சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017

உருசியா நாட்டின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகர சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் 3 ஏப்ரல் 2017 அன்று குண்டு வெடித்தது. குண்டு வெடிக்கும் போது விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டியானது சென்னாயா ப்லோஷ்ஜாட் (Sennaya Ploshchad) மற்றும் டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட் (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. இவ்விபத்தில் உடனடியாக ஒன்பது பேர் மரணமடைந்தனர் பின்னர் மருத்துவமனையில் ஐவர் மரணமடைந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்[6][7][8][3][9]. வெடிபொருளானது கைப்பெட்டியினுள் (briefcase) வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது வெடிபொருளானது மற்றுமொரு விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது[10][11][12] T[9][10]. இக்குண்டுவெடிப்பின் சூத்ரதாரியாக கிர்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ரஷ்யக் குடியுரிமை பெற்ற அக்பர்ஷான் ஜாலியோய் (Akbarzhan Jaliov) சந்தேகிக்கப்படுகிறார்[13].

சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017
இடம்சென்னாயா ப்லோஷ்ஜாட் (Sennaya Ploshchad) மற்றும் டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட் (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே, உருசியா.
ஆள்கூறுகள்59°54′59″N 30°19′07″E / 59.91639°N 30.31861°E / 59.91639; 30.31861`
நாள்ஏப்ரல் 3, 2017 (2017-04-03)
14:40[1] (கிழக்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம் (UTC +3))
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பொதுமக்கள்
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்[2]
ஆயுதம்தற்கொலை வெடிகுண்டு
இறப்பு(கள்)14[3] (+1 தற்கொலையாளி)
காயமடைந்தோர்51[4][5]

தாக்குதல்

2017, ஏப்ரல் 3 அன்று கிட்டத்தட்ட ஒரு கிலோகிராம் எடையுடைய வெடிபொருளானது, விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டி சென்னாயா ப்லோஷ்ஜாட் (Sennaya Ploshchad) மற்றும் டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட் (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும்போது வெடித்தது[10][14][15]. அவசரகால நிகழ்வுகளின் அமைச்சு, குண்டானது மூன்றாவது பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளது. நேரில் பார்த்தவர்கள் குண்டானது வாசலின் அருகே வெடித்தது எனவும் வெடித்தவுடன் நடைமேடையெங்கும் புகையால் நிரம்பியது எனவும் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் பாதிக்கப்பட்டவர்களையும், உலோகக் கதவு வளைந்திருந்ததையும் காட்டியது. இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் அனைத்து விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டி நிலையங்களும் மூடப்பட்டன[10][12]. பின்மாலைப் பொழுதில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது தடத் தொடர்வண்டிகள் வழக்கம்போல் இயங்கின.[9].

பாதிக்கப்பட்டோர்

பாதிக்கப்பட்டோர் நாடுவாரியாக
நாடுமரணமடைந்தோர்
 Russia3
 Kazakhstan[16]1
 Azerbaijan[17]1
அடையாளம் தெரியாதோர்9
மொத்தம்14

எதிர்வினைகள்

பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின்

தாக்குதல் நடந்தபோது அந்கரத்திலிருந்த உருசியப் பிரதமர் விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின் இத்தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். மேலும் தாக்குதல் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பாதிக்கப்படவர்களுக்காக மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தாக்குதலாளி

தாக்குதலாளி எனச் சந்தேகிக்கப்படும் நபர் கிர்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ரஷ்யக் குடியுரிமை பெற்ற 22 வயதுடைய அக்பர்ஷான் ஜாலியோய் (Akbarzhan Jaliov) ஆவார்[18][19]. 'அக்பர்ஷான் ஜாலியோய் 1995 ஆம் ஆண்டு கிர்கிசுத்தான் நாட்டின் ஓஷ் (Osh) நகரில் பிறந்தவர்[18]. ரஷ்ய நாட்டு எம்.கே (MK) எனும் ஊடகம் இவர் 2015 ஆம் ஆண்டில் சமையல் நிபுணராகப் பணியாற்றினார் எனவும் அதன் பின்னர் தலைமறைவானார் எனத் தெரிவித்தது.

சர்வதேசக் கண்டனங்கள்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்நிகழ்விற்கு தங்களது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். சைனா,[20] செக் குடியரசுc,[21] டென்மார்க்,[22] பிரன்ஸ்,[23] ஜியார்ஜியா,[24] இந்தியா,[20] இந்தோனேசியா,[25] ஈரான்,[9] இஸ்ரேல்,[26] மலேசியா,[20] பாகிஸ்தான்,[20] போலந்து,[27][28] போர்த்துக்கல்,[29] உக்ரைன்,[30] ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா[31] மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை தங்களது வருத்தத்தைப் பதிவு செய்த நாடுகளுள் சில.[23]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை