவனம்
தலைமையிடம்ஏர் இந்தியா கட்டிடம்,
நாரிமன் நிலமுனை, மும்பை, மகாராட்டிரம், இந்தியா
முக்கிய நபர்கள்ஜெ. ர. தா. டாட்டா, நிறுவனர்
ரோஹிட் நந்தன், CMD
வலைத்தளம்http://airindia.in

நலிவு நிலை

இந்திய அரசின் பொதுதுறை நிறுவனமான இது நலிவடைந்து வருவதால் மூடிவிட 2015ஆம் ஆண்டி அரசு முடிவெடுத்துள்ளது.[1]

வரலாறு

துவக்க ஆண்டுகள் (1932–1945)

டாடா ஏர் சர்வீசாக

ஏர் இந்தியா நிறுவனம் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் முதலில் துவக்கப்பட்டது, பின்னர் டாடா ஏர்லைன்ஸ் எனப் பெயர்மாற்றப்பட்டது.[2] இந்த நிறுவனத்தைஅத் துவக்கியவர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (சுருக்கமாக ஜேஆர்டி டாடா)[3] இவர்தான் முதல் இந்திய வணிக விமான ஓட்டி உரிமம் பெற்றவர் ஆவார். இரண்டு பழைய ஹாவில்லாண்ட் புஷ் மோத்ஸ் விமானங்களை வாங்கி தொழிலில் இறங்கினார். 1932 அக்டோபர் 15 அன்று டாடா ஏர்லைன்ஸ், கராச்சியில் இருந்து மும்பைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. முதலில் சரக்குப் போக்குவரத்துதான். ஒற்றை இன்ஜின் கொண்ட அந்த விமானம், 25 கிலோ கடிதங்களை மும்பைக்கு கொண்டு வந்தது. ஜேஆர்டி டாடாவே அந்த விமானத்தை ஓட்டி வந்தார். அதன்பின்னர் டாடா ஏர்லைன்ஸ் படிப்படியாக வளர்ந்தது. டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், குவாலியர், போபால் என பல நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தியது.  அதன் முதல் வருடத்தில், விமான சேவையில் 155,000 பயணிகள் மற்றும் 9.72 டன்கள் (10.71 டன்) அஞ்சல் பொதிகளை சுமந்து 160,000 மைல்கள் (260,000 கிமீ) பறந்து, 60,000 (அமெரிக்க $ 930) லாபம் ஈட்டியது.[சான்று தேவை][4]

டாடா ஏர்லைன்ஸாக

முதல் தடவையாக மைல் மெர்லின் என்ற ஆறு இருக்கைகள் கொண்ட விமானம் தனது முதல் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவையை மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்குத் துவக்கியது.[5] 1938 ஆம் ஆண்டில், டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயர் டாட்டா ஏர்லைன்ஸ் என மறுபெயரிடப்பட்டது. இலங்கையின்  கொழும்பு மற்றும் தில்லி ஆகியவற்றுக்கு இடையில் 1938 ஆம் ஆண்டுக்கான சேவை துவக்கப்பட்டது.[6] அடுத்து வந்த இரண்டாம் உலகப் போரின்போதும், டாடா ஏர்லைன்ஸ் பெரும் பங்காற்றியது. இடைவிடாமல் பறந்து, பர்மாவில் சிக்கியிருந்த அகதிகளை மீட்டு இந்தியா கொண்டு வந்தது.

விடுதலைக்குப் பின்பு (1946-2000)

ஏர் இந்தியா

ஏர் இந்தியா ஜெட் விமானத்தை அறிமுகப்படுத்திய முதல் ஆசிய நிறுவனம் ஆகும், அது போயிங் 707-420 கௌரி ஷங்கர் ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வழக்கமான வர்த்தக சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. மேலும் டாடா ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா என்ற பெயரில் 29 ஜூலை 1946 அன்று ஒரு பொது நிறுவனமாக மாறியது.[7] 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, விமான நிறுவனத்தின் 49% பங்குகளை இந்திய அரசாங்கம் 1948 இல் வாங்கியது.[8] 1948 சூன் அன்று லாகீட் கான்ஸ்டலேஷன் L-749A மலபார் இளவரசி என்ற பெயரைக்கொண்ட (பதிவு செய்யப்பட்ட VT-CQP) வானூர்தியைக் கொண்டு முதன் முதலில் லண்டன் ஹீத்ரோவுக்கு விமானப் போக்குவரத்தைத் தொடங்கியது.[6]

தேசியமயமாக்கல்

1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது, ஆனால் அதன் நிறுவனர் ஜே. ஆர். டி. டாடா [9][10] 1977 வரை நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்தார். இதன்பிறகு  இந்த நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா இன்டர்நேஷனல் லிமிடெட் என்று பெயர மாற்றப்பட்டது. மேலும் உள்நாட்டு பயணச் சேவைகளை மறுசீரமைப்பதின் ஒரு பகுதியாக உள்நாட்டுப் போக்குவரத்து பிரிவு இந்திய ஏர்லைன்ஸ் என்று இதண்டு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன.[11] 1948 முதல் 1950 வரை, கென்யாவின் நைரோபிக்கும், முதன்மையான ஐரோப்பிய பகுதிகளான ரோம், பாரிஸ், தியூசல்டோர்ஃபு போன்ற இடங்களுக்கு விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.[12] மேலும் பேங்காக், ஹாங்காங், டோக்கியோ, சிங்கப்பூர் ஆகியவற்றிற்கு விமான சேவை வழங்கப்பட்டது.[12]

வீழ்ச்சி

1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ளது.[13]

ஏர் இந்தியாவை வாங்கிய டாடா நிறுவனம்

டாடாவின் விமான நிறுவனத்தை இந்திய அரசு கையகப்படுத்தி தேசிய விமான சேவையாக ஏர் இந்தியாவை நடத்தி வந்தது. 8 அக்டோபர், 2021 அன்று ஏர் இந்தியாவை வாங்க 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கான டாடா குழுமத்தின் ஏல விருப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.[14][15] முன்னதாக இந்திய அரசு குறைந்த பட்ச ஏலத்தொகை ரூபாய் 12,906 கோடியாக அறிவித்திருந்தது. 09 அக்டோபர் 2021 அன்று ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடாவிற்கு விற்கப்பட்டதாக அதிகாரப் பூர்வ தகவல்கள் கூறுகிறது.[16][17]

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏர்_இந்தியா&oldid=3928303" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை