சூசுத்தர்

ஈரானிய நகரம்

சூசட்டர் ( Shushtar, பாரசீக மொழி: شوشتر‎; பிற பெயர்கள் : Shūshtar, Shūstar, Shooshtar) என்ற இந்த நகரமானது, சூசட்டர் கவுன்டியின் தலைநகரம் ஆகும். இந்த கவுன்டியானது, ஈரான் நாட்டிலுள்ள கூசித்தான் மாகாணத்தின் கவுன்டிகளில் ஒன்றாகும்.[2][3] சூசட்டர் பழங்கால கோட்டை நகரம் ஆகும்.இதன் மாகாணத்தின் நடுவில் இருக்கும் நகரமான அகுவாசிலிருந்து சுமார் 92 கிலோமீட்டர்கள் (57 mi) தொலைவில் அமைந்துள்ளது. அதன் கடந்தகாலத்தில் விவசாய உற்பத்திக்கு, ஈரானின் முதல் அணையான பாலமான பேண்ட்-இ கைசரை நீர்ப்பாசன முறையிலிருந்து பெற்றது.[4] சூசட்டரின் மேயர் அகமத் அசிஃபி ஆவார். சூசடாரி பேச்சுவழக்கு மொழியானது, சூரிட்டரில் பேசப்படுகிறது. இது பாரசீக மொழியின் பேச்சுவழக்கு ஆகும்.

சூசட்டர்
شوشتر
நகரம்
சூசட்டர் is located in ஈரான்
சூசட்டர்
சூசட்டர்
ஆள்கூறுகள்: 32°02′44″N 48°51′24″E / 32.04556°N 48.85667°E / 32.04556; 48.85667
நாடு Iran
மாகாணம்Khuzestan
மண்டலம்Shushtar
பாக்ச்சுCentral
மக்கள்தொகை (2016 Census)
 • நகர்ப்புறம்101,878 [1]
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)

வரலாறு

ShushtarMAP

எலாமைட் காலத்தில் சூசட்டர் என்ற இந்த நகரம் அடாமுன் ( Adamdun) என அறியப்பட்டது. அக்கிமீனியான் காலத்தில் அதன் பெயர் சுர்குடீர் (Šurkutir) என இருந்தது. தற்போதுள்ள பெயர் சூசட்டர், மற்றொரு பண்டைய நகரமான சூசா உடன் தொர்பு கொண்டிருந்தது. அந்நகரத்தோடு ஒப்பிடும் போது, அதை விட,'சிறந்தது' என பொருளாகிறது. எலாமைட் காலங்களில் சுஷ்டர் ஆதாம்தூன் என்று அழைக்கப்பட்டார். அச்சேமேனிய காலங்களில் அதன் பெயர் சுர்குதிர். நவீன பெயர், சுஷ்டார், மற்றொரு பண்டைய நகரமான சூசா (அல்லது ஷுஷ், பாரசீக உச்சரிப்பில்) உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் பொருள் "ஷுஷை விட பெரிய (அல்லது சிறந்தது)." சாசானிய காலத்தில், இது கருண் ஆற்றில் ஒரு தீவு நகரமாக இருந்தது. கோடை தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது. இந்த நகரத்தைச் சுற்றி ஒரு அகழி அமைக்க இந்த நதி மாற்றியமைக்கப்பட்டது. அதே நேரத்தில்,  சூசட்டர் நகரில் பாலங்களும் முக்கிய வாயில்களும், கிழக்கு, மேற்கு, தெற்கில் கட்டப்பட்டன. அருகிலுள்ள பல ஆறுகள், விவசாயத்தின் விரிவாக்கத்திற்கு உகந்தவை; கரும்பு சாகுபடி, முக்கிய பயிர் ஆகும். கானட்சுகள் (Ghanats) என்று அழைக்கப்படும் நிலத்தடி நீரோடைகள், இந்த ஆற்று நீரை வீடுகள், கட்டிடங்களின் தனியார் நீர்த்தேக்கங்களுடன் இணைத்தன. இந்த நீர்பயன்பாடும், நீர்ப்பாசன வசதியும், சேமித்து வைப்பதற்கும், போர் காலங்களில், கோட்டையின் முதன்மை வாயில்கள் மூடப்பட்ட போதும், தடையில்லா து நீர் வழங்கல் வசதிகளைத் தந்தன. இந்த கானாட்களின் தடயங்களை,  இக்காலத்திலும், சில வீடுகளின் இரகசிய இடங்களில் காணப்படுகின்றன. இந்த கோட்டையின் பண்டையச் சுவர்கள், சஃபாவிட் வம்சத்தின் இறுதியில் அழிக்கப்பட்டன.

பேண்ட்-இ கைசர்

பேண்ட்-இ கைசர் ("சீசரின் அணை") ஒரு ரோமானிய கட்டப்பட்ட பரம பாலம் என்று சிலர் நம்புகிறார்கள் நாட்டில் முதன்முதலில் அதை ஒரு அணையுடன் இணைத்தனர். சாசானிய ஷா ஷாப்பூர் ரோமானிய பேரரசர் வலேரியனை தோற்கடித்தபோது, ​​சிறைபிடிக்கப்பட்ட ரோமானிய வீரர்களுக்கு 500 மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய பாலம் மற்றும் அணை கட்டும்படி கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.பாரசீக பிரதேசத்தில் ஆழமாக அமைந்திருக்கும், வழக்கமான ரோமானிய கட்டிட நுட்பங்களை வெளிப்படுத்தும் அமைப்பாக கிழக்கு ரோமானிய திகழ்கிறது.

மக்களும் கலாச்சாரமும்

சுஷ்டார் கைவினைப்பொருட்கள்

சூசட்டரின் மக்கள், சூசட்டாரிசும், அரேபியன் என்று அழைக்கப்படும் பண்டைய காலங்களிலான, தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தைப் பேணுகின்றனர். மேலும், ஒரு பாரசீக பேச்சுவழக்கு அவர்களின் குழுவிடை பேசப்படுகிறது.

காலநிலை

சூசட்டர் நகரமானது, கோப்பன் காலநிலை வகைப்பாடு (BSh) முறைப்படி, வெப்பமான அரை வறண்ட காலநிலையைப் பெற்றுள்ளது. அதனால், மிகவும் வெப்பமான கோடைக் காலத்தினையும், லேசான குளிர்காலங்களையும் கொண்டுள்ளது. தெற்கு ஈரானின் பெரும்பாலான பகுதிகளை விட, இந்நகரில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. ஆனால் இது நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் மட்டுமே பொழிகிறது. இருப்பினும் சில நேரங்களில், வருடத்திற்கு, 250 மில்லிமீட்டர்கள் (9.8 அங்) அல்லது 600 மில்லிமீட்டர்கள் (24 அங்) மாதத்திற்குப் பொழிகிறது.[5]

மேற் கோள்கள்


ஆதாரங்கள்

  • Hartung, Fritz; Kuros, Gh. R. (1987), "Historische Talsperren im Iran", in Garbrecht, Günther (ed.), Historische Talsperren, vol. 1, Stuttgart: Verlag Konrad Wittwer, pp. 221–274, ISBN 3-87919-145-X
  • Hodge, A. Trevor (1992), Roman Aqueducts & Water Supply, London: Duckworth, p. 85, ISBN 0-7156-2194-7
  • Hodge, A. Trevor (2000), "Reservoirs and Dams", in Wikander, Örjan (ed.), Handbook of Ancient Water Technology, Technology and Change in History, vol. 2, Leiden: Brill, pp. 331–339 (337f.), ISBN 90-04-11123-9சிட்டி ஆஃப்
  • சூசட்டர் (வீடியோ), பிரஸ் டிவி, 13 ஜூன் 2010. (9 நிமிடங்கள்)
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூசுத்தர்&oldid=3555267" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை