ஜேம்ஸ் கூட்டன்

ஜேம்ஸ் கூட்டன்  (James Hutton  3 சூன் 1726 - 26 மார்ச்சு 1797) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர், மருத்துவர், வேதியியலாளர், மற்றும் இயற்கையாளர் ஆவார்.[1] நவீன புவியியலின் தந்தை என மதிக்கப்படுகிறார்.[2][3]

ஜேம்ஸ் கூட்டன்

இளமையும் கல்வியும்

எடின்பர்க்கில் பிறந்தார். எடின்பர்க் பள்ளியிலும்  பின்னர் எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும்  படித்தார். 17 ஆம் அகவையில் ஒரு வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றார். ஆனாலும் வேதியல் ஆய்வுகளில் ஆர்வம் காட்டினார்  எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பாடம் கேட்டார். பின்னர் பாரிசு பல்கலைக் கழகத்தில் படித்து மருத்துவர் ஆனார்.[4]:2

ஆய்வுப் பணிகள்

புவியின் சீர்மைத் தன்மை (யூனீபாரமிடேரியனிஸம்) என்னும் அடிப்படைக் கோட்பாட்டை முதன் முதலாக வகுத்தவர். பூமியின் மேல் தட்டின் இயல்புகளை ஆராய்ந்தவர். புவி இப்போது இருப்பது போல எப்பொழுதும் இருந்து வருகிறது என்ற கருத்தைச் சொன்னார்.

பூமியின் கோட்பாடு என்ற பெயரில் ஒரு நூலை  எழுதினார். அந்த நூல் இரண்டு தொகுதிகளில் வெளிவந்தது. மூன்றாம் தொகுதியை எழுதும்போது ஜேம்ஸ் கூட்டன் இறந்துவிட்டார். அவரது எழுத்து நடை எளிதில் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது என அறிஞர்கள் கருதுகிறார்கள்.[5] எனவே   இவருடைய நெருங்கிய நண்பர் ஜேம்ஸ் பிளேபேர் என்பவர் ஜேம்ஸ் கூட்டனின் நூலின் கருத்துக்களை தெளிவாக விளக்கி ஒரு நூலில் எழுதினார்.

மேலும் சார்லசு லையில் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மற்றொரு புவியியலாளர் ஜேம்ஸ் கியூட்டனின் புரட்சிக் கருத்துக்களை விளக்கப்படுத்திப் பிரபலமாக்கினார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜேம்ஸ்_கூட்டன்&oldid=3858696" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை