தற்காப்புக் கலைகள்

தற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு.[1] சில தற்காப்புக் கலைகளின் வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்புக் கலைகள் தற்காப்பு விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. வேறு சில ஒரு நடன வடிவம் போலவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. தற்காப்புக் கலையில் ஈடுபடுபவர் தற்காப்புக் கலைஞர் எனப்படுவார்.[2]

மாறுபாடுகள் மற்றும் நோக்கங்கள்

தற்காப்பு கலைகளானது விதிமுறைகளைப் பொறுத்து பல்வேறு வகைகளாக கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன.

  • பாரம்பரிய அல்லது வரலாற்று கலைகள்: தற்காலத்திய பாணியிலான நாட்டுப்புற மல்யுத்தம் மற்றும் நவீன கலப்பின தற்காப்பு கலைகள்
  • கற்பிக்கப்படும் நுட்பங்கள்: ஆயுதம் பயன்படுத்தும் வகை, ஆயுதமற்ற வகை. (வாட்போர்த்திறம் கம்புச் சண்டை உள்ளிட்டவைகள்) எழுந்து நின்று சண்டையிடுதல் அமர்ந்திருந்து சண்டையிடுதல்
  • பயன்பாடு அல்லது நோக்கம்: தற்காப்பு, போர் விளையாட்டு, நடன வடிவங்கள்,சண்டை முறை வடிவங்கள், உடற் உடற்பயிற்சிகள், தியானம் போன்றவை.
  • சீன பாரம்பரிய விளைட்யாடுகள் : உள் விளையாட்டுகள் மற்றும் வெளி விளையாட்டுகள்

தொழில்நுட்பம் சார்ந்த நோக்கில்

ஆயுதமற்ற

ஆயுதமற்ற தற்காப்புக் கலைகளானது தாக்குதல், மல்யுத்தப் பிடித்தல் போன்ற பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.இவை பெரும்பாலும் கலப்பின தற்காப்புக் கலைகள் என்று விவரிக்கப்படுகிறது

தாக்குதல்

மல்லுக்கட்டு

தூக்கி வீசுதல்: ஹட்கிடோ, யுடோ, சுமோ மற்போர், மல்யுத்தம், அய்கிடோமூட்டுப் பிடி /கழுத்துப்பிடி / தாழ்பணிப்பிடி : யயுற்சு, பிரேசிலிய யியு-யிட்சு, சம்போகுத்து அல்லது அறைதல் தொழில்நுட்பங்கள்: யுடோ, மல்யுத்தம், அய்கிடோ

ஆயுதம் சார்ந்து

ஆயுதமேந்திய விளையாட்டுக் கலைகளை பயிற்றுவிக்கும் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் பெரும்பாலும் ஆயுதங்களின் பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கி உள்ளன. இத்தகைய மரபுகள் எஸ்கிரிமா, சில்ட், களரிப்பயிற்று, கோபுடோ மற்றும் வரலாற்று ஐரோப்பிய தற்காப்பு கலைகள், பெரும்பாலானவை செருமானிய மறுமலர்ச்சி காலத்தியவை ஆகும். பல சீன தற்காப்பு கலைகள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதக் கலைகளை கொண்டுள்ளன.

பயன்பாடு சார்ந்து

சண்டை சார்ந்து

சண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர்.

உடல்நலன் சார்ந்து

பல தற்காப்பு கலைகள், குறிப்பாக ஆசியாவிலிருந்து வந்த கலைகள், மருத்துவ பயிற்சிகளுக்கு பொருந்தக்கூடிய தற்காப்பு கலை துறைகளை கற்பிக்கிறார்கள். பாரம்பரிய ஆசிய தற்காப்பு கலைகளில் இது குறிப்பாகப் பரவிக்கானப்படகிறது. இது எலும்பு அமைப்பு, மூலிகை மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பிற அம்சங்களைக் கற்பிக்கும்

ஆன்மீகம் சார்ந்து

தற்காப்பு கலைகள் மதம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடையது. இக்கலைகளைக் கற்பிக்க துறவிகள் அல்லது கன்னியாஸ்திரிகளால் பல அமைப்புகள் நிறுவப்பட்டு அவை பரவலாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

ஆசியா முழுவதும், தியானம் பயிற்சியின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்து-பௌத்த தத்துவத்தால் ஆதிக்கமுள்ள இந்த ஆசிய நாடுகளில், கலை என்பது ஞானத்தை அடைவதற்கு உதவியாக பயன்படுத்தப்படுகிறது.

ஜப்பானிய பாணிகள் தற்காப்பு கலைகளானது போர் அல்லாத இயல்பான குணங்களைப் பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் மஹாயான பௌத்த தத்துவத்தால் வலுவாக பாதிக்கப்படுகின்றன. இத்தத்துவங்களால் "வெற்று மனம்" மற்றும் "தொடக்க மனம்" போன்ற கருத்துகள் திரும்பத் திரும்பத் தோன்றுகின்றன. உதாரணமாக, அய்கிடோ என்ற தற்காப்புக் கலை நிறுவனர் மோரிஹேய் உசிபாவினால் சிறந்த ஆற்றல் மற்றும் சமாதானத்தை வளர்ப்பதில் வலுவான தத்துவ நம்பிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.

பாரம்பரியமான கொரிய தற்காப்பு கலைகள் பயிற்சியாளரின் ஆன்மீக மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பெரும்பாலான கொரிய பாணி தற்காப்பு கலைகளான டைக்யுயோன் மற்றும் டைக்குவாண்டோ போன்றவற்றின் ஒரு பொதுவான கருத்து, பயிற்சியாளரின் "உள்ளார்ந்த அமைதி" மதிப்பாகும் பொருத்ததாகவும் இது தனிப்பட்ட தியானம் மற்றும் பயிற்சியின் மூலம் மட்டுமே அடையப்பட வேண்டியதாகவும் உள்ளது.

சிஸ்டெமா என்ற உருசிய தற்காப்புக் கலையில் மூச்சு மற்றும் தளர்வு உத்திகள் கையாளப்படுகிறது. அதே போல் உருசிய மரபுவழி சிந்தனை கூறுகள் சுய மனசாட்சி மற்றும் அமைதி வளர்ப்பதற்கும் மற்றும் பல்வேறு மட்டங்களில் உடல், உளவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நன்மைகளை பயிற்சியாளர் பெறுகிறார்.[3]

பல்வேறு கலாச்சாரங்களில் சில தற்காப்பு கலைகள் பல்வேறு காரணங்களுக்காக நடன வடிவிலான அமைப்புகளில் நடத்தப்படுகின்றன, போருக்குத் தயார்படுத்தப்படுதல் அல்லது போர் திறமையை சிறப்பான முறையில் காட்டுவதற்கும் தற்காப்பு கலைகள் இசை, குறிப்பாக வலுவான முரசு இசையை இணைத்து நிகழ்த்தப்படுகிறது.

தற்காப்புக் கலைகளின் வரலாறு

ஸ்பெயினில் கி.மு 10,000 மற்றும் 6,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பண்டைய குகை ஓவியங்களில் ஒருங்கமைக் குழுக்களால் வில் மற்றும் அம்புகளைக் கொண்டு சண்டையிடுவதைப் போன்று வரையப்பட்டுள்ளது.[4][5]

4000 ஆண்டுகளுக்கு முன்னர் சியா வம்சத்தின் போது சீன தற்காப்பு கலைகள் உருவாகின. இது மஞ்சள் பேரரசர் ஹுவாங்தி (கி.மு. 2698 ஆம் ஆண்டு) சீனாவில் ஆரம்பகட்ட தற்காப்புக் கலைகளை அறிமுகப்படுத்தினார். சீனத்தின் தலைவராவதற்கு முன்னர் இவர் மருத்துவம், வானியல் சாத்திரங்கள் மற்றும் தற்காப்புக் கலைகளில் நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளிட்டுள்ளார். இவரின் முன்னிய போட்டியாளரான சீ யூ ஜியாவோ என்ற தற்காப்பு கலையை உருவாக்கினார். இதுவே நவீன சீன மல்யுத்தத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது.

நவீன ஆசிய தற்காப்புக் கலைகளானது ஆரம்ப கால சீன மற்றும் இந்திய தற்காப்பு கலைகளின் கலப்பு ஆகும். சீன வரலாற்றின் போர் காலத்தில் (480-221 கி.மு.) போர் தத்துவத்தின் விரிவான வளர்ச்சி மற்றும் உத்திகள் வெளிப்பட்டதாக சன் சூ என்பவர் தனது போரின் கலை (The Art of War) (கி.மு. 350) என்ற நூலில் விவரிக்கிறார்.[6] 5 ஆம் நூற்றாண்டிக் முற்பகுதியில் இந்தியாவிலிருந்து புத்த மதத்தை பரப்புவதற்காக சீனத்திற்குச் சென்ற போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.[7][8][9] கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவில் தற்காப்புக் கலைகள் இருந்ததற்கான எழுதப்பட்ட சான்றுகள் சங்க இலக்கியங்களில் கானப்படுகின்றன.[10] சங்க காலத்தின் போர்க்கால நுட்பங்கள் களறிப்பயிற்றுக்கு முந்தைய முன்னோடிகளாக இருந்தன.[11]

ஐரோப்பாவின் ஆரம்பகால தற்காப்புக் கலை பாரம்பரியமானது பண்டைய கிரேக்கத்தைச் சாரந்து இருந்தன. குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் பாங்கிரேசன் ஆகியன பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இருந்தன. ரோமர்கள் மற்போர் மைதானங்களை பொதுமக்கள் பார்வைக்காக ஏற்படுத்தினர்.

மறைந்த தற்காப்பு கலைகளை புதுப்பித்தல்

தென்னிந்தியாவில் தோன்றிய பல தற்காப்பு கலைகள் பிரித்தானியப் பேரரசு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன.[12] அவற்றிலிருந்து களறிப்பயிற்று மற்றும் சிலம்பம் ஆகியவை அரிதாக எஞ்சியுள்ளன. இக்கலைகள் மற்றும் பிற தற்காப்பு கலைகள் நடனத்தின் ஒரு வடிவமாக பிரித்தானிய அரசிடம் எடுத்துக்கூறப்பட்டதன் மூலமாக தப்பிப் பிழைத்தன. முக்கிய தற்காப்புக் கலைகளுள் ஒன்றான வர்மக்கலை கிட்டத்தட்ட அழிந்த நிலைக்புச் சென்று பின்னர் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.[13]

உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நன்மைகள்

தற்காப்புக்கலை பயிற்சி பெறுபவருக்கு உடல், மன, மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும்.[14] தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சிகள் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு மேம்படுத்தப்படலாம். (வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு, இயக்கம் ஒருங்கிணைப்பு, முதலியன) இப்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்த செயல்பட தூண்டப்படுகிறது. உடல் பயிற்சிக்கு பங்களிப்பு செய்வதற்கு அப்பால், தற்காப்புக் கலை பயிற்சி மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்கு உதவுகிறது. இந்த காரணத்திற்காக, பல தற்காப்புக் கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன, சுய பாதுகாப்பு அல்லது போர்க்காலத்தின் வரலாற்று அம்சத்தை வலியுறுத்துகின்றன.

தற்காப்புக் கலைத் துறை

1970 களில் இருந்து தற்காப்புக் கலைகள் ஒரு குறிப்பிடத்தக்க தொழிற்துறையாக மாறியுள்ளன. பரந்த விளையாட்டுத் தொழிலின் (சினிமா மற்றும் விளையாட்டுத் தொலைக்காட்சி உட்பட) ஒரு துணைக்குழுவாக தற்காப்புக் கலை வளர்ந்து வருகின்றன.உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தற்காப்பு கலை வடிவங்களைப் பயன்படுத்துகின்றனர். வெப் ஜப்பான் (web Japan) (ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது) என்ற சப்பானிய இணையதளமானது உலகளவில் 50 மில்லியன் கராத்தே பயிற்சியாளர்கள் உள்ளனர் என்று கூறுகிறது.[15] 2009 ஆம் ஆண்டைய நிலவரப்படி தென் கொரிய அரசாங்கம் 190 நாடுகளில் 70 மில்லியன் மக்கள் டைக்குவாண்டோ கலையை பயின்று வருவதாக மதிப்பிட்டுள்ளது.[16] ஐக்கிய மாகானத்திற்று அனுப்பப்பட்ட தற்காப்பு கலை தொடர்பான விளையாட்டு உபகரணங்களின் மொத்த மதிப்பு 2007 ஆம் ஆண்டில் 314 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கலைகளில் 6 வயதிற்க மேற்பட்ட 6.9 மில்லியன் (அமெரிக்க மக்கள் தொகையில் 2 சதவீதம்) மக்கள் ஈடுபட்டுள்ளனர்.[17]

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Martial arts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தற்காப்புக்_கலைகள்&oldid=3896048" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை