தேவன் நாயர்

தேவன் நாயர் என்று அழைக்கப்படும் தேவன் நாயர் செங்கர வெட்டில் (ஆங்கிலம்: Devan Nair அல்லது Chengara Veetil Devan Nair; மலாய்: Devan Nair; மலையாளம்: ദേവൻ നായർ ചെങ്ങറ വീട്ടിൽ; சீனம்: 琴加拉·维蒂尔·德万·奈尔); என்பவர் மூன்றாவது சிங்கப்பூர் அதிபர்; மற்றும் மலேசிய சிங்கப்பூர் அரசியல்வாதியும் ஆவார்.

மேதகு
தேவன் நாயர்
Devan Nair
சிங்கப்பூரின் 3-ஆவது அதிபர்
பதவியில்
23 அக்டோபர் 1981 – 28 மார்ச் 1985
பிரதமர்லீ குவான் யூ
முன்னையவர்பெஞ்சமின் சியர்ஸ்
பின்னவர்வீ கிம் வீ
முக்கிய பதவிகள்
பொது செயலாளர்
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், மலேசியா
பதவியில்
1970–1979
முன்னையவர்சியா முய் கோக்
பின்னவர்லிம் சி ஓன்
பதவியில்
1961–1965
பின்னவர்ஸ்டீவ் நாயகம்
1வது பொதுச் செயலாளர்
ஜனநாயக செயல் கட்சி
பதவியில்
11 அக்டோபர் 1965 – 30 ஜூலை 1967
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்கோ கோக் குவான்
பொதுச் செயலாளர்
மக்கள் செயல் கட்சி
பதவியில்
14 ஆகஸ்டு 1965 – 9 செப்டம்பர் 1965
முன்னையவர்லீ குவான் யூ
பின்னவர்பதவி முற்று பெற்றது
சிங்கப்பூர் நாடாளுமன்றம்
for ஆன்சன், சிங்கப்பூர்
பதவியில்
10 பிப்ரவரி 1979 – 13 அக்டோபர் 1981
முன்னையவர்பி. கோவிந்தசாமி
பின்னவர்ஜெயரத்தினம்
மலேசியர் நாடாளுமன்றம்
for பங்சார், மலேசியா
பதவியில்
18 மே 1964 – 20 மார்ச் 1969
முன்னையவர்வி. டேவிட்
பின்னவர்கோ கோக் குவான்
தனிநபர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தேவன் நாயர் செங்கர வெட்டில்

(1923-08-05)5 ஆகத்து 1923
ஜாசின், மலாக்கா, நீரிணை குடியேற்றங்கள்
இறப்பு6 திசம்பர் 2005(2005-12-06) (அகவை 82)
ஹாமில்டன், கனடா
காரணம் of deathமறதிநோய்
இளைப்பாறுமிடம்ஹாமில்டன், கனடா[1]
அரசியல் கட்சிசுயேச்சை
(1981–1985)
பிற அரசியல்
தொடர்புகள்
மக்கள் செயல் கட்சி (1957–1965, 1979–1981)
ஜனநாயக செயல் கட்சி (1965–1967)
மலாயா கம்யூனிஸ்டு கட்சி
(1950)
துணைவர்ஆவடை தனம் லட்சுமி
பிள்ளைகள்4
முன்னாள் கல்லூரிவிக்டோரியா பள்ளி, சிங்லாப், சிங்கப்பூர்
தொழில்தொழிலாளர் சங்கவாதி

இவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், 1981-ஆம் ஆண்டில் இருந்து 1985-ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூரின் அதிபராகப் பதவி வகித்தவர்.[2]

சிங்கப்பூரின் அதிபராக இருந்த பெஞ்சமின் சியர்ஸ் (Benjamin Sheares) மரணத்திற்குப் பிறகு, தேவன் நாயர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தால் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981 அக்டோபர் 23-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்றார். இருப்பினும் 1985 மார்ச் 28-ஆம் தேதி, தெளிவற்ற சூழ்நிலையின் காரணமாக இவர் தன் அதிபர் பதவியைத் துறப்பு செய்தார்.[3]

பொது

தேவன் நாயர் 1979-ஆம் ஆண்டில் இருந்து 1981-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் அன்சன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக (Member of Parliament for Anson, Singapore) இருந்தவர். தவிர 1964-ஆம் ஆண்டில் இருந்து 1969-ஆம் ஆண்டு வரை மலேசியா, சிலாங்கூர், பங்சார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.[4]

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தால் சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன்னர், 1965-ஆம் ஆண்டில் மலேசியாவின் மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (Secretary-General of the Malaysian People's Action Party); 1967-ஆம் ஆண்டில் ஜனநாயக செயல் கட்சியின் முதல் பொதுச் செயலாளராகவும் (Secretary-General of the Democratic Party) இருந்தவர்.[4]

வாழ்க்கை வரலாறு

தேவன் நாயர், 1923 ஆகஸ்டு 5-ஆம் தேதி மலாக்கா, ஜாசின் பகுதியில் பிறந்தவர். இவர் மலாக்காவில் ஒரு ரப்பர் தோட்டத்தில் அலுவலராகப் பணிபுரிந்த கருணாகரன் நாயர் (Illathu Veettil Karunakaran Nair) என்பவரின் மகனாவார். கருணாகரன் நாயர், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள தலச்சேரி எனும் பகுதியில் இருந்து மலாயாவில் குடியேறியவர்.

காலனித்துவ ஆட்சியின் மீது வெறுப்பு

முதலாம் உலகப் போரின் போது அவரின் குடும்பத்தாரும் ஜொகூர், தங்காக் பகுதியில் வாழ்ந்தனர். அவருக்கு 10 வயதாக இருந்தபோது அவரின் குடும்பத்தினர், சிங்கப்பூக்கு குடிபெயர்ந்தனர்.[5]

அவர் ரங்கூன் ரோடு ஆரம்பப் பள்ளியில் (Rangoon Road Primary School) தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் விக்டோரியா பள்ளியில் (Victoria School) தன் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். அதன் பின்னர் 1940-ஆம் ஆண்டில் சீனியர் கேம்பிரிட்ஜ் (Senior Cambridge) தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அந்தக் காலக் கட்டத்தில், காலனித்துவ ஆட்சியின் மீதான அவரின் வெறுப்பை வெளிப்படையாகவே காட்டினார். ஒரு பள்ளி பாடல் நிகழ்ச்சியில் பிரித்தானியாவின் (Rule Britannia) பாடல் வரிகளை பிரித்தானிய எதிர்ப்புப் பாடலாக மாற்றிப் பாடி உள்ளார். அதே வேளையில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டார், அதற்காக அவர் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.[5]

பயிற்சி பெற்ற ஆசிரியர்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தேவன் நாயர் பயிற்சி பெற்ற ஆசிரியரானார். சிங்கப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளியிலும் (Singapore St Joseph's Institution); பின்னர், செயிண்ட் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப் பள்ளியிலும் (Saint Andrew's Secondary School) கற்பித்தார். 1949-இல் சிங்கப்பூர் ஆசிரியர் சங்கத்தின் (Singapore Teachers' Union) பொதுச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றார்.[6]

1950-களில் தேவன் நாயர், பிரித்தானிய எதிர்ப்பு கம்யூனிஸ்டு அமைப்பின் (Communist Anti-British League) உறுப்பினரானார். 1951-இல் காலனித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.

மீண்டும் கைது

1954-இல் லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்தார். 1955-இல், சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி கண்டார். 1956-இல், சிங்கப்பூரில் சீன நடுநிலைப் பள்ளிக் கலவரங்கள் (Singapore Chinese Middle School Riots) நடைபெற்றன.

பிறகு கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட தொழிற்சங்கவாதிகளான லிம் சின் சியோங் (Lim Chin Siong); ஜேம்ஸ் புதுச்சேரி (James Puthucheary) ஆகியோருடன் தேவன் நாயர் அவர்களும் பொதுப் பாதுகாப்பு ஆணையைப் பாதுகாக்கும் சட்டத்தின் (Preservation of Public Security Ordinance Act) கீழ் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டார்.[7]

கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளர்

1959-இல் நடைபெற்ற தேர்தலில் மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதன் விளைவாக தேவன் நாயர் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து மீண்டும் ஆசிரியர் பணிக்கு வந்தார்.[8]

1960-இல், அவர் சிறைச்சாலைகள் விசாரணை ஆணையத்தின் (Prisons Inquiry Commission) தலைவரானார். அதன் பின்னர் வயது முதிர்ந்தோர் கல்வி வாரியத்தை (Adult Education Board) தொடங்கினார்.[8] 1961-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (National Trades Union Congress அல்லது Singapore National Trades Union Congress - SNTUC) எனும் தொழிற்சங்கத்தை அமைத்தார்.[9]

பங்சார் தொகுதி

1964-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் கோலாலம்பூர் மாநகருக்கு அருகில் இருக்கும் பங்சார் தொகுதியில், சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியின் சார்பில் தேவன் நாயர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சியின் ஒரே உறுப்பினர் இவரே ஆகும். தேர்தலில் நின்ற பெரும்பாலான மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் தோல்வி கண்டனர்.

ஜனநாயக செயல் கட்சி தோற்றம்

தேவன் நாயர் உருவாக்கிய மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சி.

இந்தத் தேர்தல் முடிவு, அவரின் 1955-ஆம் ஆண்டு மலேசியத் தேர்தல் தோல்வியுடன் பெரிதும் முரண்பட்டது. சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு அவர் சிங்கப்பூருக்குச் செல்லவில்லை. மாறாக மலேசியாவிலேயே தங்கி இருந்தார். பின்னர் அவர் 1961-ஆம் ஆண்டில் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியை உருவாக்கினார்.[10]

தேவன் நாயர் உருவாக்கிய இந்த ஜனநாயக செயல் கட்சி தான், இப்போது மலேசியாவின் தலையாய எதிர்க் கட்சியாக விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றத்தில் 42 இடங்களைக் கொண்டுள்ளது.[11]

பி.பி. நாராயணன்

இவருடன் இணைந்து மற்றொரு மலேசியத் தொழிற்சங்கச் செயல்பாட்டாளரான பி.பி. நாராயணன் (P.P. Narayanan) அவர்களும்; வளரும் நாடுகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கினார்கள்.

வளர்ந்துவிட்ட தொழில்மயமான நாடுகள்; வளரும் நாடுகளுக்குப் பொருளாதாரச் சமூக உதவிகளை வழங்க வேண்டும் என அனைத்துலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (International Confederation of Free Trade Unions) மாநாடுகளில் தங்களின் கருத்துகளை முன் வைத்தார்கள்.[12]

இவர்கள் இருவருமே மலேசியா; சிங்கப்பூர் நாடுகளின் வறுமை, வேலையின்மை மற்றும் வளர்ச்சியின்மை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினார்கள். இவர்களின் முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பின்னர் காலத்தில், அவர்களின் அந்த முன்மொழிவுகளை, அனைத்துலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவினர் (ICFTU's Economic and Social Committee) கட்டம் கட்டமாகச் செயல்படுத்தினர்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில்

1970-ஆம் ஆண்டு அவர் சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கனவே அவர் அமைத்துக் கொடுத்த சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1979-ஆம் ஆண்டு சிங்கப்பூர் அன்சன் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் காலடி வைத்தார்.

1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அதே அன்சன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும் 1981-ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் அதிபர் பதவியை ஏற்றுக் கொள்வதற்காக அன்சன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.[13]

ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம்

தேவன் நாயர் நாடாளுமன்றத்தில் இருந்து விலகியதால், அன்சன் நாடாளுமன்றத் தொகுதியில் ஓர் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் (Joshua Benjamin Jeyaretnam) 51.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சிங்கப்பூரில் ஓர் எதிர்க்கட்சி வெற்றி பெறுவது அதுவே முதல்முறையாகும்.[14].

ஜெயரத்தினம் அவர்கள், சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதலாவது எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவார். சிங்கப்பூரின் முதலாவது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில், ஆளும் மக்கள் செயல் கட்சி (பி.ஏ.பி) அனுபவித்து வந்த ஏகபோகத்தை உடைத்து எறிந்தார்.

பதவி துறப்பு

28 மார்ச் 1985-இல், தேவன் நாயர் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து துணைப் பிரதமர் கோ சோக் தோங் (Goh Chok Tong) நாடாளுமன்றத்தில் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். அதில் தேவன் நாயர், தம்முடைய மதுப்பழக்கத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ராஜினாமா செய்தார் என்று கூறினார், அந்தக் குற்றச்சாட்டை தேவன் நாயர் கடுமையாக மறுத்தார்.[3][15]

தேவன் நாயரின் எதிர்க் கூற்றின்படி, அவர்களின் அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும்; அவற்றின் அழுத்தங்களின் காரணமாக, தான் அதிபர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது. ஒரு சதுரங்க விளையாட்டின் போது, தேவன் நாயரை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றி விடுவதாக கோ சோக் தோங் மிரட்டியதாகவும் தேவன் நாயர் கூறினார்.

தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய வதந்திகள்

தன்னைத் திசை திருப்பும் வகையில் தனக்குப் போதைப் பொருள் ஊட்டப் பட்டதாகவும்; தன்னை இழிவுபடுத்தும் முயற்சியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகள் பரப்பப் பட்டதாகவும் தேவன் நாயர் குற்றம் சாட்டினார்.

1999-இல், கனடாவின் தி குளோப் அண்ட் மெயில் (The Globe and Mail) எனும் செய்தித்தாளில் இதைப் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. அதுவே தேவன் நாயர் மீது கோ சோக் தோங் அவதூறு வழக்கு தொடர்வதற்கும் வழிவகுத்தது. அந்த அவதூறு வழக்கிற்கு எதிராக தேவன் நாயர் எதிர்வாத வழக்கைத் தொடர்ந்தார். அதன்பிறகு இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் காணப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது.[16][17]

அதிபர் பதவிக்குப் பின்னர்

தேவன் நாயர் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, 1988-ஆம் ஆண்டில், தன் மனைவியுடன் முதலில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர்கள் மெரிலாந்தில் உள்ள கெய்தர்ஸ்பர்க்கில் (Gaithersburg, Maryland) குடியேறினார்கள்.

பின்னர் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டனுக்கு (Hamilton, Ontario, Canada) குடிபெயர்ந்தார்கள். அவர்கள் தங்களின் இறுதிநாட்கள் முழுவதும் அங்குதான் வாழ்ந்தார்கள்.[18]

அவரின் மனைவி ஆவடை தனம் லட்சுமி (Avadai Dhanam Lakshimi) 18 ஏப்ரல் 2005-இல் கனடா ஹாமில்டன் நகரில் காலமானார். அதே நேரத்தில் கடுமையான மறதிநோயினால் பாதிக்கப்பட்ட தேவன் நாயர் அவர்கள், அதே 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, மனைவி மறைந்த அதே ஹாமில்டன் நகரில் காலமானார்.[19]

தேவன் நாயர் தொழில் கல்வி நிலையம்

சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் அமைந்துள்ள தேவன் நாயர் தொழில் பணித் தகுதியாக்க கல்வி நிலையம் எனும் கல்வி நிலையத்தை (Devan Nair Institute for Employment and Employabilit), பிரதமர் லீ சியன் லூங், 2014 மே 1-ஆம் தேதி திறந்து வைத்தார்.

தேவன் நாயர் அவர்கள், சிங்கப்பூரின் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்தபோது, தொழிலாளர் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அந்தக் கல்வி நிலையம் திறக்கப்பட்டது.

குடும்பம்

தேவன் நாயருக்கு ஒரு மகள்; மூன்று மகன்கள்; மற்றும் ஐந்து பேரப் பிள்ளைகள் உள்ளனர். அவரின் மூத்த மகன் ஜனதாஸ் தேவன் (Janadas Devan). சிங்கப்பூர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The Straits Times) நாளிதழின் மூத்த ஆசிரியராக இருந்தார்.

தற்போது சிங்கப்பூரின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தில் அரசாங்கத் தகவல் தொடர்புத் தலைவராக உள்ளார். சிங்கப்பூர் அரசுதுறை பொதுக் கொள்கை இயக்கத்தில் (Institute of Policy Studies Singapore) இயக்குநராகவும் உள்ளார். இவர் சிங்கப்பூர் இலக்கியவாதி ஜெரால்டின் எங் (Geraldine Heng) என்பவரைத் திருமணம் செய்து உள்ளார். மணந்தார்.

விஜய குமாரி தேவன்

இரண்டாவது மகன் ஜனமித்ரா தேவன் (Janamitra Devan). அனைத்துலக நிதிக் கழகம் மற்றும் உலக வங்கியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். மூன்றாவது மகன், ஜனபிரகாஷ் தேவன் (Janaprakash Devan). 2009-இல் காலமானார். அவரின் ஒரே மகள், விஜய குமாரி தேவன் (Vijaya Kumari Devan). கனடா, ஒன்டாரியோ, ஹாமில்டன் நகரில் தொடர்ந்து வசிக்கிறார்.[20][21]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தேவன்_நாயர்&oldid=3663191" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை