சிலுவையேற்றம்

சிலுவையேற்றம் அல்லது குறுக்கையேற்றம் (Crucifixion) பண்டைக் கிரேக்கம், பண்டைய உரோமை மற்றும் பண்டைய அண்மை கிழக்குப் பகுதிகளில் கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மரணதண்டனை முறைகளில் ஒன்றாகும்.[1][2]இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே சிலுவை ஏற்றம் தண்டனை முறை நடைமுறையில் இருந்தது. கொடிய குற்றம் இழைத்தோரை மூவகைகளில் மரண தண்டனை வழங்குவர். எரித்து கொல்வது, தலையை வெட்டிக் கொல்வது மற்றும் சிலுவை ஏற்றம் ஆகும். இதில் சிலுவை ஏற்றம் என்பது மிகக்கொடிய தண்டனை முறை மட்டுமின்றி, இத்தண்டனை நிறைவேற்றுவதை காணும் மக்கள் மனதில் பயத்தை விளைவிக்கும் செயலாகும். பல தருணங்களில் சிலுவையில் அறையப்பட்டவர்களில் சிலர் பல நாட்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளனர். இது பண்டைய இந்தியாவின் கழுவேற்றம் தண்டனைக்கு நிகரானதாகும். வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜப்பானின் துவக்க மெய்சி காலத்தில் (1865–1868), 25 வயது பணியாள் கொள்ளை அடித்ததை தடுத்த, தன் முதலாளியின் மகனைக் கொன்ற குற்றத்திற்காக சிலுவையேற்றம் மூலம் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆகும். [3][4]இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீனாவில் சிலுவைவேற்றம் முறை இறுதியாக 1906ஆம் ஆண்டில் நடைபெற்றது.

இரு கொடியவர்கள் நடுவில் இயேசுவின் சிலுவையேற்றம், 15ஆம் நூற்றாண்டின் சித்திரம்
ஜப்பானின் துவக்க மெய்சி காலத்தில் (1865–1868), 25 வயது பணியாள் கொள்ளை அடித்ததை தடுத்த, தன் முதலாளியின் மகனைக் கொன்ற குற்றத்திற்காக சிலுவையேற்றம் மூலம் தண்டிக்கப்படல்

இவ்வகை மரண தண்டனை பெற்றவர்களை பெரிய மரச்சிலுவையில் ஏற்றி, கைகள் மற்றும் கால்களில் ஆணிகளை அடித்து சாகும் வரை தொங்க விடுவர். இந்த சிலுவையேற்றத் தண்டனை முறை பாரசீகர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்களால்[1] நடைமுறைப்படுத்தினர்.

சீனாவில் மரணதண்டனை கைதியை மண்டியிட வைத்து கால்களை கட்டையில் சொருகி, கைகளை மரக்கட்டையில் இணைத்து இருக்கும் காட்சி, ஆண்டு 1906

சிலுவையேற்றம் எனும் மரணதண்டனை முறை இருபதாம் நூற்றாண்டு வரை சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது.[5]நாசரேத்தின் இயேசுவின் சிலுவையில் அறையப்படுவது கிறிஸ்தவத்தின் மையக் கருவாகும்.[1]கிறிஸ்தவ தேவாலயங்களில் காணப்படும் சிலுவை முக்கிய சமய அடையாளமாகும்.

கிமு 238இல் கொடியவர்களின் தலைவர்களை கிரேக்கர்கள் சிலுவையேற்றம் செய்யும் வரைபடம்

சொற்பிறப்பியல்

கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டில் சிலுவை என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் மொழிச் சொல்லான கிராஸ்[6] என்பதிலிருந்து பெறப்பட்டது. சிலுவை என்பது கொடிய குற்றம் புரிந்தவரை மரணதண்டனை விதிப்பதற்கு பயன்படுத்தப்படும் T வடிவ மரக்கட்டை அமைப்பை குறிக்கிறது. இந்தச் சொல் பின்னர் குறிப்பாக ஒரு சிலுவையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[9] சிலுவைக்கு தொடர்புடைய இலத்தீன் மொழிச் சொல் க்ரூசிஃபிக்ஸஸ் அல்லது க்ரூசி ஃபிக்சஸ் ஆகும். சிலுவையேற்றம் அல்லது க்ரூசி ஃபிகரே என்பதன் இறந்தகால வினையெச்சம் "சிலுவையில் அறைவது" அல்லது "சிலுவையில் கட்டுவது" என்று பொருளாகும்.[7][8][9][10]

கிறித்துவ பண்பாட்டில்

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி

கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து சிலுவையேற்றத்தின் போது அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி விழாவைக் கொண்டாடுகின்றனர். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமையில் நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.[11]

இதைனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிலுவையேற்றம்&oldid=3705876" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை