சங்கம், பௌத்தம்

சங்கம் (Sangha),[1]) என்பது பாளி மற்றும் சமசுகிருதச் சொல் ஆகும். பௌத்த சமயத்தில் சங்கம் என்பதற்கு பிக்குகள் பௌத்த மெய்யியலை மறு ஆய்வு செய்தவதற்கும் மற்றும் வாழ்வியல் முறைகளை ஒழுங்குபடுத்த ஒன்று கூடும் இடமாகும்.[2][3]

திபெத்திய பௌத்த மடாலயத்தின் வெளியில் கூடியிருக்கும் பிக்குகள்

ஞானத்தின் நான்கு நிலைகளில் ஒன்றையோ அல்லது அனைத்தையோ அடைய விரும்பும் பிக்குகள் அல்லது பிக்குணிகள் அல்லாத பௌத்த சமயத்தை பின்பற்றும் மக்களை உபாசகர்கள் என்பர். [4][5]தேரவாத பௌத்தம், உபாசகர்களை, சங்கத்தின் அங்கமாக கருதுவதில்லை.[6][7][8]

சங்கத்தின் பணிகள்

பௌத்த சமயத்தை பின்பற்றும் அனைவரையும் சங்கத்தின் உறுப்பினர்கள் என மகாயான பௌத்தம் கூறுகிறது. ஆனால் தேரவாத பௌத்தமோ, பௌத்த சமயத்தை பின்பற்றும், பிக்குகள் அல்லது பிக்குணிகள் அல்லாத பௌத்த சமூகத்தினரை பரிசத் என்று குறிப்பிடுகிறது.[9] பாளி மொழியானது, சங்கம் என்பதற்கு மேலோர் கூடுமிடம் என்று குறிப்பிடுகிறது. [8][10][11]

புத்தம் மற்றும் தர்மத்திற்கு அடுத்ததான சங்கம், பௌத்த சமயத்தின் சாத்திரமான திரிபிடகத்தின் மூன்றாவதாகும். [12].

பௌத்த பிக்குகளின் பிச்சைப் பாத்திரங்களில் தானமிடும் மக்கள், லாவோஸ்
கௌதம புத்தர் சீடர்களுடன் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் காட்சி

சங்கம் என்ற அமைப்பு முதன் முதலில் கௌதம புத்தர் கிமு 5ம் நூற்றாண்டில் நிறுவினார். சங்கத்தில் பயிலும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள், உலக ஈடுபாடுகளிலிருந்து விலகி, எப்பொறுப்பும், கட்டுப்பாடுகள் இன்றி, முழுநேரம் உயர் ஒழுக்கத்துடன் புத்தத்தன்மை அடைவதற்கு பயிற்சி புரியும் இடமாக இருந்தது. [13] சாதாரன உலகியல் வாழ்வு வாழும் பௌத்த சமூகத்தவர்களுக்கு, சங்கம் எனும் அமைப்பு புத்தரின் அறவுரைகளை எடுத்துக் கூறவும், ஆன்மீக உதவிக்கும் பெரும் பங்காற்றுகிறது.

வரலாற்று காலத்தில் பௌத்த சமயத்தை மக்களிடையே பரப்பவும், வழிபாட்டுத் தலமாகவும், கல்விக் கூடமாகவும் சங்கம் செயல்பட்டது. மேலும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பௌத்த சாத்திரங்கள் பயிலவும், ஜெபம், தவம், தியானம் செய்யும் இடமாகவும் சங்கம் அமைந்தது.[14]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சங்கம்,_பௌத்தம்&oldid=3793039" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை