டசுக்கனி

நடு இத்தாலிய பிராந்தியம்

டசுக்கனி (Tuscany, இத்தாலியம்: Toscana) மத்திய இத்தாலியிலுள்ள முதல்நிலை நிர்வாக அலகான இத்தாலியின் மண்டலங்களில் ஒன்றாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 23,000 ச.கிமீ (8,900 சதுர மைல்கள்); மக்கள்தொகை கிட்டத்தட்ட 3.8 மில்லியன் (2013). இதன் தலைநகரம் புளோரன்சு (பிரென்செ).

டசுக்கனி
டஸ்கானா
மண்டலம்
டசுக்கனி-இன் கொடி
கொடி
டசுக்கனி-இன் சின்னம்
சின்னம்
நாடுஇத்தாலி
தலைநகர்புளோரன்சு
அரசு
 • தலைவர்Enrico Rossi (MDP)
since 1 June 2015 (2nd term)
பரப்பளவு
 • மொத்தம்22,990.18 km2 (8,876.56 sq mi)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்37,49,430
இனங்கள்டசுக்கனியர் Tuscan
இத்தாலியம்: டஸ்கானோ
Citizenship[1]
 • Italian90%
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
மொத்த உள்நாட்டு உற்பத்தி€ 106.1[2] billion (2008)
GDP per capita€ 28,500[3] (2008)
NUTS RegionITE
இணையதளம்www.regione.toscana.it

டசுக்கனி இயற்கை காட்சிகள், இத்தாலிய மரபுகள், வரலாறு, கலைப் பாரம்பரியம், மீயுயர் பண்பாட்டில் தாக்கம் ஆகியவற்றிற்காக பெரிதும் அறியப்படுகின்றது. இது இத்தாலிய மறுமலர்ச்சியின் பிறப்பிடமாக கருதப்படுகின்றது.[4] கலை, அறிவியல் வரலாற்றில் முதன்மையானவர்களின் தாயகமாக விளங்கியது. இப்பகுதியில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களான உஃபீசி, பிட்டி அரண்மனை போன்றவை உள்ளன. டசுக்கனி வைன் தயாரிப்புகளும் (சியான்ந்தி, வினோ நோபைல் டி மொன்டெபுல்சானோ, மொரில்லினோ டி இசுக்கன்சானோ, புருனெல்லோ டி மொந்தல்சீனோ) புகழ்பெற்றவை. டசுக்கனியின் ஆழ்ந்த மொழி,பண்பாட்டு அடையாளத்தைக் கொண்டு சிலநேரங்களில் இது "நாட்டிற்குள் மற்றொரு நாடு" எனப்படுகின்றது.

வழமையாக இத்தாலியில் மிகவும் பரவலாக அறியப்படும் சுற்றுலாவிடமாகவும் விளங்குகின்றது. 2014இல் மிகுந்த சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்களாவன: புளோரன்சு, பீசா, மொந்தகத்தீனி டெர்மே, கஸ்டிக்லியோன் டெல்லா பெஸ்சையா, குரேஸ்ஸேட்டோ.[5] கஸ்டிக்லியோன் டெல்லா பெஸ்சையா சிற்றூர் மிகவும் விரும்பப்பட்ட கடற்கரை சுற்றுலாவிடமாகும்;[5] டசுக்கனியின் 40% சுற்றுலாப் பயணிகளின் வரவு கடற்கரை மகிழ்விடங்களுக்கே இருந்தது. இவற்றைத் தவிர சியன்னா, லூக்கா, சியான்ந்தி பகுதி, வெர்சிலியா, வால் டி'ஓர்சியா ஆகியவையும், குறிப்பாக பரவலர் விளையாட்டுகளுக்காக, பன்னாட்டுப் புகழ் பெற்றவை.

டசுக்கனியின் ஏழு இடங்கள் உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன: புளோரன்சின் வரலாற்று நகர மையம் (1982); பீசாவும் சாயும் கோபுரமுள்ள பேராலய சதுக்கம் (1987); சான் கிமிக்னானோவின் வரலாற்று நகர்மையம் (1990); சியன்னாவின் வரலாற்று மையம் (1995); பியென்சாவின் வரலாற்று மையம் (1996); வால் டி'ஓர்சியா (2004), மெடிசி வில்லாக்களும் பூங்காக்களும் (2013). டசுக்கனியில் 120க்கும் கூடுதலான பாதுகாக்கப்பட்ட இயற்கையகங்கள் உள்ளன. டசுக்கனியும் அதன் தலைநகர் புளோரன்சும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பெறுகிறது. 2012இல், 1.834 மில்லியன் பயணிகள் வந்த புளோரன்சு நகரம் உலகின் மிகவும் வருகை பெற்ற சுற்றுலாவிடங்களில் 89ஆவதாக இருந்தது.[6]

புவியியல்

டசுக்கனியைச் சுற்றியுள்ள மண்டலங்களாக வடக்கில் எமிலியா-ரோமாக்னா, வடமேற்கில் லிகுரியா, மேற்கில் டெர்ரினியன் கடல், கிழக்கில் உம்பிரியாவும் மார்க்கும், தென்கிழக்கில் லாசியோ உள்ளன. மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு மலைப்பாங்காகவும் நான்கில் ஒருபகுதி மலைகளாகவும் உள்ளது. மற்றவை ஆர்னோ ஆற்றின் பள்ளத்தாக்கில் சமவெளிகளாக உள்ளன.

பொருளியல்

டசுக்கனியின் வைன்கள் பரவலாக அறியப்பட்டவை. 120 இயற்கை உய்விடங்கள் உள்ளன. வேளாண்மையில் இங்குள்ள சியானினா மாடுகள் (குறிப்பாக அவற்றின் இறைச்சி "புளோரென்டினா") புகழ் பெற்றவை. ஆலிவ் எண்ணெய் தயாரிப்பும், குறிப்பாக லூக்காவிலிருந்து, முதன்மையானது.

சுற்றுலாப் பொருளாதாரமும் முதன்மையாக விளங்குகின்றது; "கலை நகரங்களான" புளோரன்சு, அரேசோ, லூக்கா, பீசா, சியன்னா, சான் கிமிக்னாடோ பல்லாயிரக்கணக்கான கலை இரசிகர்களை ஈர்க்கின்றன. தவிர கடலோர மகிழ்விடங்களும் எல்பாத் தீவுக் கடற்கரைகளும் கணிசமான வரவைப் பெறுகின்றன.

மக்கள்தொகையியல்

1980களிலும் 1990களிலும் இப்பகுதியில் வந்தேறிகளின் வருகை மிகக் கூடுதலாக இருந்தது. குறிப்பாக சீனாவிலிருந்தும் வட ஆபிரிக்காவிலிருந்தும் பலர் குடியேறினர். குறிப்பிடத்தக்க அளவில் பிரித்தானியரும் அமெரிக்கரும் குடி புகுந்துள்ளனர். 2006ஆம் ஆண்டில், இத்தாலிய தேசிய புள்ளியியல் கழகம் 215,490 வெளிநாட்டில் பிறந்த வந்தேறிகள் டக்சனியில் வசிப்பதாக மதிப்பிட்டுள்ளது. இது டசுக்கனியின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 5.9% ஆகும்.

டசுக்கனியில் 50,000 அல்லது கூடுதலாக மக்கள்தொகை உள்ள நகரங்கள்:

சமூகம்மக்கள்தொகை (2006 மதிப்.)
புளோரன்சு366,901
பிராட்டோ183,823
லிவொர்னொ160,534
அரேசோ95,229
பீசா87,737
பிஸ்டோயியா85,947
லூக்கா84,422
குரோசெட்டோ76,330
மாசா69,399
கராரா65,125
வியாரெஜியோ63,389
சியான்னா54,147

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டசுக்கனி&oldid=3930497" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை