திருக்குடும்பப் பரிகாரக் கோயிலும் பசிலிக்காவும்

திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம் (சக்ராடா பமீலியா, Basílica i Temple Expiatori de la Sagrada Família) என்பது எசுப்பானியாவின், காத்தலோனியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதுவே பார்சிலோனாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கத்தோலிக்க ஆலயம் ஆகும். காத்தலன் கட்டிட வடிவமைப்பாளர் அந்தோனி கோடியினால் (1852–1926) இவ்வாலயம் வடிவமைக்கப்பட்டது. இது கட்டிமுடிக்கப்படும் முன்னரே இதனை யுனெஸ்கோ, உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது.[3] இப்பேராலயம் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்கால் இளம் பேராளயமாக நேர்ந்தளிக்கப்பட்டது.[4][5][6] இது எசுப்பானியாவின் பன்னிரெண்டு புதையல்களில் ஒன்றாகும்.

திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம்
Sagrada Família
Basílica i Temple Expiatori de la Sagrada Família
Basilica and Expiatory Church of the Holy Family
முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பார்சிலோனா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்41°24′13″N 2°10′28″E / 41.40361°N 2.17444°E / 41.40361; 2.17444
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
மாவட்டம்பார்சிலோனியத் திருச்சபை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுநவம்பர் 7, 2010
நிலைMinor basilica
செயற்பாட்டு நிலைஇயக்கத்தில்/முழுமை பெறவில்லை
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1969, 1984
தலைமைபேராயர், லூயிஸ் மார்ட்டினெஸ் சிஸ்டாக்
இணையத்
தளம்
www.sagradafamilia.cat
Official name: அந்தோனி கௌடியின் படைப்புகள்
வகை:கலாச்சார
வரையறைகள்:i, ii, iv
கொடுக்கப்பட்ட நாள்:1984[1]
மேற்கோள் எண்.320bis
State Party:எசுப்பானியம்
பகுதி:ஐரோப்பா, வட அமெரிக்கா
Spanish Cultural Heritage
Official name: Templo Expiatorio de la Sagrada Familia
Type:நினைவுச் சின்னம்
Designated:24-07-1969
Reference No.(R.I.)-51-0003813-00000[2]

கோடி தன்னுடைய இறப்புவரை இவ்வாலயத்திற்காகவே தன்னுடைய நேரங்களைச் செலவிட்டார், எனினும் அவரது இறந்த ஆண்டான 1926 ஆம் ஆண்டன்று ஆலயத்தின் காற்பங்கு கூட கட்டி முடிக்கப்படவில்லை.[7] கோடியின் இறப்புக்குப் பின் பேராலயத்தின் கட்டுமானப்பணிகள் மிகவும் மெதுவாக நடந்தன. எசுப்பானிய உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 1950 ஆம் ஆண்டுகளில் மீண்டும் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2010 ஆண்டு வரை பாதிக்கும் மேலாக கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு நேர்ந்தளிக்கப்பட்டது, எனினும் கோடியின் நூற்றாண்டு நினைவு தினமன்றே அதாவது 2026 ஆம் ஆண்டிலேயே இது முழுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sagrada Família
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
வெளி ஒளிதங்கள்
Gaudí, Sagrada Família, Smarthistory
Finalization of the Interior (in Catalan), Temple Sagrada Família
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை