சிறுநீர்ப்பை புற்றுநோய்

சிறுநீர்ப்பை புற்றுநோய் (Bladder cancer) என்பது சிறுநீர்ப்பை இழையங்களைப் பாதிக்கக்கூடிய ஒருவகைப் புற்று நோய் ஆகும்.[1] இந்த நோயானதுஉயிரணுக்கள் அபரிமிதமான வளர்ச்சியடைந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவப்படும் திறன் பெற்றது ஆகும்.[6][7] சிறுநீரில் குருதி வடிதல் ,வலி ஏற்படுதல் மற்றும் முதுகு வலி ஏற்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும்.[1]

சிறுநீர்ப்பைப் புற்று
Bladder cancer
சிறுநீர்ப்பையின் பெயர்வுநிலை உயிர்க்கலப் புற்று.
சிறப்புபுற்றுநோயியல்
அறிகுறிகள்சிறுநீரில் குருதி, சிறுநீர்க் கழிப்பில் வலி[1]
வழமையான தொடக்கம்65 முதல் 85 அகவை வரை[2]
வகைகள்பெயர்வுநிலை உயிர்க்கலப் புற்று, தட்டைக்கலப் புற்று, அண்ணீரகப் புற்று
சூழிடர் காரணிகள்புகைத்தல், குடும்ப வரலாறு, கதிர்வீச்சு மருத்துவம்மடிக்கடி சிறுநீர்ப்பைத் தொற்றுகள் ஏற்படல், சில வேதிமங்கள்[1]
நோயறிதல்இழைய ஆய்வுடனான உயிர்க்கல நோக்கியியல்[3]
சிகிச்சைஅறுவை, கதிர்வீச்சு மருத்துவம், வேதியியல் மருத்துவம், இயல் நோயெதிர்ப்பு மருத்துவம்[1]
முன்கணிப்புஐந்தாண்டு உயிர்தரிப்பு வீதங்கள் ~77% (அமெரிக்கா)[2]
நிகழும் வீதம்3.4 மில்லியன் நடப்பு நேர்வுகள் (2015)[4]
இறப்புகள்ஆண்டுக்கு 188,000 பேர்[5]

புகையிலை பிடித்தல், மரபு வழி நோய்கள், முந்தைய கதிரியக்கச் சிகிச்சைகள், அடிக்கடி சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் சில வேதியல் பொருட்களால் இவ்வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.[1] பைநோக்கியல் சிகிச்சை மூலம் இதனைக் கண்டறியலாம்.[3]

இந்தப் புற்றுநோயின் நிலைகளைப் பொறுத்து அதற்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.[1] அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை அல்லது நோயெதிர்ப்புச் சிகிச்சை போன்ற பல வழிகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறுவைச் சிகிச்சைகளின் போது பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சிறுநீர்ப்பையினை நீக்க வேண்டியிருக்கும்.[1] இந்த நோயினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 77 விழுக்காடு மக்கள் ஐந்து வருட உயிர்வாழும் வீதத்தில் உள்ளனர்.[2]

2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி சிறுநீர்ப்பை புற்றுநோயினால் 3.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 430,000 மக்கள் ஆண்டுதோறும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது[8]. 2015 இல் 188,000 பேர் இதனால் இறந்தனர்[5]. பெரும்பானமையாக 65 மற்றும் 85 வயதுடைய மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.[2] பெண்களைக் காட்டிலும் ஆண்களே இந்த நோயினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.[2] 2018 ஆம் ஆண்டில் 81.000 மக்கள் இந்தப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவார்கள் எனவும் 17,000 மக்கள் இறக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.[2]

அறிகுறிகள்

சிறுநீரில் குருதி வடிதலின் மூலம் இதனைக் கண்டறியலாம். மேலும் நுண்நோக்கி மூலம் இதனைக் கண்டறியலாம். இருந்த போதிலும் சிறுநீரில் குருதி வடிதலே பெரும்பான்மையானதாக காணப்படுகிறது. ஆனால் இது வலியற்றதாகும். சிறுநீரில் குருதி வடிதல் குறைவான காலங்கள் கொண்டதாகவே இருக்கும். மேலும் சிறுநீரகச் சோதனையின் மூலம் சிறுநீரில் குருதி வராதபோதிலும் இதனை உறுதிபடுத்தலாம். 80முதல் 90 விழுக்காடு பேர் குருதி வடிதலின் மூலமே இந்த நோயானது கண்டறியப்படுகிறது.[9] சிறுநீரகத் தொற்று , சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கல் போன்ற பல காரணங்களினாலும் குருதி வரலாம்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை