டிசுக்கோக்சு

டிசுக்கோக்சு (Discogs, டிஸ்கோகிராபி என்பதன் சுருக்கம்) ஒலிப்பதிவுகளின் தகவல்களைக் குறித்த வலைத்தளமும் கூட்டவழி மூலம் பெறும் தரவுத்தளமும் ஆகும். இது வணிகமயமாக்கப்பட்டவை, மேலுயர்த்து வெளியீடுகள், வெளியிடப்படாத பாடல்கள், நிறுவனங்கள் வெளியிடாதவை என அனைத்து வகைகளையும் உள்ளிட்ட ஒலிப்பதிவுகளின் தகவல்களை ஒன்றுசேர்க்கிறது. டிசுக்கோக்சு வழங்கிகள், தற்போது discogs.com என்ற ஆள்களப் பெயரில் இயங்குகின்றது; இதன் உரிமையாளர் சிங்க் மீடியா நிறுவனமாகும். இவை ஐக்கிய அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரில் அமைந்துள்ளன. இந்த வலைத்தளம் அனைத்து வகை, அனைத்து வடிவ வெளியீடுகளையும் பட்டியல்படுத்துகிறது என்றாலும் மின்னணு இசை வெளியீடுகளின் தரவுத்தளமாக பெரிதும் அறியப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அளவில் வினைல் தட்டுக்களில் பதியப்பட்ட இசை குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. டிசுக்கோக்சு தற்போது 9 மில்லியனுக்கும் கூடுதலான வெளியீடுகள், 5 மில்லியனுக்கும் கூடுதலான கலைஞர்கள், ஒரு மில்லியனுக்கும் கூடிய இசைநிறுவனங்கள் குறித தகவல்களை கிட்டத்தட்ட 400,000 பயனர்களின் கணக்குகள் மூலம் சேகரித்துள்ளது. [3][4]

டிசுகோக்சு
வலைத்தள வகைஇசை
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம் (US), ஆங்கிலம் (UK), இடாய்ச்சு மொழி, எசுப்பானியம், இத்தாலிய மொழி, சப்பானிய மொழி, பிரெஞ்சு மொழி
உரிமையாளர்சிங்க் மீடியா, இன்க்.
உருவாக்கியவர்கெவின் லெவண்டோவ்ஸ்கி
துறைஇணையம்
சேவைதரவுத்தளம், வலைவழிக் கொள்முதல்
வருவாய்விளம்பரங்கள் (உள்நுழைகை-விளம்பரங்களை நீக்குகிறது), சந்தையிட விற்பனைக் கட்டணம்
வணிக நோக்கம்பகுதியும்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
பயனர்கள்346,000[1]
வெளியீடுநவம்பர் 2000; 23 ஆண்டுகளுக்கு முன்னர் (2000-11)
அலெக்சா நிலை 587 (உலகு: December 2017)[2]
தற்போதைய நிலைஇணையம்
உரலிdiscogs.com


மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டிசுக்கோக்சு&oldid=3458228" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை