கோ சொக் டொங்

கோ சொக் டொங்  (Goh Chok Tong 20 மே 1941)  என்பவர் சிங்கப்பூரின் அரசியலாளர் ஆவார். இவர் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர். லீ குவான் யூ விற்குப் பின்  சிங்கப்பூரின் இரண்டாவது  பிரதமராக 1990 ஆம் ஆண்டில் நவம்பர் 28 இல் பதவியேற்றார். 2004 ஆகத்து வரை அப்பதவியில் இருந்தார்.  அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு வரை மூத்த அமைச்சர் என்ற பதவியில்  இருந்தார். சிங்கப்பூர் நிதியத் துறை தலைவராகவும் ஆனார். எமெரிடசு மூத்த அமைச்சர் என்ற மதிப்புமிகு பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

கோ சொக் டொங்

இளமைக் காலம்

கோ சொக் டொங்கின் தந்தை சீனாவைச் சேர்ந்தவராக இருப்பினும் கோ சொக் டொங் சிங்கப்பூரில் பிறந்தார். 1955 முதல் 1960 வரை ராஃபிள்ஸ் நிறுவனத்தில் படித்தார். இளம் அகவையில் நீச்சலில் வல்லவராக இருந்தார்.[1][2]

அரசியல் பணிகள்

1976 இல் சிங்கப்பூர்  பொதுத் தேர்தலில் தமது 35 ஆவது அகவையில் வெற்றி பெற்று நாடாளுமன்ற  உறுப்பினர் ஆனார். அப்போது நிதித் துறை அமைச்சர் ஆனார். பின்னர் தொழில், வர்த்தகத்  துறை;அதன் பின்னர் நலத்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு அமைச்சர் ஆனார்.[3]1985 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஆனார்.

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோ_சொக்_டொங்&oldid=3551929" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை